ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி (நமது தாய்நாடு சுதந்திரம் பெற்ற தினம்) எனது முதல் சிறுகதை "காவேரி” மாத இதழில் வெளிவந்தது. அதற்கும் பின் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
சுமார் 20 நாவல்கள், 40 குறுநாவல்கள், 1000 சிறு கதைகள், 1500 கட்டுரைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.
கற்பனை இலக்கியம், ஆன்மிகம், மருத்துவம், மனோ தத்துவம், பயணக் கட்டுரை, இலக்கியம், சுயசரிதம் போன்ற துறைகளில் எண்பத்தைந்து புத்தகங்கள் எழுதி உள்ளேன்.
"இலக்கியச் சிந்தனை” எனது சிறுகதையைப் பாராட்டிப் பரிசு அளித்திருக்கிறது. அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998ம் ஆண்டு எனது ஐம்பத்தோர் ஆண்டு தமிழ் எழுத்துப் பணியைப் பாராட்டி விழா நடத்திக் கெளரவித்தது.
பத்திரிகை உலகில் எஸ்.எஸ். வாசன், கி.வா. ஜகந்நாதன், நா. பார்த்தசாரதி, மணியன், ரா. கணபதி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். ஆன்மீக உலகில் காஞ்சி மகாப் பெரியவர்கள், ஜகத்குரு ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், அஹோபில மடம் 44வது மடம் ஜீயர் சுவாமிகள், உடுப்பி பேஜாவர் மடசுவாமிகள், சுவாமி சின்மயானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோருடன் இருந்து ஆன்மிகப் பணிகளை ஆற்றி ஆசிகளைப் பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. காஞ்சி மகா பெரியவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை (ஜகம் புகழும் ஜகத்குரு), சுவாமிகள் 100வது ஆண்டு தொடக்கத்தில் தொகுத்து எழுதி உள்ளேன். காஞ்சி காமகோடி மடத்தின் ஆசிகளுடன் இதை ஒமர்ந்தூரில் அன்றைய பாரதப் பிரதமர் திரு. பி.வி. நரசிம்மராவ் வெளியிட்டார்கள். ஆன்மிகத் துறையில் சுமார் 200 ஆன்மிகப் பெரியோர்களைத் தரிசித்து, அவர்களுடன் உரையாடல் நடத்தி “ஞானமன்றம்” என்ற தலைப்பில் ஞானபூமியில் சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்து எழுதி உள்ளேன்.
2003-04 ம் ஆண்டுகளில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளின் நூல்கள் ஆறு (தெய்வவாக்கு - 1, 2, 3, பாகங்கள், அருளுரைகள் 1, 2 பாகங்கள். அருளாசிக் கட்டுரைகள் -1) என்னால் தொகுக்கப்பட்டு ஸ்வர்ண ஜெயந்தி பீபிரோகண விழாவின் போது வெளியிடப்பட்டது. அப்போது பூஜ்யஸ்ரீ கவாமிகள் எனக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்து உள்ளார்கள்.
சுமார் 2000 வாசகர்கள் கேள்விகளுக்கு, "இந்து மதம் பதிலளிக்கிறது”, "மகான்கள் பதிலளிக்கிறார்கள்" என்ற தலைப்புகளிலும், “அமைதியான வாழ்க்கைக்கு ஆன்மிக வழிகாட்டி” என்ற தொகுப்பிலும், ஞானியர்களின் பதில்கள் மூலம் தெளிவுரை அளித்துள்ளேன்.
சுமார் 100 மருத்துவ நிபுணர்களைப் பேட்டி கண்டு கட்டுரைகளைத் தொகுத்துள்ளேன்.
சுவாமி கமலாத்மானந்தர், கி.வா.ஜ, வானதி திருநாவுக்கரசு ஆகியோர் என்னுடன் பழகிய நண்பர்கள்.
பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபாவின் தொண்டனாகக் கடந்த நாற்பது ஆண்டுளாகப் பணியாற்றி வருகிறேன். அவரது அருளுரைகளைத் தொகுத்துள்ளேன். சமுதாய நலப் பணிகளிலும் பங்கு பெற்றுள்ளேன்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தைப் புதுப்பிக்கும் பணி, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தை உருவாக்கும் பணி ஆகியவற்றில் தலைமை இஞ்சினீயர் என்ற முறையில் பணியாற்றி நல்லாசிகளை, பரிசுகளைப் பெற்றுள்ளேன்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 ธันวาคม 2562
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย