ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
விரும்பிச் செய்யும் விருந்தோம்பற்பண்பும், விரிவான பயணப் பட்டறிவுகளையும் கொண்டவர் திருமதி லக்ஷ்மி ரமணன், தன் அன்புக் கணவரின் அலுவல் பணி காரணமாகப் பல்வேறு இடங்களையும் மனிதர்களையும் காணும் வாய்ப்புப் பெற்றவர். அமைதி மிக்கவராயினும் எதையும் எவரையும் ஆழ்ந்து உணர்ந்து பார்க்கும் ஆற்றல் வாய்ந்தவர். உள்ளார்ந்த உணர்வுகளையும், உலகளாவிய அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யும் பக்குவம் கொண்டவர். மனித நேயமும் குறிப்பாக மகளிர் நேயமும் மிக்குக் கொண்ட இவரது படைப்புகள் நம்மை அவரது எழுத்துக்களுடன் இரண்டறக் கலந்துவிடச் செய்து விடுகின்றன.
சோர்வு தட்டாதவகையில், கதைப்போக்கினைச் சுவையுற நகர்த்தும் இவரது திறம் "மறைந்திருக்கும் மர்மம்" வழி நன்கு வெளிப்படுகிறது. விரைவும் விறுவிறுப்பும், புதிரும் புதுமையும் போட்டி போட்டுக்கொண்டு பக்கங்களைப் புரட்ட வைக்கின்றன.
பெண்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறவும், சுயமரியாதையைக் காத்துக் கொள்ளவும் எப்படியெல்லாம் எவரிடமெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார் - புரிய வைத்திருக்கிறார்.
எழுத்து முயற்சியென்பது வெறும் பொழுது போக்கும் முயற்சியல்ல. எழுதுவோர்க்கும் படிப்போர்க்கும் பகிர்தல் வழியிலான பயன்பாட்டைச் செய்ய வேண்டும். திருமதி லக்ஷ்மி ரமணனின் படைப்புகளில், வரலாற்றுச் செய்திகளை வாழ்விக்கும் முயற்சிகளும், பார்த்த இடங்களையும் பழகிய மனிதர்களையும் பதிவு செய்யும் முயற்சிகளும், சராசரி மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய சமுதாயச் சிந்தனைகளும் இடம் பெற்று நம்மை இன்புறுத்துகின்றன.
"வாழ்க்கை என்பது பிடிக்குள் அகப்படாமல் நழுவும் பாதரசத் துளியைப் போன்றது. சில சமயம் நாம் நினைக்கிறபடி வாழ்க்கை அமையாதது இருக்கட்டும். பல விசித்திரத் திருப்பங்கள் ஏற்பட்டுத் திசைமாறிப் போகிறது" என அமையும் சிந்தனைகள் குறிப்பிடப்பட வேண்டியவை. நடைமுறை வாழ்க்கையின் நலன்களையும் நளினங்களையும் எளிய சொற்களால் எடுத்துக் காட்டியிருக்கும் - எழுதிக் காட்டியிருக்கும் திருமதி லக்ஷ்மி ரமணனின் படைப்புகள் தன்னிறைவு தரும் தரமான படைப்புகள் என்பதில் ஐயமில்லை.
பல்கலைக்கழகங்களின் ஆய்வுக் களமாகவும், இலக்கிய ஆர்வலர்களின் ஆறுதல் களமாகவும் இவரது படைப்புகள் இருக்கின்றன; இனிக்கின்றன. தோழமையுணர்வும் தொண்டுணர்வும் மிக்குக் கொண்ட இவரது படைப்புகளால் இவர் சிறக்கவும், இவரால் இவரது படைப்புகள் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புடன்,
நா. ஜெயப்பிரகாஷ்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย