Step into an infinite world of stories
Fiction
அவள் எப்போது பெண் என்று நிர்ணயிக்கப்பட்டாள்? சொல்வது கஷ்டம். சிருஷ்டியின் அல்லது பரிமாணத் தத்துவத்தின் மிக மிகத் தற்செயலான ஸ்டாடிஸ்டிக் விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட சங்கதி அது. அவள் பெண் என்று தீர்மானமாகும் அந்தக் கணம் வரை அது யாருக்கும் தெரியாது. ஒரு நாள் இரவு கரண்டு நின்றுபோனதால் அப்பாவும் அம்மாவும் மொட்டை மாடிக்குப் போய்ப் படுத்துக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் பாட்டியுடன் கீழே படுத்திருந்தன. அப்பாவும் அம்மாவும் இப்போது எல்லாம் சேர்ந்தே படுத்துக்கொள்வதில்லை. அப்பாவுக்கு நாற்பத்து ஐந்து வயது. அம்மாவுக்கு முப்பத்து ஏழு. இருபது வருஷ மண வாழ்க்கைக்கு அப்புறம் அவர்கள் இயல்பாக ஒருவரையொருவர் சரீரத் தேவையின்றி விலகிக்கொண்டார்கள். மூன்று குழந்தைகளும், பாட்டிகூட இருப்பதும், வீட்டின் குறுக்களவும் உபரிக் காரணங்கள். இதனால் அம்மா அப்பாவுக்கு அலுத்து விட்டாள் என்றில்லை. அன்று ராத்திரி பவர் கட்டினால் மாடியில் படுத்துத் தூங்கிப் போய்விட்டார்கள். நடு ராத்திரி. சற்று தூரத்தில் ஓடிய குட்ஸ் வண்டியின் ஓசை கேட்டு அப்பா திடுக்கிட்டு விழித்தெழுந்தவர் கீழே போய் பானையைச் சரித்து தண்ணீர் குடித்துவிட்டுத் திரும்பி வந்து படுத்துக்கொண்டார். ஒரு முறை அம்மாவைப் பார்த்தார். மல்லாக்கப் படுத்திருந்தாள். குடும்ப அவஸ்தைகளை மீறின அனாயாசமான, அலட்சியமான அந்தச் சயனம் அப்பாவுக்கு சற்றுக் கிறக்கமாக இருந்தது. அவள் மேல் கையை வைத்துக்கொண்டு படுத்தார். அதற்கு மேல் அவருக்கு எந்த உத்தேசமும் இருக்கவில்லை. சற்று நேரம் அப்படியே படுத்திருந்தார். தூக்கம் வரவில்லை. திரும்பிப் படுத்துக்கொண்டு ‘கிட்ட வா’ என்று எழுப்பினார். அவள் அரைத் தூக்கத்தில் திரும்பிப் படுத்துக்கொள்ள அப்பா அம்மாவை அணைத்துக்கொண்டு, இன்னும் கொஞ்சம் அணைத்துக்கொண்டு அன்னியோன்ய விதிகளை மீறினார்வேண்டாம். எனக்குப் பயமாக இருக்கு.” “ஒண்ணும் ஆகாது. வா.” “எனக்கு நாள் கணக்குத் தெரியல்லன்னா. வேண்டாம்.” “கணக்குத் தப்பு.” “தூக்கம் வரது.” “நீ பாட்டுக்குத் தூங்கு.” “விடுங்கோ.” “நான் பார்த்துக்கறேன்.” அம்மா அசதியில் இருந்தாள். தனக்கு நிகழ்ந்ததில் பாதிதான் அவளுக்குத் தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் தூங்கிப்போய்விட்டார்கள். அம்மாவின் உள்ளுக்குள் இந்த முற்றுப்புள்ளி அளவுக்கு ஒரு சின்னச் சஞ்சல முட்டை காத்திருந்தது. அதன் அளவு சரியாகச் சொல்லப் போனால் 0.132 மில்லி மீட்டர். அந்தப் புள்ளியை நோக்கி அப்பா விடுவித்த லட்சக்கணக்கான குட்டி யாத்ரிகர்கள் அந்தப் புராதன உள்ளிருட்டில் குருட்டு யாத்ரிகர்களாக நெளிந்து நெளிந்து சென்றனர்
© 2025 PublishDrive (Ebook): 6610000972883
Release date
Ebook: July 10, 2025
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International