خطوة إلى عالم لا حدود له من القصص
4.6
الإثارة والتشويق
இதோ... அத்திமலைத்தேவனின் இறுதி பாகத்திற்கு வந்துவிட்டோம். கடந்த 2018 ஜூன் மாதம், அத்திமலைத்தேவன் என்கிற சரித்திரப் புதினத்தைத் துவங்கினேன். முதல் பாகம் அக்டோபர் 2018 மத்தியில் வெளிவந்தது. சரியாக 2019 இறுதியில் ஐந்தாம் பாகத்துடன் புதினத்தை நிறைவு செய்கிறேன். இன்னமும் எழுதிக்கொண்டே போகலாம்... நான் சேகரித்துள்ள தகவல்களைக் கொண்டு பன்னிரண்டு பாகங்கள் வரை எழுதலாம். ஆனால், ‘ஐந்தோடு நிறுத்திக்கொள்' என்று அத்திமலைத்தேவனே உத்தரவு போட்டுவிட்டதால், இதையே இறுதி பாகமாகக் கொள்ளுகிறேன்.
கடந்த ஒரு வருடத்தில் நான் எங்கு சென்றாலும் அத்திமலைத்தேவனைப் பற்றி மட்டுமேதான் பேச்சு! பத்திரிகை விமர்சனங்கள், கலந்தாய்வுகள், twitter, முகநூல் கருத்துகள் என்று அத்திமலைத்தேவனைப் பாராட்டிக் கருத்துகள் வந்த வண்ணம் இருந்தன.
காஞ்சி எவ்வளவோ பெருமைகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது. நான் முன்பே குறிப்பிட்டிருந்தது போல ஒவ்வொரு கல்லும் சரித்திரம் பேசுகிறது. சரித்திரம் படிப்பதையே நிறுத்திவிட்ட அடுத்த தலைமுறையினர், தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த சோழர்களையும், பாண்டியர்களையும், பல்லவர்களையும் இழிவாகப் பேசி வருவது வருத்தத்திற்குரியது.
ஆங்கில இலக்கியம் பின்பாக ஓடிக்கொண்டிருந்த என்னை தமிழின்பால் திசை திருப்பிவிட்ட எனது தாய் கமலா சடகோபன் அவர்களை இந்தத் தருணத்தில் நினைக்கிறேன். சங்கதாரா, பஞ்சநாராயணக் கோட்டம் ஆகிய புதினங்களைப் படித்த உடனேயே, 'நீ சரித்திர எழுத்தாளன்' ஆகிவிட்டாய் என்று முதன்முதலாக என்னைச் சரித்திர எழுத்தாளராக அங்கீகாரம் தந்தது அவர்தான்.
இந்தப் பெருமை ஒன்று போதாதா எனக்கு?
அதன் பிறகு பல படைப்புகளை அளித்திருந்தாலும், அத்திமலைத்தேவன் புதினத்திற்காக ஆய்வுகளை மேற்கொண்ட போதும், பிறகு புதினமாக எழுதிய போதும் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன.
உண்மை! பல்லவர்களின் வாழ்க்கை சோகமயமானது. சோழர்களைப் போன்று தங்களைப் பல்லவர்கள் முன்னிறுத்திக் கொள்ளவில்லை. தனிப்பட்ட வாழ்வில் பல துயரங்களைச் சந்தித்தவர்கள். துர்மரணங்கள், நம்பிக்கைத் துரோகங்களைச் சந்தித்தவர்கள். மொத்தத்தில் they were the unsung heroes of Tamil Nadu's history.
அத்திமலைத்தேவன் புதினத்தின் பெரும்பகுதி அவர்களது சரித்திரத்தையே சுற்றி வந்தது. இருப்பினும், சதவாகனர்களில் துவங்கி, நந்த, மௌரிய, குப்த, ஆதி சோழர்கள், யவனர்கள், ஸ்வேத ஹூணர்கள், கல்யாணி சாளுக்கியர்கள், கங்கர்கள், சைந்தவர்கள், குந்தளர்கள், காம்போஜர்கள், வாதாபி சாளுக்கியர்கள், வைதும்பரர்கள், பாண்டியர்கள், சேரர்கள், விஜயநகர ஆட்சியாளர்கள், கோல்கொண்டா நவாபுகள். முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு, ஆற்காடு நவாபுகள் என்று அத்தனை ஆட்சியாளர்களையும் அத்திமலைத்தேவனில் அலசிவிட்டேன்.
பெரும்பாலான கதாபாத்திரங்கள் சரித்திரத்திலிருந்து அப்படியே எடுக்கப்பட்டவைதான். தலைக்கனம் பிடித்த துர்தரா, கவர்ச்சியைக் காட்டி மயக்கிய ஆம்ரபாலி, அடங்க மறுத்த அவந்திகா போன்ற பாத்திரங்கள் எல்லாமே உண்மையான பாத்திரங்கள் தான். துர்தரா கொலை செய்யப்பட்டது, சாணக்கியன் natural incubator மூலம் பிந்துசாரனை காப்பாற்றியது எல்லாம் உண்மை நிகழ்வுகளே.
நான்கு பாகங்களில் பல தகவல்களைத் திரட்டி அளித்திருந்தேன். ஆலயத்தைவிட்டு நீங்கிய அத்திமலைத்தேவன் கடலில் நழுவிச் சென்று, பிறகு மீண்டும் ஒரு இடத்தில் மறைக்கப்பட்டு, கடைசியில் எப்படித் தனது ஆலயத்திற்குத் திரும்பி வருகிறான் என்பதை இந்தக் கடைசி பாகத்தில் விவரித்து உள்ளேன்.
நான்கு பாகங்களிலும் பலரும், சாணக்கியன், துர்தரா, கரிகாலன், அவனிசிம்மன், மகேந்திரன், அவந்திகா, நரசிம்மபல்லவன் என்று பல கதாபாத்திரங்களைச் சிலாகித்து இருந்தாலும், ஒட்டுமொத்த வாசகரின் அபிமானத்தைப் பெற்ற ஆண் கதாபாத்திரமாகப் பல்லவ இளவரசன் ஜெயவர்மன் என்கிற போதி தர்மாவையும், பல்லவ தளபதியான உதயச்சந்திரனையும், பெண் கதாபாத்திரமாக, புதிர்களை விடுவிக்கும் மதியூகியான ராஜஸ்ரீயையும்தான் குறிப்பிடுகிறார்கள். என்னையும் மிகவும் பாதித்தது ஜெயவர்மனின் தியாகம்தான்.
புதினத்தை நிறைவு செய்கிறேன் என்று ஒருபுறம் வேதனை இருந்தாலும், ஒரு வருடமாக நீண்ட பல்லவ பயணத்தை மேற்கொண்டேன் என்பது மனநிறைவைத் தருகின்றது.
ஒரு வருடமாக நிகழ் காலத்தில் இல்லாத என்னை பொறுத்துக் கொண்ட எனது குடும்பத்தினருக்கு முதலில் என் நன்றி. யாராவது எதையாவது என்னிடம் கூறினால், கண்கள் அவர்களை நோக்குமே தவிர கருத்து பல்லவ காலத்தில் இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அத்திமலைத்தேவனுக்குப் பெரும் ஆதரவினை நல்கிய வாசகர்களுக்கும், நலம்விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
تاريخ الإصدار
كتاب : 18 مايو 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة