ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
"ஒரே ஒரு கொலை ! சோழ சாம்ராஜ்ஜியத்தின் சரித்திரமே மாறியது. சோழர்களின் பிரம்மாண்ட சரித்திரத்தில் இன்று வரை விலகாத, சரித்திர பிரியர்களின் மனதை விட்டு நீங்காத மர்ம முடிச்சாக திகழ்வது மாமன்னன் ராஜ ராஜ சோழன் மற்றும் ஆழ்வார் குந்தவை பிராட்டியின் அண்ணன், பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் கொலைதான். தனது பொன்னியின் செல்வன் சரித்திரத்தில் அமரர் கல்கி மட்டும் இந்த கொலையை பற்றி குறிப்பிட்டிருக்காவிட்டால், ஆதித்த கரிகாலனின் கொலையை பற்றி நமக்கு தெரியாமலேயே போயிருக்கும். பாண்டிய மன்னன் வீர பாண்டியனின் தலையை கொய்வேன் என்று சபதம் செய்து அதனை நிறைவேற்றியவன்! சாளுக்கியர்களையும் நடுங்க வைத்த மாவீரன் ! ஆதித்த கரிகாலன்தான். சுந்தர சோழருக்கு பிறகு அரியணையில் அமர போகிறான் என்று சோழ நாடே உறுதியுடன் நம்பியிருக்க, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான். அவனை யார் கொலை செய்தார்கள் என்பது தெரியாத நிலையில், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் மீது கொலைபழி சுமத்தப்பட்டு வழக்கு முடிக்கப்படுகிறது. ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்றது கிபி 959-னில் நிகழ்ந்த சேவூர் போரில் ! ஆனால் அவனது கொலை நிகழ்ந்தது கிபி 969-னில். பாண்டியர்களுக்கு அவனை பழிவாங்க பத்து வருடங்களா தேவையாக இருந்தது? பட்டத்து இளவரசனாக திகழ்ந்த அவனுக்கு, ஏன் அரச குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட வேளாள படை என்கிற தற்கொலை படை பாதுகாப்பு அளிக்கப்படவில்லை ? மேலும், எல்லா சோழ இளவரசர்களும் பதினாறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டு விட, 29 வயதில் கொலை செய்யப்பட்ட ஆதித்த கரிகாலனுக்கு மட்டும் ஏன் திருமணம் நடைபெற்றிருக்கவில்லை? அதை பற்றி ஏன் யாரும் கவலைப்பட்டதாக கூட தெரியவில்லை? பல திருமண முயற்சிகள் நடைபெற்றும் , அவனுக்கு ஏன் இறுதிவரையில் திருமணம் நடைபெறவில்லை ? அதற்கு யாராவது தடையாக இருந்தார்களா அல்லது அவன் இரகசியமாக திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தானா? அனைவருமே ஆதித்த கரிகாலனின் மர்ம கொலையைப் பற்றி மட்டுமே விவாதித்து கொண்டிருக்கின்றனரே தவிர, அவனது பிறப்பில் துவங்கி, இறப்பு வரை நிலவிய மர்மங்களை பற்றியோ, அவனை மணம் முடிக்க பெண்கள் பயந்தனர் என்பது பற்றியோ ஏன் இதுவரை யாருமே ஆய்வு செய்யவில்லை. கெடில நதியை கடந்து தெற்கே செல்ல ஆதித்த கரிகாலனுக்கு அவனுடைய பாட்டனார் மலையமான் தடை விதித்திருந்தார். எதனால்? சோழ இளவரசன் ஏன் தஞ்சைக்கு செல்ல தயங்கினான் ? அவனது பிறப்பின்போதே அவனை விரட்டத்துவங்கிய மரணம், 29 வயதில் அவனை கைப்பற்றியது. அவனது வாழ்வில் நிகழ்ந்த மர்மங்களை விளக்கும் கதைதான் "சங்கதாரா."
© 2021 Storyside IN (หนังสือเสียง ): 9789354838668
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 11 พฤศจิกายน 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย