ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
நாம் சாப்பிடும் உணவு சுவையாக இருக்கிறதா என்று கவனம் செலுத்தும் அளவுக்கு அது ஆரோக்கியமானதா என்பதில் நாம் அக்கறை செலுத்துவதில்லை என்பதே உண்மை. அதற்காக ஆரோக்கியமான உணவு என்றால் அது சுவையில்லாமல் இருக்க வேண்டும் என்று அவசியமுமில்லை. ஆரோக்கிய உணவு என்று சொல்லும்போது எந்த உணவுப் பொருள்களையெல்லாம் தேர்ந்தெடுத்து அவற்றை எந்தெந்த விகிதத்தில் கலந்து சாப்பிட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அதை எந்த விகிதத்தில் சமைக்க வேண்டும் என்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்துள்ள காய்கறிகளும், தானியங்களும், உணவுப் பொருட்களும்கூட நாம் அவற்றை முறையாக சமைக்காவிட்டால் நம் உடல் ஆரோக்கியத்துக்கு அவை எதிராக அமைந்துவிடுவதுண்டு.
இந்த ஆரோக்கிய சமையல் பகுதியை வழங்கும் அம்பிகா சேகர் நல்ல அனுபவம் வாய்ந்த ஒரு டயட்டீஷியன். அவர், இந்த ஆரோக்கிய சமையலை ஒரு மருந்து போல் அணுகாமல், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளையே எப்படி ஆரோக்கிய சமையலாக மாற்ற முடியும் என்று செய்து காண்பித்திருக்கிறார். அவற்றில் 30 வகையான சமையல் வகைகளை ஏற்கனவே உங்களுக்காக இந்நூலின் ‘பாகம் 1’ மூலம் வழங்கினோம். அதற்கு நீங்கள் கொடுத்த உற்சாகத்தையும், வரவேற்பையும் தொடர்ந்து இதோ ‘பாகம் 2’ உங்கள் கையில். இதிலும் மேலும் பல சுவையான ஆரோக்கியமான சமையல் குறிப்புகள் உங்களுக்கு இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள ஒவ்வொரு சமையலையும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். சுவையாக சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 23 ธันวาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย