ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
அஜய் வெள்ளிநிற மேல்பூச்சைத் துடைக்கத் துடைக்கப் பொற்சிலையாள் மின்னத்தொடங்கினாள். அவளது நகைகளில் பதிக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற கற்கள் இப்போது ஒளியை வண்ணச் சிதறல்களாகப் பிரதிபலித்து அக்கூடமெங்கும் அள்ளித் தெளித்தன. அவளது நுண்ணிய மகுடத்தை கோஹினூரை விடப் பெரிய வைரமொன்று அலங்கரித்தது. அதைச் சுற்றிலும் மஞ்சளும் நீலமுமாக வைர வரிசைகள் கிளம்பி சூரியக் கதிர்களைக் கேலிசெய்வனபோல் நீண்டு ஒளிர்ந்தன. தங்கப் பிறை நெற்றியில் முன்னுச்சிக் கூந்தல் சுருண்டு விழாதிருக்க அடர் பச்சை நிறத்தில் ‘மஸ்க்ரவைட்’ (musgravite) கல் பதித்த கொண்டை ஊசியைச் செறுகி இருந்தாள். அது ‘சூடாமணி’ தானோ? மரகதத்தாலான மயில்கள் அவள் கிளிஞ்சல் போன்ற காதுகளுக்கு அணிசெய்தன. பலவண்ணச் சிறுமுத்துகள் சுருண்ட இறகுகள் போலக் கொத்தாக அவளுடைய காதணிகளிலிருந்து பின்னால் கூந்தல் வரை ஓடின. கிடைத்தற்கரிய சிவப்பு மரகதங்களும் நீலவண்ண லபிஸ் லசூலியும் தொடுத்தபூக்களாக அவள் கூந்தலை அலங்கரித்தன. இப்போது உலகில் யாரும் பார்த்தறியாத வண்ணக் கனிம நவமணிகள் அவளது மெல்லிய கழுத்திலும் வார்த்தெடுத்த தோள்களிலும் மெல்லிய மாலைகளாக கோடிட்டிருந்தன. வைரங்களும் செவ்வந்திக்கற்களும் கோத்த கழுத்தணியில் தோகை விரித்தவாறும் சிறகொடுக்கி அமர்ந்தவாறும் மரகதமயில்கள் ஊசலாடின. அப்பப்பா! மல்லிகாவும் சுற்றியுள்ள மற்றவர்களும் சிலையை வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி நின்றனர். ஒளிசிந்திய நகைகளின் மொத்த பிரகாசத்தையும் தூக்கி அடித்தன அந்தப் பொற்சிலையாளின் கண்கள்! பிரபஞ்சத்தின் அடர்ந்த கருப்புவெளிகளில் அதிர்ந்தபடியிருக்கும் வேதக்கருப்பொருள் ததும்பும் தடாகங்கள் அவை! அப்படியொரு இருட்டை தங்கத்தில் எப்படிக் கொண்டுவந்தான் அந்தச் சிற்பி?
“அவள் கண்களைப் பார்!” என்று மெல்லச் சொன்னாள் மல்லிகா. அவன் பார்க்கவில்லை. சிலையை இறுகப் போர்த்தியிருந்த மஞ்சள் துணியை அகற்றினான். ஒரு ஜோடிக் கையுறைகளை மல்லிகாவிடம் கொடுத்தான். பிறகு அவளிடம் ‘ஸ்பஞ்சை’க் கொடுத்து "தயவுசெய்" என்றான். அஜய்யின் உதடுகள் நடுங்கின. அவன் உணர்ச்சி வசப்பட்டிருப்பது மல்லிகாவுக்குத் தெரிந்தது. தன் இதயத்தையும் சோகம் இறுகக் கவ்விக் கொள்வதை அவள் உணர்ந்தாள். அவன் விட்ட இடத்திலிருந்து மல்லிகா வேலையைத் தொடர்ந்தாள்.
அவளது உடலையும் பாதங்களையும் துடைத்தாள். ஒட்டியாணம் ஒன்று அவள் இடையை அன்போடு அணைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பொற்சிலையாள் ஓர் இளம் பெண். இன்னும் தாயாகவில்லை. ‘அதுவும் சரி, அயோத்தியில் இருந்த அனைவரின் நினைவிலும் அவள் அப்படித்தானே இருந்திருக்க வேண்டும்’ என்று மல்லிகா யோசித்தாள். அந்தச் சிலை செய்யப்பட்ட அதே சமயம் வேறெங்கோ ஓரிடத்தில் சீதை தன் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒற்றைப் பெற்றவளாக, இவ்வளவு சின்னதாகச் சிலை போல் இல்லாமல், இத்தனை அலங்காரம் இல்லாமல், இவ்வளவு இளமையும் அழகுமாக இல்லாமல் இருந்திருப்பாள்! மல்லிகா சீதையின் சிலையைச் சீர் செய்து முடிப்பதற்குள் அஜய், ராமன் சிலை மேலிருந்த பூச்சை முற்றிலுமாகத் துடைத்திருந்தான். சிலைகளுக்கு முன் தரையில் பூக்கோலம் அமைப்பதில் அரண்மனைப் பெண்கள் மும்முரமாக இருந்தனர்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 28 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย