Step into an infinite world of stories
Self-help & Personal development
‘ஐந்து ட்ரில்லியன் டாலர் எகானமி’ என்ற மிகப்பெரிய இலக்கோடு இந்தியா பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகமும் ‘ஒரு ட்ரில்லியன் டாலர் எகானமி’ என்ற இலக்கை வரையறுத்துக் கொண்டு முன்னோக்கி ஓடத் தொடங்கியிருக்கிறது.
இந்த இலக்குகளை அடைய வேண்டுமென்றால் அரசுகள் மட்டும் செயல்பட்டு எந்த உச்சத்தையும் தொட்டுவிட முடியாது. வளர்ச்சி என்பது தனி மனிதரில் இருந்தே தொடங்க வேண்டும். பல தனி மரங்கள் ஒன்றாகச் சேர்ந்தால் தான் தோப்புகள் உருவாகும். அது போலத்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும்! முன்பெல்லாம் வாய்ப்புகள் குறைவாக இருந்தன... பணப் புழக்கம் குறைவாக இருந்தது... படித்த மனிதர்கள் குறைவாக இருந்தார்கள்... அப்போதெல்லாம் கடின உழைப்பே வெற்றிக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல... வெளிநாட்டு, உள்நாட்டுத் தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன... நிதியைப் புரட்டுவது மிகச் சுலபமாகியிருக்கிறது... படித்தவர்கள், நியாயமான சம்பளத்தில் தாராளமாக வேலைக்குக் கிடைக்கிறார்கள்... இதனால் போட்டிகளும் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. ஆக, இப்போது வெற்றிக்கு காரணியாகத் திகழ்வது உழைப்பு மட்டுமல்ல... உத்திகளும் தான்! வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிக்க விதவிதமான உத்திகளை நாம் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆக்சிலேட்டரை அழுத்த அழுத்த, கார் வேகமாகச் செல்வது போல், இந்த உத்திகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை எட்ட முடியும். இந்த உத்திகளை “சக்சஸ் ரகசியங்கள்” என்றுகூட சொல்லலாம். வெற்றியை அடைவதற்கு உகந்த ரகசியங்கள் எவை? அவற்றை எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த நூல் விளக்குகிறது இந்த சக்சஸ் ரகசியங்களைத் தெரிந்து கொண்டால் நீங்களும் கோடிகளைக் குவிக்கலாம் என்பது நிச்சயம். அதுவே இந்த நூலின் நோக்கமும் கூட. நூலைப் படித்துவிட்டு ஏதேனும் சில உத்திகளைப் பின்பற்றினாலே, உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். உங்களை இலக்கு நோக்கி அழைத்துச் செல்ல, இந்தப் புத்தகம் உறுதியாக உதவும்.
Release date
Ebook: June 27, 2022
Tags
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International