خطوة إلى عالم لا حدود له من القصص
4.8
الإثارة والتشويق
சுழற்சிதான் வாழ்க்கை! சுழற்சி நிற்கும் போது எல்லாம் முடிந்துவிடும். ‘காலச்சக்கரம்’ எனும் எனது முதல் நாவலின் சுழற்சி என்னை திக்குமுக்காட வைத்துவிட்டது! நாவலைப் படித்துவிட்டு தொலைபேசி மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும் நிறையப்பேர் தொடர்பு கொண்டு பாராட்டுகளை குவித்துவிட்டனர். வாலியின் திருக்கரத்தால் வெளியிடப்பெற்று, கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்களின் கரங்களில் இதன் முதல் பிரதி தவழ்ந்து, இயக்குனர்கள் ‘சித்ராலயா’ கோபு, முக்தா ஸ்ரீனிவாசன், எழுத்தாளர்கள் அசோகமித்திரன், அகஸ்தியன், பத்திரிகையாளர் ஷண்முகநாதன், வானதி திருநாவுக்கரசு, திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், குமாரி சச்சு போன்ற ஜாம்பவான்களின் ஆசி பெற்ற இந்த படைப்பு, வெற்றி பெற்றதில் வியப்பு ஏதும் இல்லைதான். நூல்நிலையங்களில் என் புத்தகம் பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பதை காணும் போது, என் காதுபட ‘கீழே வைக்க முடியவில்லை.. அவ்வளவு சுவாரசியம்’ என்று பலர் பாராட்டுவதை (நான் யார் என்று தெரியாமல்தான்) கேட்கும் போது, உலகையே வென்றுவிட்ட உணர்வு. ஒருவர் தொலைபேசியில் ‘வி.எஸ் காண்டேகர்’ போல் எழுதுகிறீர்கள் என்று பாராட்டியதைப் பெருமையாக நினைக்கிறேன்.
காலச்சக்கரத்தைப் படித்துவிட்டு, நான் என் வாழ்வில் சந்திப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு பெரும் V.V.I.P. என்னை தன் வீட்டிற்கு அழைத்து மணிக்கணக்காக என்னுடைய நாவலைப்பற்றி விமர்சித்ததை நான் பெற்ற பெரும் பேறாக நினைக்கிறேன். பல V.V.I.P.க்கள் என்னுடன் இன்னும் தொடர்பு கொண்டு பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நாவலின் முழு வெற்றிக்குக் காரணம் ‘வானதி’ திருநாவுக்கரசு அவர்கள்தான். ஆங்கில இலக்கியம் பின்னால் அலைந்து கொண்டிருந்த என்னைத் தமிழ் இலக்கியத்தின்பால் திசை திருப்பிவிட்டவர் அவரே! ‘காலச்சக்கரம்’ வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது! அடுத்ததாக என்ன சுழலவிடப் போகிறீர்கள்? என்று கேட்டு, எனது அடுத்த நாவலுக்கு வித்திட்டவரும் அவர்தான். அதன் விளைவாக இதோ சுழலப்போகிறது-
ரங்கராட்டினம்!
கலியுகத்தில் மக்களின் மதிமயங்குவதற்கு கலி புருஷன் தேர்ந்தெடுத்த ஐந்து சாதனங்கள் சூதாட்டம், மது, மாமிசம், பெண் மற்றும் தங்கம், குறிப்பாக, சூரியகிரகணம் ஒன்றின் போது, பூமி பிளந்து வெளிப்படும் ‘அபரஞ்சி சுவர்ணம்’ தென்னகத்தை படாதபாடு படுத்துகிறது. திருவரங்க இன்னமுதன் அரங்கநாதனை கூட இந்த கலியின் கோர விளையாட்டு விட்டு வைக்கவில்லை.
நமது தர்மத்திற்கு பெரும் சோதனை விளைகிறது. அதை யார் பாதுகாத்து நம்மிடம் அதை எப்படி பத்திரமாக சேர்ப்பித்தார்கள் என்பதை விளக்குகிறது ‘ரங்கராட்டினம்’ கதை.
இந்த நாவல் நிச்சயம் பலரது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று என் உள்மனது சொல்கிறது. எத்தகைய தர்மத்தில் பிறந்துவிட்டு, அறியாமையினால் விட்டில் பூச்சிகளைப் போல் பாதை மாறிச் சென்று பரிதவித்து சீரழியும் மனிதர்கள், இந்த ‘ரங்கராட்டினம்’ கதையை படிப்பதன் மூலம் தங்களின் ஆணிவேராக இருக்கும் நம் தர்மத்தின் பெருமைகளை உணர்ந்து மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும்.
நமது மூதாதையர்கள் சிலர் தீர்க்கதரிசனத்துடன் செயல்பட்டு நமது தர்மத்தைக் காத்த கதைதான் ரங்கராட்டினம். இந்த நாவலுக்கு எனக்கு கிரியா ஊக்கிகளாக இருந்தது வேளுக்குடி கிருஷ்ணனும், ‘வைஷ்ணவஸ்ரீ’ ஆசிரியர், திரு கிருஷ்ணமாச்சாரியாரும் குறிப்பாக, வைஷ்ணவஸ்ரீ அவர்கள், திருவரங்கம் ‘கோவில் ஒழுகு’ பதிவு செய்திருந்த சரித்திர நிகழ்வுகளை அழகாக Compile செய்து புத்தகமாக வெளியிட்டிருந்தார். நான் இந்த நாவலை எழுதுவதற்காக தேடிக் கொண்டிருந்த ஆதாரங்கள் சிலவற்றை இவருடைய புத்தகத்தில் கண்டேன். இதைத்தவிர, திரு. கிருஷ்ணமாச்சாரியார் என்னை அழைத்துக் கொண்டு, திருவரங்கன், கலாபத்தின் போது தங்கியிருந்த இடங்களை எனக்கு நேரிடையாக காண்பித்தார். இந்த நாவலில் வரும் ஜோதிஷ்குடி குகை, ஆனைமலை நரசிம்மர் கோவில், அழகர் கோவிலில் அரங்கன் பதுங்கியிருந்த கிணறு, திருவாய்மொழிபிள்ளை பிறந்த குந்தகை கிராமம் ஆகியவற்றிற்கு அழைத்துச் சென்றார். வேளுக்குடி மற்றும் வைஷ்ணவஸ்ரீக்கு எனது நன்றி.
மேலும் Silent Valley மேல்கோட்டை திருமலை, பகுதிகளுக்கு நான் சென்று ஆதாரங்களை தேடினேன்.
என் தந்தை இயக்குனர் சித்ராலயா கோபு, தாயார் நாவலாசிரியை கமலா சடகோபன் மற்றும் என் மனைவி குழந்தைகள் ஒத்துழைப்பில்லாமல் இந்த நாவலை என்னால் எழுதியிருக்க முடியாது.
அன்புடன்
‘காலச்சக்கரம்’ நரசிம்மா
تاريخ الإصدار
كتاب : 2 يوليو 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة