ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4
นอนฟิกชั่น
கவசம் என்பது சமய இலக்கிய நூல் வகைகளில் ஒன்று. 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறிப்பின் பெயராகச் சொல்லி இறைவனை வேண்டுதல் போல இது அமையும். உறுப்புக்களை தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ்வேண்டுதல் அமையும். தமிழில் வெளியிடப்பட்ட கவச நூல்கள் ஆறு: சிவகவசம், கந்தசஷ்டிகவசம், சண்முககவசம், சத்திகவசம், விநாயககவசம், நாராயணகவசம்
சிவ கவசம் 16 ஆம் நூற்றாண்டில் வரதுங்கராமர் பாடிய பிரமோத்தர காண்டம் என்னும் நூலின் பகுதி. உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பின் பெயரையும் சொல்லி அதனைச் சிவன் காக்கவேண்டும் என்று இந்த நூல் பாடுகிறது. இந்த நூலில் 12 பாடல்கள் உள்ளன. கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். இதன் காலம் 19ஆம் நூற்றாண்டு. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். சண்முக கவசம் என்பது, முருகப் பெருமான் மீது பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக 30 பாடல்கள் அத்தொகுப்பில் அமைந்துள்ளன. அகர வரிசையில், அ-னாவில் தொடங்கும் இப்பாடல் தொகுப்பானது, அ முதல் ஔ வரையிலான உயிரெழுத்துகளையும், க முதல் ன வரையிலான மெய்யெழுத்துகளையும் முதல் எழுத்துகளாக கொண்டு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பட்டுள்ளது. சத்தி கவசம் என்னும் தமிழ்நூல் 12 பாடல்கள் கொண்டது. அதிவீரராம பாண்டியர் எழுதிய காசி காண்டம் என்னும் நூலின் 72ஆம் அத்தியாயம் வச்சிர பஞ்சர கவசம். சத்தி கவசம் என்றும் கூறுவர். நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. துர்க்கையின் உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் இன்னின்ன அம்சம் என்று கூறி அது தன்னைக் காக்கவேண்டும் என்று கூறுவது சத்திகவசம். சத்தி கவசம் படித்தால் நோய் அண்டாது, திருமணம் ஆகும், வெற்றி கிட்டும் என்றெல்லாம் நம்பி இந்தக் கவசத்தை மனப்பாடம் செய்து பாடுவர். விநாயக கவசம் என்னும் கவச நூல் 16 ஆம் நூற்றாண்டில் கச்சியப்ப முனிவரால் பாடப்பட்ட விநாயக புராணத்தின் ஒரு பகுதி. இதில் ஒன்பது விருத்தப் பாடல்கள் உள்ளன. நாராயண கவசம் என்னும் நூல் பற்றிய செய்தி பாகவதம் ஆறாம் கந்தம் என்னும் பிரிவில் வருகிறது. நாராயண கவசத்தில் 25 பாடல்கள் உள்ளன.
© 2023 Ramani Audio Books (หนังสือเสียง ): 9798868662171
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 19 กันยายน 2566
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย