ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
21 จาก 1
นอนฟิกชั่น
'கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்' மறக்கப்பட்ட கலாச்சாரத்தையும் அதைச் சுற்றியுள்ள சமூகங்களையும் நினைவூட்டுகிறது. தெய்யம் என்பது இந்திய மாநிலமான, கடவுளின் சொந்த தேசம் எனப்போற்றப்படும் கேரளாவின் திராவிட சடங்குடன் இணைந்த கலை வடிவம். அழகிய படங்களோடும் , நூற்றுக்கணக்கான கதைகளோடும் தெய்யம் பற்றிய விரிவான தகவல்களை இந்நூல் வழங்குகிறது. "மக்களின், மக்களால், மக்களுக்காக" என்பதற்கேற்ப, உண்மையான கடவுள்களான தெய்யம் கலைஞர்களுக்கு இந்நூலை சமர்ப் பிக்கிறோம்.
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இருபது சுற்றியுள்ள நாடுகளில் தனது நிர்வாக ஆலோசனை மற்றும் தன்னார்வப்பணி நிமித்தம் பயணித்தபோது தனது கேமரா மூலம் ஒளியைத் துரத்தி செல்லும் அற்புதமான நல்வாய்ப்பு நூலா சிரியருக்கு கிடைத்தது. எனினும் ஒரே தருணத்தில் 500க்கும் மேற்பட்ட கடவுள்கள் பூமியில் இறங்கும் மற்றோர் இடத்தை அவர் இனிதான் பார்க்க வேண்டும். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் இயற்கையான பசுமை விரிந்த, வட மலபாரின் மலைப்பாங்கான நிலப் பரப்புகளில், இறைவனே கைவிட்ட பக்தர் களை தெய்யக்கடவுள் அரவணைப்பதற்காக பலருக்கும் தெரியாத, இதுவரை பிரபலமாக இல்லாத, பாதைகள் திறக்கின்றன. ஒரு குன்றின் மீது பிரகாசிக்கும் நகரமாக மலபார் மூலையை மாற்றியதற்கு, அந்தத் தெய்யம் கடவுள்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். ஆடை வடிவ மைப்பாளர்களாகவும் , ஓவியர்களாகவும், இசைக்கலைஞர்களாகவும், கை வினைஞர்களாகவும், ஏன்-டிரம்மர்களாகவும் நடன அமைப்பாளர்களாகவும் கூட தெய்யம் கடவுள்கள் பிரகாசிக்கின்றனர். மானுட வர்க்கத்தைத் தாண்டிய மாய உருவாக வளர்ந்து, எரிதழலையும் பொறுத்துக் கொண்டு அதன் ஊடாக அதிக ஆடைகளை சிரமமின்றி சுமந்து கொண்டு செல் கின்றனர் ,’கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்’!
கடவுளின் சொந்த தேசமான கேரளாவின் மலபார் குன்றுகளின் மீதுள்ள ஜொலி ஜொலிக்கும் நகரங்களின் சடங்கு நடனமான தெய்யத்தின் ஆழமான வரலாற் றையும் வியக்க வைக்கும் பன்முகத்தன்மையையும், கதைசொல்லும் விதத்தின் வசீகரிக்கும் பரிமாணங்களையும் காட்டி, இந்த 'கடவுளின் சொந்த தேசத்தின் கடவுள்கள்',உங்களை ஒரு சூறாவளி சுற்றுலாவே அழைத்துச் செல்கிறது.
© 2025 Tiger Rider (หนังสือเสียง): 9781964213309
วันเปิดตัว
หนังสือเสียง: 13 พฤศจิกายน 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
