خطوة إلى عالم لا حدود له من القصص
காரிலிருந்து இறங்கி, ஓவர் கோட்டினால் தன்னை நன்றாக மூடியபடி, கையில் பார்சலுடன் உள்ளே வரும் மடோனாவை எதிர்கொண்டு வரவற்கிறான் பிரெடரிக். அமெரிக்கா வழக்கப்படி, அவனை தழுவி நெற்றியில் முத்தமிடுகிறாள். தளர்ந்த கைகளால் அவன் தலையில் கை வைத்து, “நல்லா இரு பிரெடரிக்” “என் அருமை மகள் எங்கே காணும்.” “மாடி அறையில் பெட்டியை ‘பாக்’ பண்ணிட்டு இருக்காம்மா. இருங்க கூப்பிடறேன்”. “வேண்டாம் பிரெடரிக் நானே போய் பார்க்கிறேன்.” கார்பெட் போடப்பட்ட மரப்படிக்கட்டில் சப்தமிட நடக்கிறாள். பெட்டியை திறந்து வைத்து எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த எல்சா, அம்மாவை பார்த்ததும், அதை அப்படியே போட்டுவிட்டு, ஓடி வந்து அவளை தழுவிக் கொள்கிறாள். “அம்மா, இந்த ஸ்நோவில் டிரைவ் பண்ணிட்டு வர, இன்னும் லோட்டாகும்னு நினைச்சேன். சீக்கிரமாக வந்துட்டியே” “என் மகளை பார்க்க போகிறேன் என்ற எண்ணமே என்னை சீக்கிரம் இங்கே கொண்டு வந்து சேர்த்துடுச்சு எல்சா.” அம்மாவை பார்க்கிறாள் எல்சா. பிரெட்ரிக்கை விட இன்னும் கூடுதலான ரோஜா நிறம். வெளிறிய தலைமுடி, வயதின் காரணமாக கண்கள் குழிவிழுந்திருந்தாலும், தீட்சண்யமான பார்வைமுதுகு லேசாக கூன் விழுந்து விட்டது. பேண்ட், சட்டை அணிந்து, அதன்மேல் குளிருக்கு வெல்வெட் அணிந்திருந்தாள். அமெரிக்கா பிரஜை என்பது அவளை பார்த்தாலே தெரிந்தது. “இந்தா உனக்கு பிடிக்குமென்று வழியில் “காஸ்கோவில் நிறுத்தி ‘பனானாமஃபின்’ வாங்கிட்டு வந்தேன்.” “உனக்கு எதுக்கும்மா சிரமம். இந்த ஸ்நோவில் நீ டிரைவ் பண்ணிட்டு வந்ததே பெரிய விஷயம். இதில் ஷாப்பிங் வேறா...” “மகளை பார்க்க கைவீசிட்டு வரலாமா” “உன் அன்பை தாராளமாக கொண்டு வர்றியேம்மா. எனக்கு கடைசிவரை அது கிடைச்சா அதுவே எனக்கு சந்தோஷம்.” “என்னடா இந்திய பயணத்திற்கு தயாராயிட்டியா.” “ஆமாம்மா, வேணுங்கற பொருளை ஞாபகம் வரும்போது எடுத்து வைக்கிறேன். நாலு மாசம் இல்லையா. நிறைய ஏற்பாடு பண்ண வேண்டி இருக்கு.” “பெத்த தாயை பார்த்ததும், உன்னை வளர்த்த தாயை மறந்துட மாட்டியே எல்சா” கண் கலங்க தன்னை பார்க்கும் அம்மாவை பார்க்கிறாள்
© 2024 Pocket Books (كتاب إلكتروني): 6610000531394
تاريخ النشر
كتاب إلكتروني: 12 فبراير 2024
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$9.99 /شهر
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$83.88 /سنة
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
$53.64 /6 أشهر
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة
