Step into an infinite world of stories
Fiction
கோவை மாநகருக்கு அருகில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வெள்ளலூர் ஆதித் சக்திவேல் அவர்களின் சொந்த ஊர். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் அரசு கலைக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். முழு ஈடுபாட்டோடு 2015 முதல் கவிதைகள் புனைந்து வரும் இவர் முதலவதாக வெளியிட்ட கவிதைத் தொகுப்பு “நொய்யலின் நினைவுகள்”. சூழலியல், சமூக விழிப்புணர்வு, உலக நிகழ்வுகள், சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு முற்போக்குக் கவிதைகள் படைத்து வருகிறார்.
இது வரை “நொய்யலின் நினைவுகள்”,”தாழப் பறந்த விமானம்”,”கங்கையாய் மாறிய கிணறு”, “நொய்யலின் கண்ணீர்”,”எங்கே என் மழைக் காடுகள்?”மற்றும் “வேரைத் தேடி வந்த விழுதுகள்”ஆகிய ஆறு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தற்போது “காலம் எனும் காட்டாறு “ என்னும் கவிதைத் தொகுப்பு அவரது ஏழாவது தொகுப்பாக வெளிவருகிறது.
இக்கவிதைத் தொகுப்பில் பல்வேறு தலைப்புகளில் 25 கவிதைகள் இடம் பெறுகின்றன. நொய்யலின் மீது தீராப் பற்று கொண்ட கவிஞர் ஆதித் சக்திவேல் அவர்களின் முதல் கவிதையே, மாசடைந்து ,நீர் ஓட்டமின்றி ,வறண்டு கிடக்கும் நொய்யலைப் பற்றிய கவிதை.கவிதையின் தலைப்பு :”நொய்யலின் கண்ணீர்”.
காதலை இழப்பினும் வாழ்க்கையை இழக்க விரும்பா பெண் ஒருத்தி பற்றிய கவிதை” காலம் எனும் காட்டாறு”என்னும் கவிதை.அக்கவிதையின் தலைப்பே கவிதைத் தொகுப்பிற்கும் தலைப்பாக அமைந்துள்ளது.
“வெறும் மாதமல்ல ஜூன் எனக்கு” சற்று வித்தியாசமான கவிதை.வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பருவ மழை சில ஆண்டுகளாகப் பெய்வதில்லை.ஜூன் மாத மழையை இழந்த கவிஞரின் உணர்வுகள் இக்கவிதையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“ஜனநாயகம் பிழைத்தது ஜனவர் 20-இல்”,சிரிய மண்ணில் சிந்திய ரத்தம்”,”உன்னை மன்னிக்க மனம் இல்லை சூச்சி”,” ஒரு மியான்மெர் தமிழ் அம்மாவின் கடிதம்”,”உலக மக்களே உக்ரைனுக்கு வாருங்கள்”ஆகிய கவிதைகள் அகில உலக நிகழ்வுகளை மையக் கருத்தாக்கி படைக்கப்பட்டவை.
“வலையின் விலை” என்னும் கவிதை, WWW-இல் மூழ்கி, தம் பொன்னான நேரத்தையும் வாழ்வையும் இழந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் தருகிறது.
மணமுறிவை (விவாகரத்துப்) பற்றிப் பேசும் கவிதை “மணமுறிவல்ல இது மனமுறிவு”.மணமுறிவுக்குரிய காரணங்களை விரிவாக அலசுகிறது இக்கவிதை.இறுதியில் மனமுறிவே மணமுறிவுக்கு காரணம் எனும் தெளிவைத் தருகிறது.
இது போல் இன்னும் மனதை நெகிழ வைக்கும் பல சூழல்களை,நிகழ்வுகளை இத்தொகுதியில் உள்ள கவிதைகள் உணர்வு பூர்வமாகப் பேசுகின்றன.
கவிதைகள் ஒவ்வொன்றும் சமுதாயத்தைக் காட்டிடும் விழியாக அமைந்து, வாழ்வின் சாரத்தை எடுத்தியம்பும் மொழிகளாக,கண்களில் கசிந்து சூடேற்றும் துளிகளாக விளங்குகின்றன.
Release date
Ebook: March 7, 2025
Tags
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International