خطوة إلى عالم لا حدود له من القصص
الرواية
துர்க்கை அம்மனின் முன் விளக்கேற்றி நைவேத்திய பொங்கல் எதிரில் இருக்கிறது. பிராத்தனையில் ஈடுபட்ட நந்தினியின் உதடுகள் ஸ்லோகங்களை முனுமுனுக்கிறது. துர்கே ஸ்ம்ருதா கரபிதீதி அசேஷ ஜந்தோ ஸ்வஸ்தை ஸ்த்ருதா மதிமதீப ஸுபாம் ததாஸி தாரித்ர்ய துக்க பயஹாரிணி காத்வதன்யா சர்வோபகார கரணாய சதா ஆர்த்ர சித்தா... தீபம் காட்டி... கண்களில் ஒற்றிக் கொள்கிறாள். பூஜை அறையை விட்டு வெளியே வந்தவள், சோபாவில் புன்முறுவலுடன் பரத் உட்கார்ந்திருப்பதை பார்க்க. “நீ எப்ப வந்தே பரத்.’’ “நீ மனசுருகி ஸ்லோகம் சொன்னியே அப்பவே வந்துட்டேன்மா... சாமி கும்பிடற அது தெரியுது... ஆனா அந்த ஸ்லோகத்திற்கான அர்த்தம் மட்டும் தெரியலை.” “நீ துர்க்கையை நினைத்தாலே போதும் அனைத்து உயிர்களின் பயத்தை போக்கி, அபயகரம் நீட்டி, அன்போடு நம்மை காத்து நிற்பாள். இது தாம்பா அதன் அர்த்தம்.” மகன் அருகில் உட்கார்ந்தாள். “எப்படிம்மா... எல்லாமே தெரிஞ்சு வச்சுருக்கே.’’ “இல்லை பரத், நான் தெரிஞ்சுக்கிட்டது கொஞ்சம் தான். என் அப்பாவுக்கு தெய்வபக்தி அதிகம். தினமும் ஒரு மணி நேரம் மனம் லயித்து சாமி கும்பிடுவார்.“அவர் மூலம் தெரிஞ்சுக்கிட்டது தான்... அதுசரி இன்னைக்கு என்ன சீக்கிரம் வந்துட்டே.” “பாங்க் வேலையா கஸ்டமரை பார்க்க போனேன். போன வேலை முடிஞ்சுது. பாங்குக்கு போன் பண்ணி சொல்லிட்டு வந்துட்டேன்.” “காபி போட்டு கொண்டு வரட்டுமா.” “வேண்டாம்மா... இன்னைக்கு நிறைய காபி சாப்பிட்டுட்டேன் நைட் டின்னர் மட்டும் போதும்.” “பரத்... அப்பாவோட திதி அடுத்த வாரம் வருதுப்பா.” “ஞாபகம் இருக்குமா. வழக்கம் போல புரோகிதரை பார்த்து சொல்லிடவா…” “ஆமாம்பா... நாலு வருஷமாச்சு அப்பா நம்மை விட்டு போயி... அந்த நல்ல மனிதரோடு வாழ்ந்த நாட்கள் பசுமை மாறாமல் மனசில் நிறைச்சிருக்கு.” நந்தினியின் குரலில் நெகிழ்வு. பரத்தின் மனதிலும் அப்பாவின் ஞாபகங்கள். ஆமாம்மா அப்பா ஒரு ஜெம் அவரை போல் அனுசரிச்சு போகும் மனிதரை பார்க்க முடியாது. “ஒரு தந்தையாக மட்டுமில்லாமல், ஒரு நண்பனாக என் கை பிடிச்சு, என்னோடு வந்தவர்.” ‘‘அம்மாகிட்டே நான் பகிர்ந்துக்க முடியாத விஷயத்தை அப்பாகிட்டே பகிர்ந்துக்கணும்னு மனசு துடிக்குது. ஆனா அவர் இல்லையே.” “அப்பா அளவுக்கு அம்மா நெருக்கம் இல்லை. அப்படிதானே பாத்” “உன்கிட்டே சொல்லாமலா... நேரம் வரும்போது சொல்றேன்மா சரி, இன்னைக்கு என்ன டிபன்.” பேச்சை மாற்ற. “உனக்கு பிடிச்ச இடியாப்பம், குருமா” “வெரிகுட்” அம்மாவை பார்த்து சிரிக்கிறான்அழகாக பூத்து குலுங்கும் குரோட்டன்ஸ் செடிகள். கச்சிதமாக வெட்டப்பட்டு காட்சிதரும் மயிலிறகு செடிகள் நடைபாதை, நீருற்று என்று அந்த இடமே ரம்மியமாக காட்சியளிக்கிறது. சுற்றிலும் அடர்ந்து நின்ற மரங்களுக்கிடையே இருந்த பெஞ்சில் பரத்துடன் உட்கார்ந்திருந்தாள் அனு. “இன்னைக்கு பீச் போகலாம்னு சொன்னேன். நீ தான் ‘பார்க்’ன்னு டிஸைட் பண்ணிட்டே... சுண்டலை கொறிச்சுட்டு, கடல் அலையை வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கலாம்.” “இங்கே இருக்கிற பாதுகாப்பு அங்கே இருக்காது பரத்” “ஏன்... யாராவது பார்த்திடுவாங்கன்னு பயப்படறியா.” “என் ஆபீஸ் ப்ரெண்ட்ஸ் பார்த்தா... தேவையில்லாமல் வம்பு.’’ “அடடா… இப்படி பயந்தாங்கொள்ளியா இருக்கியே.” “பார்த்தால் தான் என்ன என் லவ்வர்... இவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தைரியமா சொல்லு.” ‘‘ஓ... அப்படியா... அப்ப சார் முதலில் என்னை உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போயி... அம்மாகிட்டே, இவதான்மா... நான் கட்டிக்க போறவள்னு அறிகமுபடுத்துங்களே பார்ப்போம்.’ “கொஞ்ச நாள் ஜாலியா காதலர்களாக சுத்துவோம்னு பார்த்தேன். இப்ப உன்னை அம்மாகிட்டே கூட்டிட்டு போனா அடுத்து கல்யாண பேச்சுதான்.” “நான் ஒண்ணும் உன்னை மாதிரி கோழை இல்லை. உன்னை விரட்டி, விரட்டி காதலிச்சவன்.” சரி புறப்படு போகலாம்
© 2024 Pocket Books (كتاب إلكتروني): 6610000531318
تاريخ النشر
كتاب إلكتروني: 12 فبراير 2024
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$9.99 /شهر
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$83.88 /سنة
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة
