Step into an infinite world of stories
Fiction
இந்தப் புத்தகம் என் கட்டுரைகளின் தொகுப்பு. மிகச் சமீபத்தில் எழுதியவைகளும், பல வருஷங்களுக்கு முன்பு எழுதியவைகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.
இசை விமரிசகர்களைப் பற்றி ஒரு குறும்பு வாசகம் உண்டு: "பாடத் தெரிந்தவன் பாடுகிறான்; பாடத் தெரியாதவன் விமரிசகனாகிறான்!" இன்றைய இன்டர்நெட் உலகில் அதைச் சிறிது மாற்றிச் சொல்கிறார்கள்: "எழுதத் தெரிந்தவன் எழுதுகிறான்; எழுதத் தெரியாதவன் 'பிளாக்'கைத் துவங்கி, தானே எழுதி, தானே பிரசுரித்துக் கொள்கிறான்." (தானே பாராட்டிக் கொள்ளவும் செய்கிறான்!)
நானும் 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 'கடுகு தளிப்பு' என்ற பெயரில் ஒரு 'பிளாக்'கைத் துவங்கி இந்த மூன்றையும்… இல்லை, இல்லை, முதல் இரண்டையும் செய்துவந்து கொண்டிருக்கிறேன்!
நான் பார்த்தது, படித்தது, கேட்டது, ரசித்தது, 'சுட்டது' எல்லாவற்றையும் போட்டு வருகிறேன். என் அனுபவங்களையும், பல கற்பனைக் கட்டுரைகளையும் பிரசுரித்து வருகிறேன். அதில் வரும் கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. (இதைக் கற்பனை என்று நீங்கள் கருதினாலும் தப்பில்லை!)
ஐம்பது வருஷங்களுக்கு மேலாக புத்தகசாலைகளை விடாமல் படையெடுத்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமான, சுவையான விஷயங்களை நோட்டு நோட்டாக எழுதி வைத்திருக்கிறேன்.
எண்பதாவது வயதில் (முட்டியைப் பிடித்துக்கொள்ளாமல்!) காலெடுத்து வைக்கும் தருணத்தில், இப்படியொரு தொகுப்பை வாசகர்களுக்கு அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியையும் மன நிறைவையும் நான் பெறுகிறேன்.
என் வாழ்க்கையில், என் தகுதிக்கு மீறிய பலரை அணுகவும், அவர்களுடன் சிறிது பழகவும், கடவள் வாய்ப்பளித்தற்கு நான் என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை. ஆண்டவனுக்கு நான் எப்படி நன்றி தெரிவிப்பேன்!
இந்த கட்டுரைகளுக்கு ஜீவன் ஊட்டுபவை இவற்றில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள். குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாகப் படம் வரைந்து தந்த நண்பர் ஓவியர் 'சுமன்’ அவர்களுக்கு என் நன்றி உரித்தாகும்.
என் நினைவிலும் வாழ்விலும் எனக்குத் தெய்வமாக விளங்கும் அமரர் கல்கி அவர்களின் பொற்பாத கமலங்களை, சிரத்தால் வணங்கி, கண்களில் ஒற்றிக் கொண்டு இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன். அவருடைய ஆசி எனக்கு என்றும் கிடைப்பதாக!.
- பி. எஸ். ரங்கநாதன் (என்னும்) அகஸ்தியன் (என்னும்) கடுகு
Release date
Ebook: January 3, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International