எப்போதும் காண்பவையல்ல, எப்போதாவது காட்சி தருவதே ஒரு கலைஞனை உருவாக்குகிறது. இத் தரிசனத்தின் விகசிப்பில் அவனுக்கான பிரத்தியேக உள்ளொளியைக் கண்டடைய முயலுகிறான். பின்நவீனத்துவம், யதார்த்தவியம், புனைவியம் என்ற மயக்கங்களிலிருந்து விடுபட்டு மேற்கொள்ளும் தேடலில் வெற்றி தோல்வி என்பவை அர்த்தம் இழந்த சப்தங்கள்.
தேடலே அர்த்தமுள்ள செயல்பாடு. அது காயங்களையும் வலியையும் கலைஞனுக்குத் தன் பரிசாக அளிக்க முயலுகிறது.
ராஜபாட்டை முடிந்து தடமற்ற பூமி ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கலைஞன் மேற்கொள்ளும் பயணம் அது.
பதினைந்து சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பு மேற்கொண்டதன் நீட்சியில் தன்னை நிறுத்திக் கொள்ள முயலுகிறது.
تاريخ النشر
كتاب إلكتروني: 10 أبريل 2024
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت