Step into an infinite world of stories
Religion & Spirituality
நான் கேள்விப்பட்டவரை, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் மதுரையிலிருந்து திருவண்ணாமலை அடைந்தபின் வேறெந்த ஊருக்கும் தன் பூத உடல் கொண்டு சென்றதில்லை. சூக்ஷ்ம உடல் கொண்டு சென்னை அருகே திருவொற்றியூர் சென்றதையும், அவருக்கே தெரியாது ஏதோ அதிசயம் நடந்தது போலத்தான் சொல்லியிருக்கிறார். அங்கு ரமணர் வந்ததை, அவரது சீடரான கணபதி முனியும் உறுதிப்படுத்திருக்கிறார். அதேபோல அவர் எவருடைய வீட்டிற்கும் தன் இச்சை கொண்டு சென்றதில்லை. ஒரு முறை வலுக்கட்டாயமாக வண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்.
ஒரே ஒரு முறை தவிர அவர் வெளியே எங்கு சென்றும் உபன்யாசம் செய்ததாகக் கேள்விப் பட்டதில்லை. சில அன்பர்களுடன் ஒரு முறை கிரி வலம் சென்று கொண்டிருந்தவர் ஈசான்ய மூலையில் உள்ள ஈஸான்ய தேசிகர் மடத்தின் பக்கம் வந்தார். அங்கு பிரவசனம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. ரமணர் வருவதைப் பார்த்ததும், அங்கிருந்தோர் மிகவும் வற்புறுத்தி வேண்டிக்கொண்டதால் பகவத் கீதையைப் பற்றி ஒரு சொற்பொழிவு கொடுத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதேபோல, பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் படைப்புகளில் வெகுச் சிலவே அவருக்காகத் தோன்றி அவர் எழுதியது. மற்றவை எல்லாமே யாராவது ஒரு அன்பர் அவரிடம் விளக்கம் கேட்டதாலோ, அல்லது வேண்டிக்கொண்டதாலோ உருவானவைகள் தான். ஸ்ரீமத் பகவத் கீதையைத் தினப் பாராயணத்திற்கு ஏற்றவாறு சுருக்கித் தருமாறு குர்ரம் சுப்பராமய்யா என்ற அடியார் ரமணரிடம் கேட்டதன் பலனாகவே நமக்கு அவரது பகவத்கீதாசாரம் கிடைத்தது.
மூலத்தில் உள்ள எழுநூறு சுலோகங்களிலிருந்து ரமணர் நாற்பத்திரண்டை தேர்ந்து எடுத்து அன்பரது நித்ய பாராயணத்திற்கு எனத் தொகுத்துக் கொடுத்தார். கீதையின் சாராம்சத்தை விளக்குவதாக மட்டும் அல்லாது, ரமணர் போதிக்கும் "நான் யார்?" எனக் கேட்டு ஒருவன் ஆன்ம விசாரம் செய்வதன் நோக்கத்தையும், முறையையும், பலனையும் விளக்குவதாக அது அமைந்துள்ளது. பகவத் கீதையின் வெவ்வேறு அத்தியாயங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முன்னுக்குப் பின் கோர்க்கப்பட்டிருந்தாலும், அந்தக் கோவையில் ஒரு முறையையும், அழகையும் காணலாம்.
முதலில் தம் தேர்வின் மூலம் கீதையின் சாரத்தைக் கொடுத்தவர், நம் பொருட்டு சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை தமிழில் மொழி பெயர்த்து வெண்பா வடிவிலும் கொடுத்திருக்கிறார். வாசகர்கள் எளிதில் வாசிக்கும் பொருட்டு அந்த வெண்பாவில் வரும் சொற்றொடர்களைப் பிரித்து இந்த நூலில் எழுதியிருக்கிறேன். ஒவ்வொன்றின் வடமொழி மூலத்தையும், அவைகளோடு கொடுத்துள்ளேன்.
ரமணரின் ஞான நெறி விளக்கங்களையும் இங்கு வரும் கீதையின் கருத்துக்களையும் ஒப்பு நோக்கினால், கீதையின் போதனைகளை நம் முன் வாழ்ந்து காட்டிய விதேக முக்தரான ரமணர் மூலம் கீதாசாரியனின் அருள் நமக்குக் கிடைத்துக்கொண்டிருப்பதை நாம் உணரலாம்.
முன்பு தமிழ்ஹிந்து இணைய தளத்தில் (www. tamilhindu.com) இந்தக் கட்டுரைகளை ஒரு தொடராக எழுதி வந்தேன். இதனை ஸ்ரீ ரமணாஸ்ரமம் வெளியிட்டுள்ள திருமதி. கனகம்மாள் எழுதிய "ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை"யின் துணைகொண்டே எழுதியிருக்கிறேன். அவர்கள் வெண்பா, பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை என்று எழுதியதில் நான் பதவுரையைத் தவிர்த்து மற்றதெல்லாம் அவர்களைப் போலவே எழுதியுள்ளேன். ஒவ்வொரு வெண்பாவிற்கும் அவர் எழுதியதைப் படித்து, உள்வாங்கி, பின் எனக்குத் தெரிந்த சிலவற்றையும் சேர்த்து எழுதியிருக்கிறேன்.
எஸ். ராமன்
Release date
Ebook: February 5, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International