ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
அடுத்த என்ன செய்வதெனத் தீர்மானிக்கத் தெரியாத பேட்ரிக்கின் நண்பன் (எதிர் கொள்ளல் : சில குறிப்புக்கள்), சத்துணவு சாப்பிட்டுச் செத்துப்போன நாவிற்குச் சுவையூட்ட முட்டைப் பொரியலும் சுடுசோறும் கேட்கும் தளர்ந்துவிட்ட குடிகார மிக்கேல் (சிறகற்ற பறவைகள்), நிறமும் அழகின்மையும் தன்னை அசிங்கமாக்கி விட்டதாகக் கருதித் தன்னைத் தானே நெருப்பிட்டுச் சிவப்பாக மாற்றும் ஒரு கறுப்பு வண்ணப் பேதை மனைவி (ஜ்வாலை), தாயைக் கவனித்துக் கொள்வதற்காக நாற்பது வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாத ஓர் அன்பு மகன் (இறுக்கம்), பாம்புப் பயத்தால் அரண்டு தவிக்கும் வாசு (??), கம்பெனியில் வேலை நிறுத்தத்தைக் கேள்விப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட அண்ணனுக்குத் தானே வந்து உதவும் தங்கை - பாதிக்கப்பட்ட நுகர்வோனுக்கு உதவும் கார் பெட் காரன் (லாக் அவுட்), வாழ்க்கையில் ஏற்படும் பாதை மாற்றம் எதார்த்தமானது என்பதைப் புரிந்து கொள்ளாத காதலன் ஜென் (மழைக்குப் பின்னும் பூக்கள்); தன்னுடன் ஒத்துவராத உலகக் காரியங்களால் தவிக்கும் மனநிலையை மறந்து குழந்தையின் மழலையில் மயங்கும் ஜோஸ்வா (உயிர்த்தெழுதல்), யூ ஆர் கிரேட் என்று மாணவி கூறிய வார்த்தைகளில் தன் கண்ணியம் மிக்க பிம்பம் விழுந்து நொறுங்கியதாக உணரும் ஒரு பேராசிரியர் (சலனம்), புரிதலின்றி மனம் நொறுங்கும் வயோதிகத் தந்தை (புரிதல்), ஏதோ நடக்கப் போகிறது, ஏதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்து அறையில் பாம்பைக் காணும் வெளியூர் இளைஞன் (பயணம்)
தன் மறதி அறியாமல் மாணவனின் மறதி குறித்து வினாக்களைத் தொடுக்கும் பள்ளி ஆசிரியர் பரஞ்சோதி (பரஞ்சோதி சார்!), தன் நண்பனால் திருட்டுப் பட்டத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் தவிக்கும் சிறுவன் ரூபன் (முள்முடி). பல ஆண்டுகளுக்குப் பின் ஏற்படும் சந்திப்பில் தன்னிடம் உதவி கேட்டுவிடுவானோ என்று நினைக்கும் இளைஞனுக்குத் தான் உதவி புரியத் தயாராக இருப்பதாகக் கூறும் கணேசன் (புற்களின் நடுவே பூக்கள்), தகவல் தொடர்புச் சாதன வளர்ச்சி மனிதரைச் சோம்பேறியாக்குவது கண்டு குமுறும் ஒருவன் (ஆக்டோபஸ்)... என்று நம் நெஞ்சில் நிரந்தர உறைவிடம் தேடிடும் பல்வேறு மனிதர்களை இவரது கதைகளில் பார்க்க முடிகின்றது. உணர்வுகள், குணங்கள், அவை வெளிப்படும் சூழல்கள் மூலம் உயிர்த்துடிப்புள்ள மனிதர்களை உலாவ விடுவது இவரது பாத்திர வார்ப்புத் திறனுக்குச் சிறப்பு சேர்க்கின்றது.
மொத்தத்தில் இவரது கதைகள் தனி மனிதன். குடும்பம், சமுதாயம், எனப் பல்வேறு நிலைகளில் மனித உணர்வுகளைப் படிப்பவர் உள்ளத்தில் ஆழ்தடமாய்ப் பதித்திடும் இயல்பின. இவரின் ஆக்கங்கள் மென்மேலும் தொடர்ந்து சிறந்து, சிறுகதை வரலாற்றில் தனித்ததோர் உயர் இடத்தை இவருக்குத் தேடித் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
முனைவர் நா.இளங்கோவன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย