خطوة إلى عالم لا حدود له من القصص
4.7
سير وتراجم
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் தாய் சின்னம்மா தந்தை சுப்பிரமணியம் தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்). 1991 இல் இந்துமகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியானார். இளம் வயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும், மக்களிடத்திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கியவர். அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உயர்மட்டச் சந்திப்புகளிலும் இயக்க அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் நன்கு பரிச்சயமானவர். புலிகளின் வீழ்ச்சியை அடுத்துப் பல்லாயிரக்கணக்கான போராளிகளுடன் இலங்கை அரசின் சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாமிலும் நான்காண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு 2013 இல் விடுவிக்கப்பட்டதும் திருமணம் செய்து பொதுவாழ்வில் ஈடுபட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி 2015 இல் மரணமடைவதற்கு சிலமாதங்களுக்கு முன்பு ‘ஆயிரக்கணக்கான போராளிகளின் தீரம் மிகுந்த உயிர் அர்ப்பணிப்புகளின் மூலமும், இலட்சோபலட்சம் மக்களது பேராதரவுடன் கட்டியெழுப்பப்பட்ட ஒரு போராட்ட இயக்கம் ஏன் தோற்கடிக்கப்பட்டது என்பதற்கான உண்மையான காரணங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதற்காகவும், புலிகளின் வீழ்ச்சியிலிருந்து தான் கற்றுக்கொண்ட போராட்ட அனுபவங்களையும் புதிய சிந்தனைகளையும் தன் சாட்சியாக ;ஒரு கூர்வாளின் நிழலில்’ என்னும் தலைப்பில் ஒரு நூலாக படைத்தளித்துள்ளார் தமிழினி. இவற்றினூடே தன் இயக்க அனுபவங்களையும் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார். விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியமான தலைவர்கள் வேறு எவரும் தம் இயக்கத்தைப் பற்றி இவ்வளவு நேர்த்தியாக சுயவிமர்சனம் செய்யாதிருக்கும் நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த பெண் போராளியொருவரின் முதல் சுயசரிதை என்பதாலும் தமிழினியின் இந்நூல் வாசிப்பின் வழி முக்கியத்துவம் பெறுகின்றது. சிலர் எழுதியிருப்பினும், அவையெல்லாம் இயக்கத்தின் வீரவரலாற்றையும், வெற்றியையும் முன்னிலைப்படுத்தும் பிரச்சாரப் படைப்புகளாகவே அமைந்துள்ளது.
© 2020 Storyside IN (دفتر الصوت ): 9789353814274
تاريخ الإصدار
دفتر الصوت : 6 ديسمبر 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة