Step into an infinite world of stories
கட்டுரை என்பது பழந்தமிழ் நூல்களுக்கு எழுதும் தெளிவுரை என்றெண்ணிய காலம் உண்டு. பின்பு வாசிக்க நேர்ந்த அரசியல், சமூகவியல், பொருளியல் கட்டுரைகள் எனது தலைமுறை இளைஞர்களின் சிந்தனையைக் கூர்செய்ததுண்டு. பல்வேறுபட்ட கட்டுரைகள்தாம் வாசிப்பவனின் பன்முக ஐயங்களுக்கு விளக்கங்கள் தர இயலும். கட்டுரை எழுதுபவர்கள் அவர்துறையில் அறிஞராக இருப்பதும் சரியான தகவல்களைத் தருவதும் சமூகக் கடமை என்பதால் அவை நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். எத்தகைய வரலாற்று ஆய்வு அறிஞர்களும் சமூகப் பொருளியல் அறிஞர்களும் வாழ்ந்த மண் இது! ஆனால் அவர்கள் இனமும் அழிந்துவரும் இனமோ என்று அச்சம் ஏற்படுகிறது. அந்த வேலையைப் படைப்பிலக்கியவாதி கையிலெடுத்துக் கொள்வது என்பது சாத்தியமாகும் ஒன்றல்ல. துறை சார்ந்த வல்லாண்மை ஒரு அறிஞனைப் போல இலக்கியவாதிக்கு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத நிலையில், இலக்கியவாதி எழுதும் கட்டுரைகள் அதன் எல்லைகளுக்குள்தான் இயங்க முடியும். வேறு வழியின்றி, இதைத் தெரிந்து கொண்டுதான் அவன் கட்டுரை எழுத முயல்கிறான். சார்பு அல்லது சாய்வு எதுவானாலும் ஒரு விஷயம் குறித்த விவாதங்கள், பார்வைகள் முன்வைக்கப்பட வேண்டும். கொள்வார் கொள்வர். அல்லார் தமக்கான விவாதங்களை எழுப்பிக் கொள்வார். படைப்பிலக்கியத்துக்கு எந்த வகையிலும் தாழ்ந்ததன்று கட்டுரை இலக்கியம் என்பது எனது கருத்து. எனது அனுபவத்தில் கூறுகிறேன், படைப்பிலக்கியத்தை விடவும் கூர்மையான பார்வையும் விரிந்த அறிவும் வாசிப்பும் சமநிலையும் வேண்டும் கட்டுரை எழுதுவதற்கு. எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் கட்டுரையாசிரியன் பொறுப்பேற்கவும் வேண்டும். இஃதெல்லாம் இருப்பதாலேயே நான் கட்டுரை எழுத வந்தேன் என்று சொல்ல வரவில்லை. சற்று யோசிக்கும் வேளையில், சமீபகாலமாகத்தான் கட்டுரை எழுதும் உரம் எனக்கு வாய்த்திருக்கிறது. கதாநாயகிகள் முதுமையில் அம்மா வேடம் புனைவதைப் போலவா இதுவும் என்ற கேள்வியும் உண்டு. பெரும்பாலும் படைப்பிலக்கிய ஊற்று வறண்டு போன நிலையிலேயே கட்டுரை எழுத வந்ததாக வரலாறு கூறுகிறது. எனது அணுக்கமான நண்பர்கள் அனைவரும் நான் கட்டுரை எழுதுவதற்கு எதிரான மனநிலை கொண்டவராகவே இருக்கிறார்கள். என்னை அதைரியப்படுத்துகிறார்கள். ஆனால் கட்டுரை இலக்கியம் என்பது படைப்பிலக்கியம் அல்ல என்று யார் சொன்னது? நான் கட்டுரையாக எழுதுவதை இன்னொருவர் எழுதி விடவும் முடியும்தான். ஆனால் அவை எழுதப்படாமலேயே போய்விடுமோ எனும் அச்சம் ஏற்படும் போதுதான் படைப்பிலக்கியவாதி அந்தப் பணியையும் மேற்கொள்ள வேண்டியதாகிறது. மேலும் ஒரு விஷயத்தை அவன் அறிவுபூர்வமாக மட்டுமின்றி, உணர்வு பூர்வமாகவும் அணுக இயலும். கட்டுரை என்பது தீவிரமானதோர் மொழியில், அதற்கானதோர் வறட்டுத்தனத்துடன், வாசகனுக்கு அந்நியமான பாணியில் பெரும்பாலும் எழுதப்படுகிறது. படைப்பிலக்கியவாதி கட்டுரை எழுத வரும் போது, மொழி இயல்பானதாகவும் சற்று உணர்வுபூர்வமான அணுகு முறையுடனும் ஆக்கம் கொள்கிறது. எந்தக் கட்டுரையும் ஒரு சிறுகதை வாசிப்பின் ஈர்ப்பைத் தரவேண்டும் என்று கருதுபவன் நான். என்னுடைய கட்டுரைகள் அந்தவிதமான ஈர்ப்பைத் தருவதுண்டா என்பதை நீங்கள் தான் கூற முடியும். எனது முதல் கட்டுரைத் தொகுப்பு 'நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று' வெளியான பின்பு எழுதப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது, கடந்த முப்பது ஆண்டுகளில் நான் எழுதிய முன்னுரை, மதிப்புரைகளும்,
கட்டுரை என்பது பழந்தமிழ் நூல்களுக்கு எழுதும் தெளிவுரை என்றெண்ணிய காலம் உண்டு. பின்பு வாசிக்க நேர்ந்த அரசியல், சமூகவியல், பொருளியல் கட்டுரைகள் எனது தலைமுறை இளைஞர்களின் சிந்தனையைக் கூர்செய்ததுண்டு. பல்வேறுபட்ட கட்டுரைகள்தாம் வாசிப்பவனின் பன்முக ஐயங்களுக்கு விளக்கங்கள் தர இயலும். கட்டுரை எழுதுபவர்கள் அவர்துறையில் அறிஞராக இருப்பதும் சரியான தகவல்களைத் தருவதும் சமூகக் கடமை என்பதால் அவை நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். எத்தகைய வரலாற்று ஆய்வு அறிஞர்களும் சமூகப் பொருளியல் அறிஞர்களும் வாழ்ந்த மண் இது! ஆனால் அவர்கள் இனமும் அழிந்துவரும் இனமோ என்று அச்சம் ஏற்படுகிறது. அந்த வேலையைப் படைப்பிலக்கியவாதி கையிலெடுத்துக் கொள்வது என்பது சாத்தியமாகும் ஒன்றல்ல. துறை சார்ந்த வல்லாண்மை ஒரு அறிஞனைப் போல இலக்கியவாதிக்கு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத நிலையில், இலக்கியவாதி எழுதும் கட்டுரைகள் அதன் எல்லைகளுக்குள்தான் இயங்க முடியும். வேறு வழியின்றி, இதைத் தெரிந்து கொண்டுதான் அவன் கட்டுரை எழுத முயல்கிறான்.
சார்பு அல்லது சாய்வு எதுவானாலும் ஒரு விஷயம் குறித்த விவாதங்கள், பார்வைகள் முன்வைக்கப்பட வேண்டும். கொள்வார் கொள்வர். அல்லார் தமக்கான விவாதங்களை எழுப்பிக் கொள்வார். படைப்பிலக்கியத்துக்கு எந்த வகையிலும் தாழ்ந்ததன்று கட்டுரை இலக்கியம் என்பது எனது கருத்து. எனது அனுபவத்தில் கூறுகிறேன், படைப்பிலக்கியத்தை விடவும் கூர்மையான பார்வையும் விரிந்த அறிவும் வாசிப்பும் சமநிலையும் வேண்டும் கட்டுரை எழுதுவதற்கு. எழுதும் ஒவ்வொரு சொல்லுக்கும் கட்டுரையாசிரியன் பொறுப்பேற்கவும் வேண்டும். இஃதெல்லாம் இருப்பதாலேயே நான் கட்டுரை எழுத வந்தேன் என்று சொல்ல வரவில்லை.
சற்று யோசிக்கும் வேளையில், சமீபகாலமாகத்தான் கட்டுரை எழுதும் உரம் எனக்கு வாய்த்திருக்கிறது. கதாநாயகிகள் முதுமையில் அம்மா வேடம் புனைவதைப் போலவா இதுவும் என்ற கேள்வியும் உண்டு. பெரும்பாலும் படைப்பிலக்கிய ஊற்று வறண்டு போன நிலையிலேயே கட்டுரை எழுத வந்ததாக வரலாறு கூறுகிறது. எனது அணுக்கமான நண்பர்கள் அனைவரும் நான் கட்டுரை எழுதுவதற்கு எதிரான மனநிலை கொண்டவராகவே இருக்கிறார்கள். என்னை அதைரியப்படுத்துகிறார்கள். ஆனால் கட்டுரை இலக்கியம் என்பது படைப்பிலக்கியம் அல்ல என்று யார் சொன்னது?
நான் கட்டுரையாக எழுதுவதை இன்னொருவர் எழுதி விடவும் முடியும்தான். ஆனால் அவை எழுதப்படாமலேயே போய்விடுமோ எனும் அச்சம் ஏற்படும் போதுதான் படைப்பிலக்கியவாதி அந்தப் பணியையும் மேற்கொள்ள வேண்டியதாகிறது. மேலும் ஒரு விஷயத்தை அவன் அறிவுபூர்வமாக மட்டுமின்றி, உணர்வு பூர்வமாகவும் அணுக இயலும்.
கட்டுரை என்பது தீவிரமானதோர் மொழியில், அதற்கானதோர் வறட்டுத்தனத்துடன், வாசகனுக்கு அந்நியமான பாணியில் பெரும்பாலும் எழுதப்படுகிறது. படைப்பிலக்கியவாதி கட்டுரை எழுத வரும் போது, மொழி இயல்பானதாகவும் சற்று உணர்வுபூர்வமான அணுகு முறையுடனும் ஆக்கம் கொள்கிறது. எந்தக் கட்டுரையும் ஒரு சிறுகதை வாசிப்பின் ஈர்ப்பைத் தரவேண்டும் என்று கருதுபவன் நான். என்னுடைய கட்டுரைகள் அந்தவிதமான ஈர்ப்பைத் தருவதுண்டா என்பதை நீங்கள் தான் கூற முடியும்.
எனது முதல் கட்டுரைத் தொகுப்பு 'நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று' வெளியான பின்பு எழுதப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது, கடந்த முப்பது ஆண்டுகளில் நான் எழுதிய முன்னுரை, மதிப்புரைகளும், எப்போதும் என் பார்வையே சரியான பார்வை எனக் கருதுபவன் அல்ல நான். என்றாலும் என் பார்வையும் பொருட்படுத்தப்படக்கூடும் எனும் நம்பிக்கை உடையவன் எனது எதிர்பார்ப்பும் அவ்வளவுதான்.
நாஞ்சில் நாடன்
Release date
Ebook: July 2, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International