خطوة إلى عالم لا حدود له من القصص
இருளின் ஒளி
பியாதர் தாஸ்தாவெஸ்கி எழுதிய கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைக்கதை காதலின் மொழிபெயர்ப்பாய், இலக்கணமாய், அர்த்தமாய் திரைமொழியின் நுட்பத்துடன் காட்சி வடிவம் கொண்டு இங்கே இப்போது அதுவே மீண்டும் இலக்கிய வடிவம் சூடியிருக்கிறது.
பார்க்கும் அனுபவமும், படிக்கும் அனுபவமும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை. வெவ்வேறு பரவசிப்புகள் கொண்டவை என்பது இந்த வாசிப்புகளில் புலப்படும்.
தாஸ்தாவெஸ்கி மாறாத புகழ் கொண்ட ரஷ்ய எழுத்தாளர். இவரின் குற்றமும் தண்டனையும், கரமசேவ் சகோதரர்கள், சூதாடி ஆகிய படைப்புகள் காலத்தை வென்றவை.
மரணத்தின் நுனி வரை சென்று திரும்பியவர். தன் வாழ்நாளிலேயே இறப்பு பிறப்பு இரண்டையும் பிரக்ஞையோடு தரிசனம் கொள்ளும் அனுபவம் வாய்த்தவர். மனோதத்துவ, தத்துவார்த்த பார்வை இயல்பாய் இவரது படைப்பில் இருப்பது வாழ்வியல் அனுபவம் அவருக்கு தந்த வலிகளின் நுட்பமான பதிவுகளிலிருந்து உற்பத்தியானவை.
வாழ்வின் துன்பவியலை உணர்வு ததும்ப இவரது படைப்புகள் எழுத்தில் உறைவுகொள்ளச் செய்திருப்பவை.
இவரின் இந்த படைப்பு வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றுள்ளது. இனி அந்த உயிரோவியத்திற்குள் பிரவேசித்து அதன் திரைமொழி, இலக்கியநுட்பம் செழிக்கும் இந்த காவியத்திற்கு மனதில் நீங்காத இடம் தந்து பதித்துக்கொள்ளலாம்.
இதில் காதலாய் வருகிறவனுக்கு இருள் மிகவும் பிடிக்கும். இரவை ஆராதிப்பவன் அவன். இருள் சொல்லும் அமைதியை வாசித்தறிய தெரிந்தவன். மனிதர்கள் உறங்கும் அப்பொழுதுகளின் பெரும்பகுதி விழித்திருப்பவன். இயற்கையோடு இயற்கையாய் இசைந்துபோன அவனின் உலகம் கனவுகளால் நிரப்பப்பட்டவை. அவன் ஒரு கனவுகளின் இளவரசன். கனவுப் பட்டறையை இயக்கிக்கொண்டே இருப்பவன். கனவுப் படைப்பாளன். அவனின் சாசுவதமான கனவுகளுக்கு அந்த இருளின் ஒளி எப்போதும் இதம் சேர்த்த வண்ணம் இருக்கிறது.
تاريخ الإصدار
كتاب : 3 يناير 2020
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة