Step into an infinite world of stories
ஷீலா ரௌபாத்தம் எழுதிய Dear Dr. Marx - A Letter from a Socialist Feminist என்ற கற்பனைக் கடிதம் இலண்டனிலுள்ள மெர்லின் பிரஸ் வெளியிட்டுள்ள Socialist Register 1998 என்பதில் இடம் பெற்றுள்ளது. அக்கடிதத்தின் இறுதியில் தரப்பட்டுள்ள தரவுகள், தமிழாக்கத்தில் ஆங்காங்கே அதே அரபு எண் வரிசையின்படி அடிக்குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன. கடிதத்தின் தலைப்புக்கு (‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்') ஷீலா ரௌபாத்தம் (நட்சத்திரக் குறியிட்டு) எழுதியுள்ள அடிக்குறிப்பும் தமிழாக்கத்திலும் அடிக்குறிப்பாகவே தரப்பட்டுள்ளது. தேவைப்பட்ட இடங்களில் நட்சத்திரக் குறிகளிடப்பட்ட அடிக்குறிப்புகள் சிலவற்றை நாங்களும் எழுதியுள்ளோம். அரபு எண்கள் உள்ள அடிக்குறிப்புகளுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்படும் என்று நாங்கள் கருதிய இடங்களில், அக்கூடுதல் விளக்கங்களை அடைப்புக் குறிகளுக்குள் வழங்கியுள்ளோம்.
மூலக் கட்டுரையைச் சரியாகவும் ஆழமாகவும் புரிந்து கொள்வதற்காக ஓர் அறிமுகத்தையும் மூன்று பகுதிகளடங்கிய விளக்கக் குறிப்புகளையும் எழுதியுள்ளோம். அவ்விளக்கக் குறிப்புகள் I, II, III என எண்களிடப்பட்டுள்ளன. நாங்கள் பயன்படுத்திய உசாத்துணை நூல்கள், கட்டுரைகள் ஆகியன ஆங்காங்கே அடிக்குறிப்புகளிலும் தனித்தனிப் பட்டியல்களிலும் தரப்பட்டுள்ளன.
ஷீலா ரௌபாத்தம் எழுதிய கற்பனைக் கடிதத்திற்கான தரவுகள் என அடிக்குறிப்புகளில் குறிப்பிடப்படும் நூல்கள், கட்டுரைகள், ஏடுகள் ஆகியன தவிர கீழ்க்காணும் நூல்களையும் தான் பயன்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்:
Werner Blumenberg, Karl Marx, NLB, London 1972. Maire Cross and Tim Gray, The Feminism of Flora Tristan, Berg, Oxford, 1992. Carl J. Guarneri, The Utopian Alternative. Fourierism in Nineteenth Century America, Cornell University Press, Ithaca, 1991. Claire Goldberg Moses, French Feminism in the 19th Century, State University of New York, Albany, 1984. H.F. Peters, Red Jenny: A Life with Karl Marx, Allen and Unwin, London, 1986. Joan Wallach Scott, Gender and the Politics of History, Columbia University Press, New York, 1988.
எஸ்.வி. ராஜதுரை
Release date
Ebook: February 5, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International