Step into an infinite world of stories
Fiction
அன்றைய தினசரி பத்திரிகையை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு மிகவும் பிரியமான காலைப் பொழுது போக்கைத் தொடங்க, அக்காவும் தம்பியும் தயாராயினர். பத்திரிகையைப் பிரிக்கும் போதே, “மாத்திரைகளைப் போட்டுக் கொண்டாயா, நந்தா?” என்று அவர்க ளுடைய அத்தையின் குரல் உள்ளறையிலிருந்து உரக்க ஒலித்து விசாரித்தது! முகத்தைச் சுளுக்கிக் கொண்டு, “பொல்லாத மாத்திரை! வெறும் களிமண்! இதைச் சாப்பிடாவிட்டால் என் உயிர் போய் விடுமாக்கும்!” என்று முணுமுணுத்தான் ‘நந்தா’ என்று, அழைக்கப்பட்ட அந்த நந்தகுமாரன். “ஏய், என்னடா, நந்து, நீ மாத்திரையைச் சாப்பிடாமலா வந்து உட்கார்ந்தாய்? என்ன அசட்டுத்தனம், இது? ம்? போ! போய், மாத்திரையைப் போட்டுக் கொண்டு வா! அப்புறமாய்ப் பத்திரிகை படிக்கலாம்!” என்றாள், காஞ்சனமாலா. “ச்சு. போ, அக்கா!” என்றபடி, எழுந்து சென்று மாத்திரை எடுக்கும் எண்ணமே இல்லை என்று தெளிவாகக் காட்டுகிறவனாக, சோஃபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தான் தம்பி! “ஏய் ப்ளீஸ்டா, தம்பி, மாத்திரையைப் போட்டுக் கொள்ளடா. இல்லாவிட்டால் என் மூடே கெட்டுவிடும்!...” “இப்போது நீதான் என்னை ‘மூட் அவுட் ஆக்கப் பார்க்கிறாய்! நீயே பாரேன், எவ்வளவு காலம் இந்த மாத்திரைகளை முழுங்கிக் கொண்டே இருப்பது? எனக்கு நினைவுதெரிந்த நாளில் இருந்து சாப்பிடுகிறேன்! என்ன பிரயோஜனம்?” “அப்படிச் சொல்ல முடியுமா, நந்து? முன்னைக்கிப் போது, உனக்குக் கால்களுக்கு அதிகப்பலம் வந்துதான் இருக்கிறது. சாதாரணமாய் நடக்கிறாயே!”என்னத்தை நடந்தேன், போ! ஐந்து நிமிடங்கள் நடந்துவிட்டு, அரை மணிநேரம் காலைப்பிடித்து விட்டுக் கொண்டு இருக்கும்படி ஆகிறது. அந்த நடைக்கும், இன்னொரு கால் தேவைப்படுகிறது! அன்று ஒரு பாட்டு படித்துப் பார்த்தோமே, நினைவிருக்கிறதா, காஞ்சி? ‘முக்காலுக்கு ஏகாமல் முன்னறையில் வீழாமல்’ இறந்து விட வேண்டும் என்று, கச்சி ஏகம்பனை வேண்டுவதாக வந்ததே!” “அது முதுமையால் உடல்தளர்ந்து கம்பூன்றி நடப்பதைக் குறிப்பிடுவது. உனக்குப் பதினைந்து வயதுதான் ஆகிறது! நினைவிருக்கட்டும்!” என்றபோது காஞ்சனமாலையின் குரலில் கண்டிப்புடன், கரகரப்பும் இருந்தது. எப்படியும் ‘மூன்று கால்’ என்பதில் மாற்றமில்லை தானே? அது இயலாமையைக் குறிப்பதுதானே? இந்த இயலாமையோடு வாழ்வதைக் காட்டிலும்...” “நந்தா!...” பதறிப்போய் எழுந்த காஞ்சனா முயன்று, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மீண்டும் அமர்ந்தாள். ஒரு குறுகுறு பார்வையுடன், “என்ன, இன்று உன் மூளை, ரொம்பவும் கூர்மையாக வேலை செய்கிறது போல் தோன்றுகிறதே! உலக்கைக் கொழுந்து தான்!” என்று, வியப்பது போலக் கண்களை விரித்துப் பரிகசித்தாள்.... முகத்தில் லேசாக அசடுவழிய, “போ, அக்கா! நான் படுகிறபாடு உனக்கு என்ன தெரியும்?” என்று முணுமுணுத்தான், நந்தகுமார். லேசாகப் புன்னகை விரிய, “எப்போதும் உள்ளது தானே, தம்பி? இன்றென்ன புதுவிரக்தி? அதுவும், உடம்பு கொஞ்சம் முன்னேற்றத்தின் பக்கமாய், மெல்லத் திரும்ப வருகிறபோது?” என்று கனிவுடன் கேட்டாள் தமக்கை. ஒரு பெருமூச்சுடன், நந்தனின் பார்வை, ஜன்னல் வழியே வெளியே பாய்ந்தது. மீண்டும், தரையில் விரித்திருந்த கம்பளத்தில் பதிந்தது. காஞ்சனைக்கு விஷயம் புரிந்து போயிற்று
© 2025 PublishDrive (Ebook): 6610000771042
Release date
Ebook: April 8, 2025
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International