Step into an infinite world of stories
4
True Crime
Padmanabha Padukolai / பத்மநாபா படுகொலை An Aurality Tamil Audiobook Production
ஆயுதமேந்திய குழுவொன்று வீடு புகுந்து பட்டப்பகலில் 14 பேரைச் சுட்டுக்கொன்ற சம்பவம், தமிழ்நாட்டிற்குப் புதிது. அதுவரை தமிழர்கள் ஏ.கே 47 துப்பாக்கியைத் திரைப்படங்களில் மட்டுமே கண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் துப்பாக்கிக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியது பத்மநாபாவின் படுகொலை. இது சகோதர யுத்தம் மட்டுமல்ல. கள்ளத்தோணியில் வந்திறங்கி, கச்சிதமாகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட படுகொலை. கோடம்பாக்கத்தின் ஜக்காரியா காலனியை ரத்தச் சகதியாக்கிவிட்டு கொலைகாரர்கள் தப்பிச் சென்றது, தமிழகக் காவல்துறைக்குக் கிடைத்த கரும்புள்ளி. இந்தக் கொலையாளிகளைத் தேடிப் பிடித்திருந்தால், ராஜிவ் காந்தி படுகொலையை ஒருவேளை தடுத்திருக்கலாம். 38 வயதில் பரிதாபமாகக் கொல்லப்பட்டார் பத்மநாபா. ஆயுதமேந்தித்தான் பத்மநாபாவும் போராடினார் என்றாலும், அவரது கரங்களில் ரத்தக்கறை இருந்திருக்கவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் எந்தவொரு சாதாரண வழக்கிலும் கூட அவர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தாழ்த்தப்பட்டோர், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லீம்கள் என அனைத்துத் தமிழ் மக்களின் ஆதரவும் பத்மநாபாவின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்கு அன்று இருந்தது. தொலைநோக்குச் சிந்தனையாளர். சர்வதேச அரசியல் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டவர். ‘தமிழ் மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை, மக்களுக்காகத்தான் மண்ணை நேசிக்கிறேன்’ என்றவரை இனத்துரோகி என்றார்கள்.
எழுத்தாளர் J. Ramki எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
© 2024 itsdiff Entertainment (Audiobook): 9798882470660
Release date
Audiobook: September 1, 2024
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International