Step into an infinite world of stories
Fiction
இதுதான் நம்ம புது ஹீரோயினின் பெயர். ஆனால் இவருடைய தோழிகள் எல்லாம் இவரைக் 'கவுன்சிலர் கவுதமி' என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு அம்மணி எல்லோர் பிரச்னையிலும் வலிய மூக்கை நுழைத்து ஆலோசனை சொல்கிறவர்.
கவனியுங்கள், ஆலோசனைதான், அறிவுரை அல்ல. அடுத்தவர்களுடைய பிரச்னை என்ன என்று தெரிந்துகொண்டு, அதை அவர்களே திருத்திக்கொள்ளும்படி வழிகாட்டுவது கவுதமியின் ஸ்டைல்.
முக்கியமாக, கவுதமியின் ஆலோசனையைக் கேட்டுக்கொண்டு வருகிற இளம்ஜோடிகள் ஏராளம். 'டைவர்ஸ்தான் ஒரே தீர்வு' என்று முறைத்துக்கொண்டு வந்தவர்களைக்கூட, உட்காரவைத்துப் பேசி இரண்டாவது ஹனிமூன் அனுப்பிவைத்துவிடுவார் கவுதமி!
பத்து வருடம் வெளிநாட்டில் குப்பை கொட்டிவிட்டுத் திரும்பியதாலோ என்னவோ, கவுதமியின் பேச்சில் ஏகப்பட்ட மேலைநாட்டுத் தத்துவங்கள், ஆராய்ச்சிகள், உத்திகள் நிரம்பி வழியும். 'ஏன்? நம்ம ஊர் மெத்தட்ஸ்ல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?' என்று விசாரித்தால், கூலாக விளக்கம் சொல்வார்.
'கடந்த பல வருஷங்கள்ல, நாம கொஞ்சம்கொஞ்சமா மேற்கத்தியக் கலாசாரத்தைக் காப்பியடிச்சுகிட்டு வர்றோம். இந்தத் தலைமுறைப் பிள்ளைங்க ஆண், பெண் வித்தியாசமெல்லாம் பார்க்கறதில்லை, எல்லாரும் எல்லாமும் செய்யமுடியும்ன்னு நம்பறாங்க, செய்யறாங்க, ஆனா அதேசமயம், கல்யாணம்ன்னு வந்துட்டாமட்டும் அவங்கமேல போன தலைமுறை விதிகளைத் திணிக்கறது நியாயமா?'
'முக்கியமா, நம்ம பொண்ணுங்களை எடுத்துக்கோங்க, அவங்க சின்ன வயசுலேர்ந்து சுதந்தரமா வளர்ந்தவங்க, அதுக்கு ஏத்தபடிதான் அவங்க மனநிலையும் இருக்கும், அவங்களுக்குக் கல்யாணம் ஆகும்போது, 'புருஷன் வீட்டில் வாழப் போகும் பொண்ணே'ன்னு ஆரம்பிச்சு 'எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு வாழும்மா'ன்னு சொன்னா எடுபடுமா? அது நியாயமா?'
அதனாலதான், மேற்கத்திப் பழக்கவழக்கங்களைக் காப்பியடிக்கற நாம, அவங்க தனிப்பட்டமுறையில என்னமாதிரி வாழ்க்கை வாழறாங்கன்னும் கவனிக்கணும், அதையெல்லாம் அப்படியே பிரதியெடுக்கவேணாம், அந்த சூட்சுமங்களைப் புரிஞ்சுகிட்டு நமக்கு ஏத்தமாதிரி மாத்திப் பயன்படுத்திகிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும். இல்லைன்னா ட்வென்டி ட்வென்டி மேட்ச்ல மட்டை போடற பேட்ஸ்மேன்மாதிரி திட்டுதான் வாங்குவோம்!
இனி, கவுதமியும், அவரிடம் பிரச்னைகளோடு வந்து நின்ற பல இளம் ஜோடிகளும் மாதாமாதம் உங்களோடு பேசுவார்கள்.
Release date
Ebook: February 15, 2022
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International