ฟังและอ่าน

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด

  • อ่านและฟังได้มากเท่าที่คุณต้องการ
  • มากกว่า 1 ล้านชื่อ
  • Storytel Originals ผลงานเฉพาะบน Storytel
  • 199บ./ด.
  • ยกเลิกได้ทุกเมื่อ
เริ่ม
Details page - Device banner - 894x1036

வீசுகின்ற காற்றில் விளைகின்ற சுகமே..!

ภาษา
ภาษาทมิฬ
รูปแบบ
คอลเลกชัน

นิยาย

தந்தையின் அறையிலிருந்து, நித்யானந்தன் வெளியே வருவதற்காகவே காத்திருந்த மாதிரி, அவன் தாய் மதுரம் ஹால் சோஃபாவிலேயே, உட்கார்ந்திருந்தாள். பயண விவரங்களையும், ஆங்காங்கே அவன் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், அவர்களால், நிறுவனத்துக்கு ஏற்படக்கூடிய பலன்களையும் பற்றி அவன் எழுதி வைத்திருந்த குறிப்பைத் தந்தையிடம் கொடுத்துவிட்டு, பயணம் பற்றி மேலும் விலாவாரியாக நித்யானந்தன் பேசத் தொடங்கியபோது, ‘வேண்டாம்’ என்பது போல லேசாகத் தலையசைத்தார், விசுவநாதன். “என்னப்பா? தூக்கம் வந்துவிட்டதா?” என்று, சற்று வியப்புடன் கேட்டான் மகன். ஏனெனில், ஒரு வேலை என்று தொடங்கிவிட்டால் அதை முடிக்கும் வரை, பசி, தூக்கம், போன்ற உடலின் சுகங்களைப் பற்றி, அதிகம் நினைக்கக் கூடாது என்று, அவனுக்குக் கற்றுக் கொடுத்தவர் அவர்தான். தேவைக்கு மட்டுமே, உணவு, உறக்கம் என்று வைத்துக் கொள்ள வேண்டும் என்பார். ‘ஊருக்குத்தான் உபதேசம், எனக்கல்லடி கண்ணே’ என்கிற மாதிரியில்லாமல், அவரும், அதைக் கடைப்பிடிப்பவரும் கூட எனவே, நள்ளிரவு வரை நீளும் என்று, நித்யானந்தன் எதிர்பார்த்த பேச்சை, அவர் இடையிலேயே நிறுத்தியது, அவனுக்கு ஆச்சரியத்தை அளிக்கவும்தான் தூக்கத்தைப் பற்றி, அவன் விசாரித்ததே. கூடவே, சிறு கவலையும். ஒருவேளை, அப்பாவுக்கு உடல் நிலை ஏதும் சரியில்லையா? லேசாக முறுவலித்து, மறுப்பாக மீண்டும் தலையசைத்தார் அவர். “ஒரு மகனின் பொழுதில், தகப்பனாருக்கு உள்ள உரிமை, தாயாருக்கு இருக்கிறதாம். வேலை வேலை என்று, அதே சாக்காக உன்னை என்னுடனேயே வைத்துக் கொள்ளுகிறேனோம். உன் அம்மா போர்க்கொடி தூக்கியிருக்கிறாள். போராட்டம் வலுத்து விடு முன் போய் என்னவென்று கேட்டுவிடு” என்று சிரித்தார், அவர்கவலை அகன்றவனாக இருக்கையை விட்டு எழுந்து, “அப்படியானால் இந்தப் பேச்சை, நாளைக் காலை தொடரலாம். அப்பா, குட்நைட்” என்று, அறையை விட்டு வெளியேறினான். ஹாலில் அமர்ந்திருந்த தாயாரைப் போலவே, அவள் பேசிய விஷயமும் அவன் எதிர்பார்க்காததாகத்தான் இருந்தது. வழக்கம் போலவே, ‘மருமகளையும் பேத்தியையும், எப்போது அழைத்து வரப் போகிறாய்’ என்றுதான் மதுரம் கேட்டாள். என்ன, கேள்வியில் அழுத்தமும், ஆதங்கமும் சற்று அதிகமாக இருந்தது. மகன் வழக்கம் போல, “வருவாள் அம்மா” எனவும், மதுரத்துக்குக் கோபமே வந்துவிட்டது. “என்னடா வருவாள்? பிரியா, பிள்ளை பெறப் போய் எத்தனை மாதம் ஆகிறது? மாதம் என்பானேன்? ஓர் ஆண்டுக்கும் மேலாக ஆகிவிட்டதே! இப்படி, எங்காவது நடக்குமா? ‘முதல் பிள்ளை, அம்மாவுடன் இருக்க ஆசைப்படுகிறேன்’ என்றாள். சரியென்று, ஐந்தாம் மாதக் கடைசியிலேயே அனுப்பி வைக்கவில்லையா? அப்போதே, நாலுமாதம் அங்கே இருந்தாள். குழந்தை பிறந்து. இப்போது, அதற்கும் ஒன்பதாம் மாதம் நடக்கிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக மருமகள் பிறந்த வீட்டிலேயே இருந்தால், பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள்? ஏதேனும் தகராறா என்று மாதர் சங்கத் தலைவி கேட்கிறாள். நான் என்ன பதில் சொல்லட்டும்?” என்று கோபமும் வருத்தமுமாகக் கேட்டாள். கண்ணில் சிரிப்புடன் மகன் ஏதோ பேசத் தொடங்கவும், “நம் வீட்டு விஷயத்தில் அவளுக்கென்ன, வந்தது என்று கிறுக்குத்தனமாக எதையாவது சொல்லாதே, வாழ வந்த பெண், ஓர் ஆண்டுக்கும் அதிகமாகப் பிறந்த வீட்டில் உட்கார்ந்திருந்தால், பார்க்கிறவர்கள் என்னென்னமோ பேசத்தான் செய்வார்கள். உன் மாமியாருக்காவது தெரியலாம். மகள் பிள்ளை பெற்றால் ஒருநாள் புருஷன் வீட்டுக்குக் கூட்டிப் போய், விட்டு வர வேண்டாமா? பேத்தியைப் பிரிய மனம் இல்லை போல. ஆனால், பேத்தியைத் தூக்கிக் கொஞ்ச எனக்கு மட்டும் ஆசையாய் இராதா? பிரியாவுக்கும் இதுதான் அவளுடைய சொந்த வீடு என்பதே இல்லையடா. பார்த்துப் பார்த்து எவ்வளவு செய்தாலும், அவளுக்குப் பிறந்த வீட்டை விட்டுவர மனமே இல்லையே!” என்று மதுரம் வருத்தப்பட்டாள்

© 2025 PublishDrive (อีบุ๊ก): 6610000771134

วันเปิดตัว

อีบุ๊ก: 8 เมษายน 2568

คนอื่นก็สนุก...

ทุกที่ ทุกเวลากับ Storytel:

  • กว่า 500 000 รายการ

  • Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)

  • ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์

  • ยกเลิกได้ตลอดเวลา

ที่นิยมมากที่สุด

Unlimited

สำหรับผู้ที่ต้องการฟังและอ่านอย่างไม่จำกัด

199 บ. /เดือน
  • 1 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • 1 บัญชี

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม

Family

สำหรับผู้ที่ต้องการแบ่งปันเรื่องราวกับครอบครัวและเพื่อน

349 บ. /เดือน
  • 3 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • ฟังได้ไม่จำกัด

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม