خطوة إلى عالم لا حدود له من القصص
الشعر
எனது வண்ண வண்ணக் கனவுகளை வார்த்தைகளாக்கி நான் கிறுக்கிப் நான் கிறுக்கி பார்த்த சின்னச் சிலேட்டுப் பலகையே இந்நூல். எனது கவிதைகளைப் பூஞ்சாமரமாக்கி, வாசிப்பவர்களின் மனத்தை வருடிவிடவைத்திருக்கிறேன் இந்நூல் எனது பத்தொன்பது வயதுப் பதிவுகளைப் பருவத்தின் பளபளப்போடு பதிப்பித்திருக்கிறேன்.
எனக்குள் சிதறிய சில சின்னச் சின்ன சிந்தனை வெடிப்புகளை வெளிக்கொணர்ந்து, உள்ள உளியால் செதுக்கிச் செம்மைப்படுத்தி என் கற்பனைகளுக்குக் கருக்கொடுத்து, கவிதைகளைப் பூவாளியாக்கியதாய் நினைத்துப் பூரித்துப் படைத்திருக்கிறேன்.
இதன் ஒவ்வொரு ஒய்யாரமும் எனது உயிர்பீலிகை தொட்டுத் தடவப்பட்ட தொய்யில்.
எனது எண்ண அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமான முறை கவிழ்ந்து போய் இருக்கிறேன்.
அப்படிக் கவிழ்ந்த பொழுதுகளில் மூழ்கி மூர்ச்சையாகி நானாக நீந்தக் கற்றுக் கரையேறிப் பழகிய பக்குவமான பதத்தோடு படகோட்டத் துடுப்பிட்ட எனது லாவகங்கள் தான் இந்தக் கவிதைகள்!
இதில் எனக்கு நானே அசைபோட்டுக் கொண்டவை, எனக்கு நானே உயிர் உருவாக்கிக் கொண்டவை.
என்னை நானே பிழிந்து சாறு எடுத்தவை. இப்படி என் பங்கில் எல்லாவற்றையுமே எடுத்து வைத்திருக்கிறேன். இந்த அகன்ற கவிதை உலகில் நான் அசைக்க முடியாதபடி அங்கீகரிக்கப்படுவேனா?
எனது உள்ளத்தின் உண்மையான குமைச்சல் இங்கே பலமாகப் பதிவாகுமா?
எனது ரூபத்தினது விசாலம் இவர்களிடையே எப்போதும் ஏற்றுக் கெள்ளப்படுமா?
என்பன போன்ற கேள்விகளை எடுத்து ஓர் ஓரத்தில் வைத்துத் தீ வைத்த கையோடு திரும்பி உட்கார்ந்து ஒரு நிஜப் பொழுதில்.
என் நெஞ்சினையும் நிரப்பிக் கொண்டு கொலுப் பொம்மைக்குக் கொலுசு சுட்டிப் பார்க்கும் சின்னச் சிறுமி மாதிரி என் ஓசைகளுக்குப் பாஷை கொடுத்திருக்கிறேன்.
வெகுகாலமாய்ஞ் வெந்து கொண்டிருந்த என் எண்ணங்கள் இப்போது தான் பொறுமை இழந்து பொங்கி இருக்கிறது. கொஞ்ச காலமாய்ஞ் எங்கோ எரிந்த அடுப்பிற்குஞ். நான் சுகமாகச் சூடானேன்.
எங்கோ தொடுக்கப்பட்ட அம்புகளை எதிர்த்து அவசியமில்லாமல் நான் ஆயுத பாணியானேன்.
யார் யாரோ காதலித்தார்கள்ஞ் நான் கவிதை எழுதினேன். யார் யாரோ சந்தோஷிக்க நான் சிரித்தேன்.
என் எழுதுகோலின் மையும், தாளும் தீரத்தீர, என் பெட்டியின் வெளிவந்திருக்கிறது.
