ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
நமது நாடு எல்லாச் செல்வங்களும் நிரம்பியது. புராதனமான நமது பாராம்பரிய வேர்கள் இந்த மண்ணின் ஆழம் வரை ஊடுருவிப் படர்ந்திருக்கிறது. ஞானம், ஆன்மீகம். இதிகாசம், இலக்கியம், மருத்துவம், வானவியல், ஜோதிடம், வாணிபம், பொதுவான போர்முறை, வாழ்க்கை தர்மம், நெறிமுறைகள் போன்ற எல்லாவற்றிலும் நம் நாடு, உலகின் பிற நாடுகளைவிட முன்னணியிலேயே இருந்திருக்கிறது. அற்புதம் என்னவெனில், இன்றும் அதன் தீவிரம் குறையவில்லை என்பதுதான். ஆனால், இவற்றை அடையாளம் கண்டு கொள்ளவோ, உற்சாகமூட்டி வளர்க்கவோ நம்மில் பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஈகோ, பிறரை அங்கீகரிக்க ம்றுக்கிறது. இந்த மறுப்புகள் உண்மையான திறமைசாலிகளில், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் குறைந்தவர்களை சுலபமாகவே திசை திருப்பி விடவும் செய்கிறது.
நீண்ட நெடிய வரலாறுள்ள நமது வாழ்க்கை முறை நம்மிடையே எத்தனையோ மகான்களைத் தோற்றுவித்திருக்கிறது. பிறக்கும்போது வெகு சாதாரணமாக சராசரிக் குழந்தையாகப் பிறந்தவர்கள் தாங்களாகவே தேடியெடுத்த குானம், ஒருமுகச் சிந்தனை, இடையறாத கடின உழைப்பு விடாமுயற்சி போன்றவற்றின் உதவியாலேயே மகான்களாக மாறியிருக்கின்றனர். உலகத்தை உய்விக்கவும் உதவியிருக்கின்றனர். இவை எந்தக் காலத்திலும் சாத்தியமே.
நமது நவீனச் சுற்றுப்புறச் சூழல் நம்மிடையே தோன்றும் மகான்களை, விஞ்ஞானிகளைத் திசை திருப்பி விடுவதாக எண்ணுகிறேன். குழந்தைகள் சந்தோஷமாகவும், செளகரியமாகவும் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பொருளா தாரத்துடன் போராட மட்டுமே அவர்களைத் தயார்ப்படுத்துகிறோம் என்றுதான் தோன்றுகிறது. மனித குலத்துக்குப் பயன்படக் கூடியவனளாக வளர விரும்பும் குழந்தைகளுக்கும், வாழ்க்கை குறித்துத் தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கும் இந்தப் புத்தகம் உற்சாகத்தை வழங்கும் என்று நம்புகிறேன். இந்திய விஞ்ஞானிகள் என்கிற இந்தப் புத்தகம், ஓர் எழுத்தாளன் - மொழிபெயர்ப்பாளன் என்ற முறையில் எனக்குப் பெருமிதத்தையும் நிறைவையுமே அளிக்கிறது. இப்படியொரு யோசனையைத் தெரிவித்ததும் சற்றும் தயங்காமல், அதிகமாக யோசிக்காமல் ஒப்புக் கொண்டு, சற்று அதிகச் செலவுடன் விஞ்ஞானத்தின்பால் ஆர்வம் கொண்டு இதை வாசிக்கும் வாசகர்களுக்கும், இந்தப் புத்தகக் கட்டுமானத்தில் உதவிய ஏனையவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 กุมภาพันธ์ 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย