Step into an infinite world of stories
Children
மணலில் கோபுரம் கட்டி ஜாலியாக விளையாடுவீர்கள் அல்லவா? எவ்வளவு மகிழ்ச்சியான விளையாட்டு! இது போல் இன்னும் பெரிய கோபுரம் கட்டினால் எப்படி இருக்கும்? இன்னும் இன்னும் பெரி….சாய் அதைக் கட்டினால் எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள்!
நினைக்கவே பிரமிப்பாய் இருக்கிறதல்லவா? மணலில் கட்டாமல் அதையே கற்களால் கட்டினால் எப்படி இருக்கும்? கற்களும் பாறைகளும் இல்லாத இடங்களில் பாறைகளைக் கொண்டு வந்து கட்டடம் கட்டினால் எப்படி இருக்கும்?
வியந்துபோய்விட்டீர்களா! இன்றைக்கு நாம் அப்படிப்பட்ட கட்டடங்களைப் பற்றிய சுவையான பல விஷயங்களைப் பார்க்கப்போகிறோம். சரிதானே குழந்தைகளே?
அந்தக் கட்டடங்கள்தான்
பி..ர..மி..ட்..க..ள்!
இந்தப் பிரமிட்கள் பல நாடுகளில் உள்ளன. ஆனால் எகிப்தின் பிரமிட்கள் உலகப்புகழ் பெற்றவை. அவற்றில் ஒன்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது காஸா என்ற இடத்தில் உள்ளது. இதன் பெயர் கூஃபூ பிரமிட்.
வாருங்கள் உங்களை எகிப்திற்குக் அழைத்துப் போகிறேன். பாஸ்போர்ட் எடுக்காமல் விசா பெறாமல் நாம் இந்த நூலின் மூலமாகவே எகிப்துக்குச் சென்று சுற்றிப்பார்த்து வருவோமா?
Release date
Ebook: 9 May 2022
English
India