ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
แฟนตาซี&ไซไฟ
“நம்பிக்கைங்கிற தலைப்பில் எல்லாரும் கட்டுரை எழுதி, நாளை எடுத்துட்டு வரணும், சரியா?” ஒன்பது, பத்து வயதில் அவள் முன் உட்கார்ந்திருக்கும் ஐந்தாறு சிறுவர், சிறுமிகள் தலையாட்டுகிறார்கள். “அக்கா நான் நல்லா படிச்சு பெரிய ஆபிசராக வருவேன்னு நினைக்கிறேன். அதுவும் நம்பிக்கைதானே.” “எண்ணங்கள்தான் நம்மைசெயல்படுத்துது சுமி. மனசுக்குள் ஒன்றையே நினைத்து செயல்படும்போது அது நிறைவேறுவதற்கான வழியும் பிறக்கும். நீ விருப்பப்படி பெரியவளாகி, ஆபிசராகி, உன் அம்மா, அப்பாவை பெருமைப்படவைப்பே.” “தாங்க்ஸ் அக்கா....” கண்களில் ஒளிதெரிய கள்ளமில்லாமல் சிரிக்கிறாள் அந்த சிறுமி. செருப்பை வாசலில் கழட்டிவிட்டு, ஒருக்களித்து இருந்த கதவை திறந்து உள்ளே வருகிறார் சம்பத். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தந்து கொண்டிருந்த நந்தினி... “பெரியப்பா... வாங்க...” வரவேற்கிறாள்... “அப்பா இருக்கானா நந்தினி. என்ன பிள்ளைகளுக்கு டியூஷனா?” கேட்டபடி வர... “சரி. எல்லாரும் கிளம்புங்க. நாளைக்கு வரலாம்.” புத்தகப் பையை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓட... “உட்காருங்க பெரியப்பா... இதோ அப்பாவை கூப்பிடறேன்.” அதற்குள் அண்ணனின் குரல் கேட்டு உள்ளிருந்து வேகமாக வருகிறார் சதாசிவம். “அண்ணா வாங்க, வாங்க... அண்ணி வரலையா... நீங்க மட்டும்தான் வந்தீங்களா... ப்ரக்யா நல்லா இருக்காளா...”அண்ணனை பார்த்த சந்தோஷம் அவர் முகத்தில் தெரிகிறது. “எல்லாரும் நல்லா இருக்கோம். உள்ளூரில் இருக்கோம்னுதான் பேரு. பார்க்கக்கூட முடியலை. இத்தனைக்கும் இரண்டு பேரும் ரிடையர்ட் ஆயிட்டோம்.” சிரிப்புடன் சொன்னவர்... “ரமேஷ் ஸ்கூல் போயிட்டானா?” “ப்ளஸ்டூ இல்லையா... ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சீக்கிரமே போயிட்டான்.” “பெரியப்பா... காபி எடுத்துட்டு வரட்டுமா. அம்மா குளிச்சுட்டு இருக்காங்க...” “என்னம்மா கேள்வி. போய் எடுத்துட்டு வா...” சதாசிவம் சொல்ல. “வேண்டாம் சதா... இப்பத்தான் வீட்டில் சாப்பிட்டு வந்தேன். நீ ஏன் நிக்கிறே... உட்காரு...” அண்ணன் முன் பவ்யமாக நிற்கும் சதாசிவம். எதிரில் இருந்த ஸ்டூலில் உட்காருகிறார். தம்பியை பார்க்கிறார் சம்பத். சிறு வயதிலிருந்து இன்றுவரை அண்ணன் என்ற மரியாதை குறையாமல் நடக்கிறான். இருவருக்குமிடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், பாசம், அன்பில் கடுகளவும் குறையாமல். அண்ணன் கவர்ன்மெண்ட் வேலையிலிருந்து நன்கு சம்பாதித்து வீடு வாசல் என்று சகல வசதிகளோடு இருக்கிறார் என்று பொறாமைப்படாமல். ஸ்கூல் டீச்சராக இருந்து வாடகை வீட்டில் சொற்ப வருமானத்தில் மகன், மகள் என்று செலவுகளை சமாளித்து வாழ்கிறார். அவரவருக்கு என்ன கொடுப்பினை இருக்கோ அதுதானே கிடைக்கும். அண்ணன் வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்தபோது ஓடி, ஓடி உழைத்தவர் அவர்தான். எங்கண்ணன் நல்லா இருந்தா நான் நல்லா இருக்கிற மாதிரி. உன்னை பார்த்தால் ஆச்சரியமாக இருக்குப்பா... எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம. அண்ணன் கூப்பிட்டாருன்னு பத்து நாளா ஒரு வேலைகாரனை போல உழைக்கிறே. உன் மனசு எனக்கு கிடையாதுநானாக இருந்தால் பொறாமையிலேயே வெந்து போயிருப்பேன்... கிரகப்பிரவேசம் வீட்டில் தூரத்து உறவு முறை ஒருவர் சதாசிவத்திடம் சொல்ல... யாரை பார்த்து யார் பொறாமைப்படறது. அவர் என் ரத்தம். எங்கண்ணன் புத்திசாலி. என்னை விட அதிகம் படித்தார். நல்ல வேலை கிடைச்சு. அண்ணியின் குடும்ப நிர்வாகத்தில் இன்னைக்கு வீடு கட்டியிருக்கிறார். அது எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கு தெரியுமா. எங்க பரம்பரையில் எல்லாரும் சராசரியாக வாழ்ந்தாங்க... சொந்த வீடு இல்லை. இப்ப எங்கண்ணன் தலையெடுத்து வீடு கட்டியிருக்கிறார். பெருமைப்பட வேண்டிய விஷயத்தை பார்த்து பொறாமைப்பட முடியுமா... தயவு செய்து என்கிட்டே இப்படி பேசாதே... அன்பு, பாசத்தில் இணைஞ்சிருக்கிற எங்களை இப்படியெல்லாம் பேசி பிரிக்க பார்க்காதீங்க... தம்பியின் பேச்சை அங்கு எதேச்சையாக வந்த சம்பத் கேட்டு மனம் நெகிழ்ந்தார். இப்படியொரு உடன்பிறப்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
© 2024 Pocket Books (อีบุ๊ก ): 6610000531202
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 12 กุมภาพันธ์ 2567
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย