นิยาย
இந்தியாவில் பெரும்பான்மை - சிறுபான்மை சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தோடு சங்கப் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு அரசியல் சூழ்ச்சியால் மெல்ல மெல்ல வெறுப்பரசியலை அரங்கேற்றியதன் விளைவாக தகர்க்கப்பட்டதே பாபர் மசூதி. இஸ்லாமியர்கள் வழிபட்டு வந்த பாபர் மசூதிக்குள் தான் ராமர் பிறந்தார் என்று ஒரு பொய் பரப்புரையை தொடர்ந்து செய்தார்கள். ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லி வந்தால் அது உண்மையாகிவிடும் என்று கோயபல்ஸ் (Goebbels) பாணியை நடைமுறைப்படுத்தி வெல்லவே செய்துள்ளனர். இந்து - முஸ்லிம் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பையும் பெரும்பாலான இந்துக்களுக்கு தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தும் அவதூறுகள் மூலமும் தனக்கான அரசியலை கட்டமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள சங்கப் பரிவார் அமைப்புகள் அதை மேலும் விரிவுப்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகிறது. இந்த சூழலில் “அயோத்தி வழக்கு” என்ற கட்டுரை பாபர் மசூதி பிரச்சினை கடந்து வந்த வரலாற்றைப் பதிவு செய்கிறது.
วันเปิดตัว
อีบุ๊ก: 28 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา