خطوة إلى عالم لا حدود له من القصص
الخيال العلمي
காலை நேரம் அடுப்படியில் பரபரப்பாக இருந்தாள் காந்திமதி. சமையல் ரெடியாகிவிட்டது. இன்னும் இட்லி, தக்காளி சட்னி செய்ய வேண்டும். வேலைக்கு போகும் கணவர், மகனுக்கு ஒன்பது மணிக்குள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும். இன்னும் ரிடையர்ட் ஆக ஆறு மாதமே இருக்கும் சாரங்கனுக்கு அரசு உத்தியோகம். தயாளன் சாப்ட்வேர் இஞ்சினியராக, பெரிய நிறுவனம் ஒன்றில், கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். மகள் சுகுணாவுக்கும் இஞ்சினியர் மாப்பிள்ளை அமைய, சீர், நகையென்று தாராளமாக செய்து இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் முடித்தாள். மகளுக்கு கொடுத்த வரதட்சணையை, தயாளன் மூலம் திரும்பவும் வசூலித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தாள் காந்திமதி. பெரிய இடத்திலிருந்தெல்லாம் வரன்கள் வந்து கொண்டிருக்க தயாளன் கல்யாண பேச்சை எடுத்தாலே பிடிக்கொடுக்காமல் இருந்தான். “என்னம்மா சாப்பிடலாமா” “ஆச்சுப்பா... அப்பாவையும் கூப்பிடு” இருவரும் சாப்பிட அமர, பரிமாறியபடி மெல்ல பேச்சை ஆரம்பித்தாள். “தயாளா... என்னப்பா... அந்த சேலம் பெண்... படிச்சவளா... உனக்கேத்தவளா இருக்கா... என்னப்பா சொல்ற... எனக்கும், அப்பாவுக்கும் பிடிச்சிருக்கு பார்க்கலாமா...?” “இல்லம்மா... வேண்டாம்“இப்படி... எது சொன்னாலும் தட்டி கழிச்சுட்டுபோனா என்ன அர்த்தம்? அப்பாவும் இன்னும் ஆறுமாசத்தில் ரிடையர்ட் ஆகப் போறாரு. உன் கல்யாணத்தை நல்லவிதமாக முடிச்சா எங்க கடமை முடியும்.’’ ‘‘அப்ப, என் மனசுக்கு பிடிச்சவளை... கல்யாணம் பண்ணி கொடுங்க...” சாப்பிட்டு கொண்டிருந்த சாரங்கன் நிமிர்ந்து தயாளனை பார்க்க, “என்னப்பா சொல்றே” “ஆமாம்மா... நான் என்னோடு வேலை பார்க்கிற பெண்ணை விரும்பறேன். அப்பா இல்லாதவ... அம்மா மட்டும்தான். பெரிசா சொல்லிக்கிற மாதிரி எந்த வசதியும் இல்லை” திகைத்து போய் மகனை பார்க்கிறாள். “இது நமக்கு ஒத்து வருமா? உன் அழகுக்கும், தகுதிக்கும் எத்தனையோ கோடிஸ்வரங்க வீட்டிலிருந்து பெண் வரும். நீ என்ன... இப்படி... எந்த தகுதியும் இல்லாதவளை கட்டிக்கிறேன்னு சொல்றே” “அப்ப பணம்தான் நீ எதிர்பார்க்கிற தகுதியா?” “அப்படி இல்லை. பணமும் ஒரு தகுதி. நல்ல இடம். பெயர் சொல்ற மாதிரி நல்ல சம்பந்தமாக உனக்கு அமையணும்னு நாங்க விரும்பறோம்.’’ சாரங்கன் சொல்ல, “நான் அப்படி நினைக்கலை மனசுக்கு பிடிச்சவளோடு வாழணும்ங்கிறதுதான் என் ஆசை. நீங்களும், அம்மாவும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எனக்கு லேட்டாச்சு... நான் கிளம்பறேன்.” மதிய சாப்பாடு... லஞ்ச்பாக்கில் - வைத்ததை கூட - எடுத்துக் கொள்ளாமல் பைக்கை ஸ்டார்ட் பண்ணி வேகமாக கிளம்புகிறான். “என்னங்க இது... இப்படியொரு குண்டை தூக்கி போட்டுட்டுபோறான். இதுக்குத்தான் இத்தனை நாள் தள்ளி போட்டுட்டு இருந்தானா.?” “இங்கே பாரு வளர்த்து ஆளாக்கிட்டோம். நம்ப வேலை முடிஞ்சுது. அவங்க வாழ்க்கையை அவங்க தீர்மானம் பண்றாங்கன்னு... போக வேண்டியதுதான்” “என்னங்க இப்படி சொல்றீங்க”பின்னே என்ன பண்ண சொல்ற. எனக்கும்தான் எரிச்சலாக வருது. நமக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிப் பாரு அவன்கிட்டேயிருந்து என்ன பதில் வருதுன்னு. ஏற்கனவே கோர்ட், கேஸ்னு அலைஞ்சுட்டு இருக்கேன். அதுவே மாசக்கணக்கில் இழுத்துட்டு இருக்கு. இதில் இவன் பிரச்சனை வேறு...”
© 2024 Pocket Books (كتاب ): 6610000531400
تاريخ الإصدار
كتاب : 12 فبراير 2024
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة