Step into an infinite world of stories
Fiction
மலைபோல் உயர்ந்து நின்ற அந்த போதி மரத்தின் கீழே வளர்ந்தவர்கள் ஏராளம்.
1963ம் வருஷம் குமுதம் இதழில் காவல் துறை அதிகாரி ஒருவர், தன் அனுபவங்களை வாரா வாரம் கட்டுரைகளாக எழுதி வந்தார் - 'யூ' என்ற புனை பெயரில், கட்டுரைகள் முடிவு பெற்றவுடன், அதன் சுவாரசியத்தையும், விறுவிறுப்பையும் கண்டு பிரமித்து, "அற்புதமான கட்டுரைகளைப் பிரசுரித்த உங்களுக்கு தாங்க் 'யூ”' என்ற வரிகளுடன் ‘அன்புள்ள ஆசிரியருக்கு' எழுதி அனுப்பினேன் ஒரு அஞ்சல் அட்டையில், பாமா கோபாலன் என்ற பெயரில், மறுவாரமே அது பிரசுரமானது - பர்மா கோபாலன் என்ற பெயரில்!
விடுவேனா? 'எனக்கு பர்மா அகதிகள் பேரில் அனுதாபம் உண்டுதான். ஆனால் நான் இருப்பது சென்னையில் உள்ள குரோம்பேட்டை தான்’ என்று மறுபடியும் அ.ஆ. பகுதிக்கு மீண்டும் ஒரு அஞ்சல் அட்டை!
'எந்த ஊர் கோபாலன்?' என்ற தலைப்பில் அந்தக் கடிதமும் பிரசுரமானது!
இப்படி ஆரம்பமானது தான் என் தொடர்பு. பிறகு பல கடிதங்கள் பெரும்பாலும் பிரசுரமாகவில்லை!
முயற்சி, முயற்சி, விடா முயற்சி, கடிதங்களுக்குப் பதில் தகவல் துணுக்குகள், நகைச்சுவைத் துணுக்குகள், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்த சுவையான தகவல்கள், லைப்ரரியில் படித்த புத்தகங்களிலிருந்து சில பகுதிகள், உபன்யாசக் கூட்டங்களில் வாரியார், கீரன், அனந்தராம தீட்சிதர், ஜெயராம சர்மா சொன்ன சுவாரசியமான குட்டிக் கதைகள், இலக்கியக் கூட்டங்களில் சேகரித்த துணுக்குகள் -
இப்படி அடிக்கடி எழுதி அனுப்பிக் கொண்டேயிருந்தேன். ஐம்பது சதவீத வெற்றி!
இடையிடையே, நெய்வேலியில் பணி புரிந்து கொண்டிருந்த எனது மூத்த சகோதரன் அமரர் எஸ். சேஷாத்திரியும் வெளிநாட்டுப் பத்திரிகைகளிலிருந்து அனுப்பி உற்சாகம் அளித்தார். பின்பு அவரே சுமார் பத்து புனை பெயர்களில் துணுக்குகளை அனுப்பினார்.
முதல் இதழ் தயாரித்தவர்: 'இதுதாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகர்! ஒருங்கிணைப்பாளராக நான்! தொலைக்காட்சியில் ‘இந்த வார இதழ் தயாரிப்பாளர்' என்ற அறிமுகத்துடன் வீடியோவும் உண்டு!
இசையுலகம், இலக்கிய உலகம், திரையுலகம், நாடக உலகம், ஓவியர் உலகம் - என்றெல்லாம் தேடித்தேடிப் பிரபலங்களைச் சந்தித்து இதழ் தயாரித்த அனுபவங்கள் இப்புத்தகத்தில் பரவலாகக் காணலாம். ரசியுங்கள். குமுதம் இதழில் பிரசுரமான கட்டுரைகள் இருக்காது
சில குறிப்புகள் தவிர. இதற்காக எனக்கு ஒத்துழைப்பு தந்த புகைப்படக்காரர்கள், திருவாளர்கள் யோகா, கே. எஸ். அருணாசலம், பிரபுசங்கர், ராஜாபொன்சிங், ராதாகிருஷ்ணன், திருஞானம், அமரர் கலை நாகராஜன், மேஜர்தாசன் மேலும் பலர். பெயர் குறிப்பிடவில்லை எனில் மன்னிக்கவும். ஆசிரியர் குழுவிற்கும், உடன் ஒத்துழைத்த எல்லா நிருபர்களுக்கும் நன்றி.
என்னிடமிருந்த சில அரிய புகைப்படங்களையும் தந்துள்ளேன் - ஆதாரத்துக்கு மட்டுமல்ல, கண்டு ரசிக்கவும் கூட!
- பாமா கோபாலன்.
Release date
Ebook: May 18, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International