கற்பனைகளை நிறம் மாற்றி எழுதிய கவிதைகள் கரையான்களுக்கு விருந்தாகிவிடக்கூடாது. என்று கவலையும் ஒரு காரணம். அனுபவப் பள்ளியின் அரிச்சுவடிகூட அறியாத பொழுதில் அனுபவவாவியாக வந்து வாதிட நான் விரும்பவில்லை. எனவே எனக்குத் தேவையான நம்பிக்கையினை நறுக்கிக் கொள்வதற்கு மட்டுமே. எனது சிந்தனையினைச் சாணை பிடித்து இருக்கிறேன்.
இமயத்தையே இரு கைகளால் ஏந்தி வருவதாய்ச் சொல்லி வெறும் கற்கடையும் கொண்டு வரவில்லை.
பூமெத்தை விரிப்பதாய்க் கூறிப் புழு நெளியவும் விடவில்லை. எனக்கு நானே சிறை எடுத்துச் செல்லப்பட்டு அழுத அழுகைகள் சொற்களுக்குள் சுருளாத சோக முடிச்சுகளை அவிழ்த்துப் பார்க்க முயன்ற அந்தமும் முரமான முயற்சிகள் என்னென்னவோ ஆற்றவேண்டுமென்ற எக்கச் சக்கமான எதிப்பார்ப்புகள் என மொத்தத்தில என்னையே உண்னையாக உரித்து வைத்திருக்கிறேன்.
தொகைகளைத் தோளில் ஏற்றிக் கொண்டு சிறகின் சிறகடிப்பைப் புலன்களுக்குள் புகுத்திக் கொண்டு..
விழிகள் விட்டத்தை வெறிக்க வெறிக்க வார்த்தைகளை வரிசைப்படுத்தி தெவிட்டாத அளவு உள்ளவைகளாகத் தேர்வு செய்து பாடுபொருளின் பாங்கு குலையாமல் பாடப்படுவதுதான் கவிதை. இந்த விளக்கத்தையே வேண்டியவரை முழுமையாக நான் மோய்த்து விட்டதால்..
இவற்றில் சிந்தனைச் சறுக்கல்களில் சறுக்கி விழுந்து விளைந்த சிராய்ப்புகளையே தேடுகின்ற முதற்கண்களே எனது முதல் ரசிகர்.
அப்படிச் சிராய்ப்புகளைக் கண்டெடுத்தால், அதற்குக் களிம்பு தடவுகின்றத கரங்கள் எனது முக்கியமானவர்களில் முதன்மையானவர்.புதுப்புது வார்த்தைகளைப் பூக்கச் செய்து, என் கவிதை மகள் பவனி போவதற்குப் பூமெத்தை போடவில்லை என்றாலும், எனது இதயம் நெடுகிலும் இலவம்பஞ்சு விரித்துள்ளேன். இந்நூல், தமிழ் என்ற தகர்க்க முடியாத கோட்டையின் வாசலில் நான் போட்ட கோலத்தின் முதல் புள்ளி.
ஆனால் அது புயலின் வேகத்திற்கோ, பூகம்பத்தின் தாகத்திற்கோ புரையோடி விடாத புள்ளி, காரணம் இது எனது உயிர்ப் புள்ளி.
எனக்கு இறக்கை கட்டி அழகு பார்த்த ஆசான் கொள்கைமணி திரு. ஆர். கே. குலோத்துங்கன் அவர்களுக்கும். எனது சிறகடிப்பிற்குச் சிங்காரம் செய்த கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்களுக்கும்.
“இந்த சிப்பிக்குள்” உள்ள முத்துக்களை முனைந்தெடுத்து, முகம் சொல்லிக்க வைத்த மூவேந்தர் முத்து அவர்களுக்கும் என் நன்றியினைத் தெரிவிக்கின்றேன்.
அன்புடன்
பா. விஜய்.
تاريخ الإصدار
كتاب : 23 ديسمبر 2019
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة