خطوة إلى عالم لا حدود له من القصص
1001 CE. Chōḷa General Maḷapāḍiyar journeys to Tiruviḍaimarudūr, determined to uncover clues about the treacherous, premeditated murder of Crown Prince Āditya Karikāla-an event that occurred decades ago. He hopes these long-buried secrets will shed light on the recent attempt on King Rājarāja Chōḷa's life. Meanwhile, in Thanjāvūr, his childhood love Mathura resolves to travel to Thirunārayūr to meet Saint Nambiyāṇdar Nambi, the enigmatic figure who has blessed her during pivotal moments in her life. Far away in the Chēra country, deep in the Thenmala hills, Ācharya Achudhan Nambūdiri reflects on the failed assassination attempt on the Chōḷa king. Despite the intricate planning behind the attack, its failure leaves him perplexed. When Malayanūran joins him, their shared grief and thirst for vengeance reignite their determination to strike back against those who have wronged them. What secrets will Maḷapāḍiyar unearth at Tiruviḍaimarudūr? Why did Saint Nambi summon Mathura to his native village? How are the assassins connected to the Chēra Chief of Staff, Paḍamēl Nāir? And why is Chōḷa commander Rājarāja Mārāyar making a personal visit to the home of dramatist Vijayarāja Ācharya? Udhayabānu - Māmazhai (Thunderstorm) takes readers on an epic journey into the heartlands of the Chōḷa, Chēra, and Paṇdya kingdoms. This gripping tale is woven with intricate character arcs, interconnected events, and a timeline that fluidly shifts between past and present. An immersive experience like no other, the book is the eighth installment of the acclaimed Rājakēsari Trilogy. Join narrator Deepika Arun as she brings this grand saga to life. Prepare for a tale of loyalty, betrayal, and vengeance. Let the swords clash, the spears rise, and the Chōḷa king's legacy endure! காலம் பொது நூற்றாண்டு 1001. சோழ இளவரசர் ஆதித்த கரிகாலரின் கொலை பற்றிய சில பிரத்யேகத் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக தலைநகரான தஞ்சையிலிருந்து இடைமருதிலுக்குப் பயணம் மேற்கொள்கிறார் தண்ட நாயகர் பரமன் மழபாடியார். பல காலங்களுக்கு முன்னால் நடைபெற்ற படுகொலை என்றாலும் அதற்கும் அண்மையில் நடைபெற்ற மன்னர் இராஜராஜ சோழரின் மீதான சதித் தாக்குதலுக்கும் தொடர்புண்டு என்கிற சந்தேகம் அவருக்கு. ஏறக்குறைய அதே சமயத்தில், அவரது பாலிய காலத் தோழியான தலைக்கோலி நக்கன் மதுரவாசகி, மகான் நம்பியாண்டார் நம்பியைச் சந்திப்பதற்காக திருநாரையூருக்குக் கிளம்பிச் செல்கிறாள். தனது வாழ்வில் முக்கியமான சில தருணங்களில் தனது அருளாசிகளால் அவளை அரவணைத்த அந்த ஞானியைச் சந்திப்பதில் அவளுக்கு அவா அதிகம். சேர நாட்டின் தென்மலைக் காடுகளில் ஆசாரியர் அச்சுதன் நம்பூதிரி பல்வேறு உணர்ச்சி அவஸ்தைகளுக்கு ஆட்பட்டு நிற்கிறார். 'பிசகவே பிசகாது!' என்று நினைத்த சதிச்செயல் கடைசி நிமிடத்தில் எவ்வாறு முறியடிக்கப்பட்டது? என்பதில் அவருக்குப் பலவிதமான சந்தேகங்கள் தோன்றுகின்றன. ஒரு கட்டத்தில் மலையனூரனும் அவருடன் இணைந்து கொள்கிறான். தங்களின் உற்ற சுற்றத்தை இழந்து நிற்கும் இந்த இருவரின் மனதிலும் இருப்பது ஒரே ஒரு எண்ணம்தான் - சரியான முறையில் பழிக்குப் பழிவாங்க வேண்டும்! இடைமருதிலில் பரமன் மழபாடியார் தெரிந்து கொள்ளப்போகும் இரகசியங்கள் என்னென்ன? திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அத்தனை தூரம் மதுராவைத் தனது ஊருக்கு வரச் சொல்லும் காரணமென்ன? சேர நாட்டுப் படைகளின் தலைவர் படைமேல் நாயருக்கும் சதிகாரன் கிருஷ்ணனுக்குமான இரகசியத் தொடர்பு என்ன? இருக்கும் வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு சோழ சேனாபதி இராஜராஜ மாராயர் ஆசாரியர் விஜயராஜரின் இல்லத்திற்கு வர விழைவது ஏன்? ஸ்டோரிடெல் நேயர்களால் மிகவும் விரும்பி இரசித்துக் கேட்கப்படும் சரித்திரத் தொடரான உதயபானு வரிசையில் ஐந்தாவது ஒலிப்புத்தகமாக வெளிவருகிறது மாமழை. பண்டைய தென்னகச் சரித்திர காலத்தினூடே மறக்கவே முடியாத பேரனுபவமாக.. பெருஞ் சித்திரமாக விரியும் இந்தத் தொடரை முழுமையாக அனுபவித்தாலன்றிப் புரிந்து கொள்ள முடியாது. சேர சோழ பாண்டி மண்டலங்களினூடே விரிந்து பரவும் கதைக்களம், ஆழமான கதாபாத்திரங்கள், உணர்வுகள், உச்சங்கள், கால வரிசையில் முன்னும் பின்னுமாக பிணைந்தோடும் நிகழ்வுகள் என்று விறுவிறுப்பாக விரியும் இந்த நீள்புதினம், நல்ல கதைகளைக் விரும்பும் வாசகர்கள் தவற விட்டுவிடக்கூடாத புதினம். வாருங்கள்! ஒலிப்புத்தகி தீபிகா அருணின் கம்பீரமான குரலின் வழி சோழ தேசத்திற்குள் நுழைவோம். கவசம் தரிப்போம். வாளேந்துவோம். வேலேந்துவோம். 'வாழ்க சோழம்!' என்று நெஞ்சு நிமிர்த்திக் குரல் கொடுப்போம்!
© 2025 Storyside IN (دفتر الصوت ): 9789353989989
تاريخ الإصدار
دفتر الصوت : 15 مارس 2025
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة