Step into an infinite world of stories
Fiction
பெரும்பான்மையானவர்கள் வசதிகள் இல்லாமல் இருந்த காலத்தில், ஊர்களுக்குப் போவதென்றால் வசதியானவர்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு போவார்கள். மற்றபடி எல்லோரும் நடந்துதான் போவார்கள். கடுமையான வெயில், கரடுமுரடான பாதைகள். இப்போது இருப்பது போல கடைகளோ உணவு விடுதிகளோ இல்லாத காலம். அவர்கள் தண்ணீர் குடிப்பது சில வீடுகளின் வாசல்களில் இருக்கும் தண்ணீர் பந்தல்களில்.
தண்ணீர்ப் பந்தல் என்பது வழிப்போக்கர்களுக்கு இலவசமாகக் குடிக்கத் தண்ணீர் கொடுக்கிற இடம். தற்போதும், கோடை காலங்களிலும் கோவில் திருவிழா போன்ற நாட்களிலும் சிலர் அவர்கள் வீடுகளுக்கு வெளியில் பானையோ அண்டாவோ வைத்து, குடிக்க நீர் மோர், பானகம், தண்ணீர் போன்றவற்றைக் கொடுப்பார்கள். எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். அப்போது அதன் தேவையும் முக்கியத்துவமும் அதிகம். தர்ம சிந்தனை உள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவ நினைத்தவர்கள் தண்ணீர்ப் பந்தல்கள் வைத்தார்கள்.
வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் குடிக்கத் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் கிடைக்காத வேறு எவ்வளவோ இருக்கின்றனவே... எல்லாமும் எல்லோர்க்கும் கிடைக்கிறது என்று சொல்லிவிட முடியுமா?
வாழ்வதற்கான அடிப்படை விஷயங்கள் தேவைப்படுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.
இருப்பவர்கள் எல்லோரும் கொடுப்பதில்லை. உதவுகிற மனம் எல்லோருக்கும் கிடையாது. 'தனக்குப் போக மீதம் இருப்பதை' என்று கூட கொடுக்க முன்வருவதில்லை. அப்படி, கண் எதிரே பசியோடு இருப்பவனைப் பார்த்தும் மறைத்துக்கொண்டு சாப்பிடுகிறவர்களுக்கு நடுவில், உன் சிரமம் உன் தலை எழுத்து என்று எண்ணி நகர்கிறவர்களுக்கு மத்தியில், மற்றவர்களுக்குச் செய்கிறவர்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.
பணம், பொருள் போன்றவற்றை மட்டுமல்ல. தன் நேரத்தை, உடல் உழைப்பை, ஏன், தன் வாழ் நாட்களையே மற்றவர்களுக்காகச் செலவிடுகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
வாழ்க்கை என்றால் பணம் வசதிகள் செய்யவேண்டியது தனக்கும் தன் குடும்பத்துக்கும் என்றெல்லாம் நினைப்பவர்களுக்கு மத்தியில், பிறருக்காக வாழும், பிரபலங்கள் அல்ல, சில சாதாரண மனிதர்களைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். அப்படிப்பட்டவர்களைப் பற்றி கட்டாயமாக பத்திரிகையில் எழுதவேண்டும் என்று நினைத்தேன்.
இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி பலகாலமாக யோசித்துக் கொண்டிருந்தாலும் தொடர் என்று ஆரம்பித்ததால் தான், எழுதினேன். சந்தர்ப்பம் கொடுத்த ம.கா. சிவஞானத்துக்கு என் நன்றி. நீங்கள் செய்வதைப் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டதும் ஆர்வமாகச் சொன்னவர்கள். "உங்களைப் பற்றிப் பத்திரிகையில் எழுதப்போகிறேன்” என்றதும் பதறிப்போய், "என் பெயர் வேண்டாம்” என்றும், "என் போட்டோ கட்டாயமாக வேண்டாம்” என்றும் ஒரே போல சொன்னவர்கள், இந்தப் புத்தகத்தில் வரும் அத்தனை நல்ல மனங்களுமே! எப்படி இவர்கள் அனைவருமே சொல்லி வைத்ததைப்போல் ஒரே மாதிரி தங்களைப் பற்றிய விவரமோ, போட்டோவோ போட வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று எனக்கு இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது.
"உங்ளைப் பெருமைப்படுத்துவதற்காக எழுதவில்லை. நீங்கள் செய்வதைப் பற்றி தெரியவந்தால் மேலும் பலரும் கூட உங்களைப் போல செய்யலாமில்லையா?” என்று கேட்டதும்தான் இவர்களில் பலரும் அவர்களைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஒப்புக்கொண்டார்கள். ஆம், அதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கமும் கூட. இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவந்ததை நம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுவதற்காகவே இந்தப் புத்தகம்.
- சோம வள்ளியப்பன்
Release date
Ebook: September 15, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International