ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
แฟนตาซี&ไซไฟ
மெல்லிய இழைகளாக வாசலில் கோலமிட்டாள் யாமினி. அவள் விரல் அசைவில் அழகான தாமரை மலர் மலர்ந்து சிரித்தது. ஆட்டோ வந்து நிற்க இறங்கினாள் வர்ஷினி. பேக்கை. கையில் எடுத்தவள், பணத்தை ஆட்டோக்காரனிடம் கொடுக்க, ஆட்டோ கிளம்பி செல்ல, கோலப்பொடியை இடது கைக்கு மாற்றியவள், வர்ஷியிடமிருந்த பேக்கை வாங்கினாள். ‘‘வாக்கா... அத்தான்... அத்தை, மாமா நல்லாயிருக்காங்களா?’’ ‘‘ம்...ம்...’’ கதவைத் திறந்து உள்ளே போக, பின் தொடர்ந்தாள் யாமினி. “வாம்மா... வர்ஷினி... நல்லாயிருக்கியா?’’ முகத்தை துண்டால் துடைத்தபடி வந்தார் சத்யன். ‘‘எப்படிப்பா... நல்லாயிருக்கிறது. என்னை தான் கல்யாணங்கிற பேரில் பாழும் கிணற்றில் தள்ளிட்டிங்களே... வீடாப்பா அது நரகம். புறப்பட்டு வந்துட்டேன்.” எரிச்சலுடன் கல்யாணமாகி ஆறு மாதங்களே ஆன மகள் பேசும் பேச்சில் மெளனமாக நின்றார். அவளே திரும்பவும் பேசத் தொடங்கினாள். ‘‘எதை செய்தாலும் குற்றம், குறை தான். வீட்டில் அத்தை, மாமா ராஜ்யம் தான் நடக்குது. இவர் எதையும் கண்டுக்கிறதில்லை. அப்படியே நான் ஏதாவது சொன்னாலும், பெரியவங்க கொஞ்சம் முன்னே, பின்னேதான் இருப்பாங்க. நம்ப நல்லதுக்கு தான் சொல்றாங்கன்னு எடுத்துக்கணும் வர்ஷினி.எனக்கு தான் உபதேசம் பன்றாரு. “சரி, உனக்கு மனசு சரியில்லன்னா ஒரு வாரம் தங்கையோடு இருந்துட்டு வான்னு சொன்னாரு. புறப்பட்டு வந்துட்டேன்.” இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். கல்யாணமான இந்த ஆறு மாதத்தில் இதை போல நான்கு முறை வந்து விட்டாள். ஒரு வாரம் இதம்பதமாக பேசி, அக்காவின் மனதை மாற்றி, மாப்பிள்ளை ரகுவிடம். ‘‘மகளை கொஞ்சம் செல்லமாக வளர்த்துட்டேன். மாப்பிள்ளை நாளானால் மனுஷங்களை புரிஞ்சுப்பா. நீங்கதான் கொஞ்சம் அனுசரிச்சு போகணும்” பவ்யமாக சொல்லி அனுப்பி வைப்பார். ‘‘அப்பா, உங்க கையால டிகாஷன் காபி சூடாக கொடுங்கப்பா ராத்திரி பஸ்ஸில் வந்தது. சரியான தூக்கமில்லை. தலை வலிக்குது.” அப்பா திரும்ப, ‘‘நீங்க இருங்கப்பா, நான் போய் காபி கலந்து எடுத்துட்டு வர்றேன்.” யாமினி சொல்ல, ‘‘பரவாயில்லம்மா... நானே கொண்டு வர்றேன். அக்காவோடு பேசிட்டு இரு.’’ ‘‘என்னக்கா... நீ...எதுக்காக அப்பா மனசு கஷ்டப்படற மாதிரி பேசற. ராஜா மாதிரி மாப்பிள்ளை பார்த்து தானே உனக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு...” ரகு அத்தானும்... பாங்கில் வேலைபார்க்கிறார். கை நிறைய சம்பாத்தியம். சொந்த வீடுன்னு வசதிகளோடு இருக்காரு. நீ கொஞ்சம் குடும்பத்தை அனுசரிச்சு போகக் கூடாதா... பாழும் கிணற்றில் தள்ளிட்டிங்கன்னு. அவர் மனசு புண்படும்படி பேசற. அக்காவை கடிந்து கொள்கிறாள் யாமினி. எரிச்சலை அடக்கியபடி, ‘‘உனக்கென்னடி தெரியும். அங்கே வந்து பாரு. அப்பதான் நான் படற பாடு புரியும்.சமையலை முதலில் முடி. ரகு கிம்பிட்டான் இட்லி அடுப்பை பற்றவை. வெள்ளிக் கிழமை குளிச்சுட்டு வா... ராத்திரியே டிகாஷன் போட்டு வை... எல்லாம் அதிகாரம் தான்., அம்மா இருந்தாலும் அவள் மடியில் படுத்து ஒரு குறை அழலாம். நமக்கு தான் அந்த கொடுப்பினை இல்லையே... அப்பாவுக்கு நம்ப மனசு எப்படி தெரியும்? ஆம்பிளை இல்லையா... என்னை தான் சமாதானம் பண்ணி அனுப்பி வைக்கிறாரு. அம்மா இருந்தா... என் மகளை எப்படி வேலைக்காரி போல நடத்தலாம்னு அவங்க கிட்டே சண்டைக்கு போயிருப்பாங்க. எல்லாம் விதி. இப்படி அனாதையாக வளரணும்னு தலையில் எழுதியிருக்கு... பெத்தவ முகத்தை பார்க்க கூட கொடுத்து வைக்காத பாவிதானே நாம். அம்மா இறந்த கையோடு வீட்டில் நடந்த தீ விபத்தில்... எல்லா பொருட்களும் கரியாகி போச்சு... “அவங்க நினைவாக ஒரு போட்டோ கூட இல்லை. எப்படிப்பட்ட பாவம் பண்ணியிருக்கோம்.’’ நீட்டி முழக்கி பேசும் அக்காவை பார்க்கிறாள் யாமினி. ‘‘அம்மா இல்லாத குறை தெரியாம வளர்த்தவர் நம் அப்பா. இப்படி பேசறதை முதலில் நிறுத்து. இல்லாத அம்மாவுக்காக உருகாம இருக்கிற அப்பாவின் மனசு குளிரும்படி நடந்துக்க. மனுஷங்களை புரிஞ்சுக்க முயற்சி செய்க்கா. அம்மா அம்மான்னு உருகுறியே... உன் அத்தை கிட்டே அம்மாவை பார்க்கப் பழகு. இப்படி குறை சொல்ல மாட்டே.’’ மனக்குமுறலை மறைத்தபடி வேகமாக எழுந்து போகிறாள் யாமினி
© 2024 Pocket Books (อีบุ๊ก ): 6610000531462
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 กุมภาพันธ์ 2567
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย