الرواية
உறவுகள் தொடர்கதை நாவல் உழைத்து முன்னேறும் பெண்களுக்கு உற்சாகம் கொடுத்திடும் ஒரு டானிக். இக்கதையின் நாயகி சாலினி பஸ் கண்டக்டரை காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டதால், தந்தையும், தாயும் இவளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஊரை விட்டு ஓடி விட்டாலும் கைப்பிடித்த காதலனுடன் வாழ்ந்து, தாயிடம் கற்றுக் கொண்ட உழைப்பின் அனுபவத்தை பயன்படுத்தி உயர்நிலையை அடைகிறாள். குறுகிய கால வாழ்க்கையில் கணவனை மரணம் தழுவினாலும் பெற்ற மகனை பேணிக்காத்து, கணவனை கண்ணால் காணும் ஜீவனாக மகனை வளர்த்து தன் திறமையினால் அவனை உயர்ந்த நிலைக்கு உயர்த்தி தன் சகோதரனின் மகளையே மருமகளாக்கி உறவுகள் தொடர்கதையாக கொண்டு செல்வதே கதையின் மூலக்கரு. இடையில் ஏற்படும் இன்பம், துன்பம், ஏற்றத்தாழ்வுகளை தொய்வின்றி சுவாரஸ்மாகக் கொண்டு செல்வதே இக்கதையாசிரியரின் கைவண்ணம்.
تاريخ النشر
كتاب إلكتروني: 3 يناير 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت