Listen and read

Step into an infinite world of stories

  • Read and listen as much as you want
  • Over 1 million titles
  • Exclusive titles + Storytel Originals
  • 7 days free trial, then €9.99/month
  • Easy to cancel anytime
Subscribe Now
Details page - Device banner - 894x1036

Arumugasamiyin Adugal

Language
Tamil
Format
Category

Fiction

1966ஆம் ஆண்டில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். பத்திரிகை, பிரசுரம் என்ற கவனிப்பு இன்றி, 150 சிறுகதைகள் எழுதி, 2007ஆம் ஆண்டில் வெளிவந்த கந்தசாமி சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம் பெற்றன. அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினாறு சிறுகதைகள் கொண்டதுதான் இந்நூல்.

இத்தேர்வில் இணைந்து செயல்பட்டவர் யுகன். அவர் ரசனையும் ஈடுபாடும் தேஜ்பூரிலிருந்து... தேடல், ஞானி இடம் பெறக் காரணமாகும். தேஜ்பூரிலிருந்து... தேடல் ஆகிய இரண்டு கதைகளும் ஆரம்ப காலக் கதைகள். ஓர் எழுத்தாளனுக்கு ஆரம்ப கால கதையென்று ஒன்றும் கிடையாது. ஏனெனில் அசல் எழுத்தாளனுக்கு எல்லாக் கதைகளும் ஆரம்ப காலக் கதைகள்தான். அவன் ஒவ்வொரு கதையையும் ஆரம்ப கால உற்சாகத்தோடும், கற்பனை வளத்தோடும் துடிப்போடுந்தான் எழுதுகிறான். எல்லாக் கதைகளிலும் அவன் இருக்கிறான், என்றாலும் காலம் என்பதோடு வளர்ந்து கொண்டிருக்கிறான் என்பது இல்லை. மீசை முளைப்பது, மயிர் நரைப்பது வளர்ச்சியோ, முதிர்ச்சியோ இல்லை. அது உடல் வளர்ச்சி. இலக்கிய வளர்ச்சி என்பது முதல் எழுத்திலேயே முதல் தரமான எழுத்தாகத்தான் இருக்கிறது என்பது இலக்கியச் சரித்திரந்தான். அது ஆறுமுகசாமியின் ஆடுகள் என் கதைகள் ஆழ்ந்த படிப்பின் வழியாக எழுதப்பட்டவை இல்லை. நான் எழுதுவதற்கென்று ஆராய்ச்சி ஏதும் செய்தது இல்லை. எதைப் பற்றியும் எழுத முற்பட்டதும் இல்லை. பெரிய நோக்கம் கொண்டு எதையும் எழுதவில்லை என்பது போல பெயர், புகழ், விருது பெறவேண்டும் என்ற சின்ன நோக்கம் கொண்டும் எழுதப்பட்டவை இல்லை. அதுபோல பிடித்தவர்களைப் புகழ்ந்தும், பிடிக்காதவர்களை நிலைகுலைய வைக்கும் நோக்கத்தோடும் எழுதவில்லை.

வாழ்க்கையின் விசித்திரத்தை, வாழ்க்கையின் புதிரான புதிரை, அறிய முடியாத விசித்திரங்களை, அதாவது இருப்பு என்பதை இருப்பாகவே எழுதப்பட்டக் கதைகள் என்று எழுதிய கதைகளைப் படித்த பின்னர் அறிந்து கொண்டேன். தெரியாத வாழ்க்கையைப் பற்றி எழுதியதைப் படித்துப் பார்த்து, எழுதி இருப்பதைத் தெரிந்து கொண்டேன். அதாவது தெரிந்து கொண்டு எழுதியதைவிட, தெரிந்து கொள்ளாமல் எழுதிய கதையாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். அது மகிழ்ச்சி அளித்தது. நீண்ட மரபாக அதுவே இருக்கிறது என்பது சொல்லப்பட்டதைக் கேட்டபோது, எழுதுவதில் ஆர்வங்கூடியது. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் பற்றி, நான் உரிமை கொண்டாட ஏதுமில்லை. இக்கதைகள் என்னால் எழுதப்பட்டவை என்பதற்கு மேல் அதன் மீது எந்த உரிமையும் கிடையாது. நன்றாக இருக்கிறது என்றாலும் சரி, நன்றாக இல்லை என்றாலும் சரி, அவை எழுதப்பட்டு பிரசுரம் பண்ணப்பட்டு விட்டன. அதன் மீது வாசிக்கிறவர்கள் தங்களின் சொந்த அபிப்பிராயத்தை முன்வைக்க எல்லாவிதமான தகுதிகளும் பெற்று இருக்கிறார்கள். அதற்கு மறுப்பு சொல்ல; விளக்கம் கூற எழுத்தாளன் என்ற முறையில் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒரு படைப்பு பற்றி படைப்பின் தரம் பற்றி அது உணர்த்தும் பொருள் பற்றி அதுதான் சொல்லும். அதைப் படைத்தவன்கூட சரியாகச் சொல்ல முடியாது என்பது பொதுவிதியாக இருக்கிறது. கதைகள் முடிவும் தொடக்கமும் அற்றவை. கடைசிப் பக்கத்தில் கதை முடிவதில்லை என்பது போல் முதல் பக்கத்தில் தொடங்குவதும் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் வேண்டி இருக்கிறது. ஒரு முடிவு அவசியமாகிறது. ஆனால் கதை முடியும் இடத்தில்தான் தொடங்குகிறது. ஏனெனில் வாழ்க்கை என்பது முடிவற்றதாக இருக்கிறது. முடிவுறாத வாழ்க்கையை முடிவுறாத தொனியில் சொல்லிப் பார்க்கும் முயற்சியாகவே கதைகள் எழுதப்படுகின்றன. அது ஒவ்வொரு வாசகரையும் தன்னளவில் தன் கதையை எழுதிக்கொள்ள வைக்கிறது. அதுதான் கதை என்பதன் கதை. எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனைக் கதைகள் இருக்கின்றன. அது எழுதப்பட்டதில் இருந்து எழுதப்படாத கதையாகவும் எழுதப்படாத கதையை எழுதவே ஒவ்வோர் எழுத்தாளனும் முயற்சி செய்கிறான். அது வெற்றி பெற வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஏனெனில் வெற்றி தோல்வி என்பது இலக்கியத்தில் இல்லை. தமிழர்கள் நவீன இலக்கியம் படிப்பது இல்லை என்று அடிக்கடி குறை சொல்லப்படுகிறது. அது அனாவசியம். இலக்கியப் படிப்பு அப்படியொன்றும் வாழ்க்கைக்குத் தேவையானது இல்லை. வாழ்வதுதான் முக்கியம். பணம் சம்பாதிப்பதுதான் அவசியம். பணம் சம்பாதிக்க ஆளாய்ப் பறக்கும் மனிதர்களால் இலக்கியம் படிக்க முடியாதுதான். எல்லார்க்கும் எல்லாம் என்பது கிடையாது. அக்கறை கொண்டவர்கள், ஈடுபாடு கொண்டவர்கள் படிக்கிறார்கள். அதன் பயனை அடைகிறார்கள். இலக்கியத்தில் பயன் என்று அறிந்து இருப்பதும் அறியாமல் வாழ்வதும் ஒன்றுதான். அது நல்வாழ்க்கை. ஆனால் நல்வாழ்க்கை என்பது தனியானது இல்லை. ஆனால் இலக்கியத்தைப் படித்து அனுபவிக்க உள்ள ஒரே வழி அதனைப் படிப்பதுதான். படிக்கிறவர்கள் பாக்கியசாலிகள் என்று அதன் காரணமாகச் சொல்லப்படுகிறார்கள். - சா. கந்தசாமி

Release date

Ebook: January 3, 2020

Others also enjoyed ...

  1. Kaatril Potta Kanakku Bhama Gopalan
  2. Sila Mugangalin Mugavarigal MK.Subramanian
  3. Ammavin Nizhal Vizhi Pa. Idhayaventhan
  4. Parisalil Oru Payanam G. Meenakshi
  5. Vaanampadi Kulashekar T
  6. Mupparimanam Padmini Pattabiraman
  7. Pavazha Maalai P.M. Kannan
  8. Kaatrukenna Veli Ushadeepan
  9. Paaraikkul Panneer Pushpam Mukil Dinakaran
  10. Gopuramum Bommaigalum Jyothirllata Girija
  11. Annapoorna Padmini Pattabiraman
  12. Kannadi Meengal Kavimugil Suresh
  13. Last Warning Vimala Ramani
  14. Meetchi Vaasanthi
  15. Vazhkkai Pon Kulendiren
  16. Thirumbi Varum Varai…. Lakshmi Subramaniam
  17. Thottuppaar Enrathu Kaala Kannadi Gurunathan Srinivasan
  18. Thiruppumunai Jyothirllata Girija
  19. Americavukku Azhaithu Pona Bharathirajavum Palpandiyanum Kalaimamani ‘YOGA’
  20. Ariviyal Thuligal Part - 10 S. Nagarajan
  21. Nandhavana Thendral Vimala Ramani
  22. Ariviyal Thuligal - Part 4 S. Nagarajan
  23. Ilakkiya Nizhal Harani
  24. Aagasa Kottai Lalitha Shankar
  25. Moothurai Uma Aparna
  26. Naan America Parkka Vendama? Isaikkavi Ramanan
  27. Thodarum Iniya Uravu Parimala Rajendran
  28. Neenga Yaar Pakkam? SL Naanu
  29. Manam Kavarndhavan Maharishi
  30. Marangalin Magathuvangal Surya Saravanan
  31. Orey Urimai Vindhan
  32. Nilave Nee Sol P.M. Kannan
  33. Azhukku Padatha Azhagu M. Kamalavelan
  34. Kanavu Minnalgal Lakshmi Rajarathnam
  35. Karaiyai Thedum Alaigal... Lakshmi Ramanan
  36. Muthana Mudhaluthavigal Pulavar Pon. Karuppiah
  37. Anupama Latha Mukundan
  38. Arasiyalum Nagaichuvaiyum Thuglak Sathya
  39. Johari Jannal S. Ramesh Krishnan
  40. Vazhkai Varame Parimala Rajendran
  41. Ithu Crazy Kudumbam Sairenu Shankar
  42. Vizhiyil Vizhundhu Idhayam Nuzhaidhu... Sudha Sadasivam
  43. Marakka Mudiyatha Mamanithargalin Marakka Mudiyatha Kadithangal Kalaimamani Sabitha Joseph
  44. Athu Oru Kanakaalam Dr. J. Bhaskaran
  45. Thisai Thedum Paravaigal Hamsa Dhanagopal
  46. Tharangini Maharishi
  47. Pavithra Kalaimamani Kovai Anuradha

This is why you’ll love Storytel

  • Listen and read without limits

  • 800 000+ stories in 40 languages

  • Kids Mode (child-safe environment)

  • Cancel anytime

Unlimited stories, anytime
Time limited offer

Unlimited

Listen and read as much as you want

9.99 € /month
  • 1 account

  • Unlimited Access

  • Offline Mode

  • Kids Mode

  • Cancel anytime

Try now