ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4.3
สืบสวนสอบสวน
யதார்த்த நிலைக்கு வர நிமிஷ நேரம் பிடித்தது டாக்டர் சுகவனத்துக்கு. கையிலிருந்த கடிதத்தை மறுபடியும் படித்தார். எந்நேரத்திலும் வெடித்து விடக் கூடிய ஒரு வெடிகுண்டைக் கையில் வைத்திருப்பவரைப் போல் ஓர் அவஸ்தை அவரை வியாபித்தது. "லேகா... இந்த லெட்டர் எப்போது வந்தது?" "இப்பத்தாங்க. ஒரு பதினைந்து நிமிஷத்துக்கு முன்னாடி. படித்ததுமே கண்ணை இருட்டி தலையைச் சுத்திடுச்சு. மரகதா போன் பண்ணினாளா?" "உம்." "ஆபரேஷன் பண்ணி முடிச்சுட்டீங்களா?" "இல்லே லேகா. தியேட்டருக்குப் போறதுக்கு முன்னாடி போன் வந்தது. உடனே வந்துட்டேன். இப்போ உனக்கு உடம்பு எப்படியிருக்கு லேகா?" "ஆபரேஷன்?" "டாக்டர் சண்முகராஜனை பிக்ஸ் பண்ணிக்கச் சொல்லிட்டேன். நீ மயக்கமா விழுந்திருக்கிற விஷயம் தெரிஞ்ச பின்னாடி என்னால கத்தியை எடுக்க முடியுமா லேகா? டாக்டர் மாத்யூவுக்கு இதுல கொஞ்சம் வருத்தந்தான். அதிருக்கட்டும், உனக்கு ஒண்ணு ஆயிடுச்சுன்னு தெரிஞ்சப் பிறகும் இதயத்தை இரும்பாப் பண்ணிக்கிற மனோதிடம் என்கிட்டே இல்லே லேகா. ஒரு டாக்டர் இப்படிப் பேசக் கூடாதுதான். ஆனா பேசறேன்.லேகா கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவருடைய மார்பினின்றும் விலகி உட்கார்ந்தாள். அவருடைய கையிலிருந்த கடிதத்தைப் பார்த்தாள். "இந்தக் கடிதத்திலே இப்படி எழுதியிருக்கே. என்னங்க பண்ணலாம்?" லேகாவின் குரலில் பயம் தெரிந்தது. சுகவனம் எழுந்தார். "போலீசுக்கு இன்பார்ம் பண்ணுவோம் லேகா. அவங்க பார்த்துப்பாங்க." "எனக்கென்னவோ பயமாயிருக்குங்க." "எதுக்காக பயம் லேகா? எவனோ விளையாட்டுத்தனமா மிரட்டி இருக்கலாம். போலீஸ் கண்டுபிடிச்சுடுவாங்க. கையெழுத்தை வெச்சுக்கிட்டே ஆளைத் தேடி அமுக்கிடுவாங்க. பி.2 போலீஸ் ஸ்டேஷன்லே என்னோட படிச்ச கோகுல்நாத் இன்ஸ்பெக்டரா இருக்கார். அவரைக் கூப்பிட்டு லெட்டரைக் காட்டுவோம்." லேகா மிரட்சியோடு தலையை அசைக்க... சுகவனம் டெலிபோனை நோக்கிப் போனார். ரிஸீவரின் தலையைத் தொடுவதற்குள் -- அதுவே கூப்பிட்டது. சுகவனம் ரிஸீவரை எடுத்தார். "ஹலோ!" "ஹலோ! டாக்டர்" மறுமுனையில் ஒரு புதிய குரல் உற்சாகமாய்க் கொப்பளித்தது. கொஞ்சம் இளமையான குரல். "யார் பேசறது?" சுகவனம் குரலை உயர்த்தினார். "அதையெல்லாம் அடுத்த வாரம் சொல்றேன். டாக்டர், அந்த லெட்டரைப் படிச்சீங்களா? ஷாக் நியூஸ்தான். எனக்கு வேறே வழி தெரியலை..." சுகவனம் பயத்தில் மிடறு விழுங்கினார். "இந்தாப்பா, நீ யாரு? எதுக்காக அந்தக் கடிதம்? என் லேகாவை ஒண்ணும் பண்ணிடாதே. நீ எது கேட்டாலும் தர்றேன்." "டாக்டர்! பயப்படாதீங்க. உங்க பிரிய மனைவி லேகாவுக்கு அடுத்த வார முடிவுக்குள்ளே ஏற்படப்போற பயங்கரத்துக்கு நீங்க உங்களைத் தயார் பண்ணிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. நீங்க லேகா மேலேவெச்சிருக்கிற பிரியம் எனக்குத் தெரியும். அவ சுண்டு விரல்ல குண்டூசியைக் குத்தினா உங்களுக்கு நெஞ்சில கடப்பாறை பாய்ஞ்ச மாதிரி இருக்கும்ங்கிற சென்டிமெண்ட்ஸும் எனக்குத் தெரியும். ஆனா எனக்கு வேற வழியில்லை. லேகா எனக்கு வேணும்!" "டேய்...ய்..ய்...ய்!" "உங்களுக்கு ஆத்திரமாகத்தான் இருக்கும். மொதப் பொண்டாட்டி இறந்ததும் மறு கல்யாணம் செஞ்சுக்கப் பிரியப்படாத உங்களுக்கு உங்க மாமனார் சிவப்பிரகாசம் தன்னோட ரெண்டாவது மகள் லேகாவையே கட்டாயப் படுத்திக் கட்டி வெச்சார். யாருக்கு டாக்டர் கிடைக்கும் அந்த அதிர்ஷ்டம்? அந்த அதிர்ஷ்டத்தில் நானும் கொஞ்சம் கையை வைக்கிறேனே?" "யூ...யூ...யூ ப்ளடி..." "திட்டுங்க டாக்டர். அது உங்களோட ஆத்திரத்தை தணிச்சுக்க உதவும். ஒரு விஷயம் சொல்லட்டுமா? போலீசுக்குப் போகாதீங்க. உயிர் போன பின்னாடி ட்ரீட்மெண்ட் கொடுக்க வர்ற டாக்டர் மாதிரியான கேஸ் இது. இந்த ஒரு வாரம் உங்க லேகாவை நல்லாக் கொஞ்சிக்குங்க. அவளை நல்ல ஓட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க. சினிமாவுக்கு கூட்டிட்டுப் போங்க. அவ ஆசைப்பட்டதை வாங்கிக் குடுங்க. ஐஸ்க்ரீம் சாப்பிடப் பிரியப்பட்டா தடுக்காதீங்க." அவன் சிரித்துக் கொண்டே ரிஸீவரை வைத்து விட்டான். "யாருங்க அது?" கேட்டாள் லேகா. "ஸ்கௌண்ட்ரல். லெட்டர் எழுதின ராஸ்கல். மிரட்டறான். போலீஸ்னா என்னான்னு அவனுக்குத் தெரியாது போலிருக்கு." சுகவனம் டயலைச் சுற்றி பி.2 போலீஸ் ஸ்டேஷனைக் கூப்பிட்டார். இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் சுலபத்தில் கிடைத்தார்
© 2024 Pocket Books (อีบุ๊ก): 6610000530182
วันเปิดตัว
อีบุ๊ก: 8 กุมภาพันธ์ 2567
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
