Step into an infinite world of stories
Fiction
தமிழின் பழமையே புதுமையான படைப்புக்கு எதிராக இருந்தது. ஆனாலும், எழுத்தாளர்கள் எழுதினார்கள். 1892 ஆம் ஆண்டில் 'விவேக சிந்தாமணி' தொடர்கதை வெளியிட்டது. ராஜமையர் 'கமலாம்பாள் சரித்திரம் முழுமையாக வெளிவந்தது. ஆனால், அது நாவலுக்கான பத்திரிகை இல்லை.
அதில் பல அம்சங்கள் வந்தது போல தொடர்கதையும் கவிதைகளும் கதைகளும் வந்தன. மக்களுக்குக் கதைகள் பிடித்திருந்தன. கதையில் அவர்கள் தங்களைக் கண்டார்கள். பெருமளவு கற்பனையும் இலட்சியவாதமாகக் கதைகள் இருந்தாலும் அவற்றின் உயிர்நாதமாக வாழ்க்கை இருப் பனதை அறிந்துகொண்டார்கள். அதுவே, மக்கள் கதை படிப்பதற்கு ஆதாரமாக அமைந்தது. பலர் கதைகள் எழுதினார்கள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தனியான நோக்கம் - ஈடுபாடு இருந்தன.
அது போல பத்திரிகைகள் வந்தன. அவைகளும் கதைகளுக்கு ஒரு விதி வைத்துக்கொண்டன. யார் எங்கு பொருந்துவார்களோ அங்கே சென்றார்கள். சிலர் பத்திரிகை, கட்சி, இலட்சியம் என்பதில் கரைந்து போனார்கள். மற்றும் சிலர் தங்களின் படைப்பு என்பது தாம் சார்ந்ததென்றும் அது மக்களின் பொதுப்பண்போடு இணைந்து போவதென்றும் கதைகள் எழுதினார்கள்.
அவர்களின் கதைகள் இலக்கியத்தரமான கதைகள் - புரியாத கதைகள் - மக்களுக்குத் தேவையில்லாத கதைகள் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். அதன் காரணமாகத் தமிழ் மக்கள் தரமான அசலான கதைகளைப் படிக்க மாட்டார்கள். அவர்களுக்கு உகந்ததெல்லாம் மலிவான நகைச்சுவை நிறைந்த - அவர்கள் வாழ்க்கையை எவ்விதத்திலும் பிரதிபலிக்காத கதைகள் என்று வெளியிட்டார்கள்.
அவை அதிகமாகப் படிக்கப்பட்டன என்பது தெரிகிறது. ஆனால், இலக்கியம்தாம் என்பது ஏராளமானவர்கள் படிக்கிறார்களா? குறைந்த எண்ணிக்கையினர் படிக்கிறார்களா என்பது சார்ந்தது இல்லை.
அது அவர்கள் சமூகம் சார்ந்தது. வாழ்க்கை என்பதே தரம் சார்ந்ததுதான். அந்தத் தரம் இலக்கியத்தோடும் சேர்ந்து இருக்கிறது.
படைப்பு, தரம் என்பதில் அக்கறை கொண்ட படைப்பு எழுத்தாளர்கள் தங்கள் நோக்கத்தின்படியே எழுதுகிறார்கள். அதற்காக அவர்கள் பெரிய பெரிய பத்திரிகைகள், பல்கலைக்கழகங்கள் என்று அங்கீகாரத்திற்காகத் தேடிப் போவதில்லை. தங்கள் அளவில் அச்சிடுகிறார்கள். அவர்களுக்கு எத்தனை பிரதி விற்பனையாகும்; எத்தனை பேர் படிப்பார்கள் என்ற காலாக்கெல்லாம் எடுப்பதில்லை. அவர்கள் வாசகர் பலம் சார்ந்து இருப்பதில்லை. படைப்பு பலம் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் படைப்புகள் படைப்பு என்பதாலேயே நினைத்து இருக்கின்றன.
ஐம்பதாண்டுக் காலமாக சிறுகதைகள் எழுதி வரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி தக்கையின் மீது நான்கு கண்கள். இக்கதைகள் 1965-ஆம் ஆண்டிற்கும் 1872 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டாண்டுக் காலத்தில் எழுதப்பட்ட கதைகள், தமிழ்க் கதைகள், மக்கள் வாழ்க்கையைப் பற்றிய கதைகள். அவர்கள் வாழ்க்கை முறையை விமர்சனம் செய்யவோ அவர்களை மேலே கைதூக்கிவிடுவதற்கோ, புகழவோ - இகழவோ எழுதப்பட்ட கதைகள் இல்லை. அவர்கள் வாழ்க்கை, அவர்கள் நம்பிக்கைகள், அவர்கள் எதனைச் சார்ந்து வாழ்கிறார்களோ அதனை அறிந்த விதமாகவும் அறியமுடியாத அம்சத்தை அப்படியே சொல்கின்ற கதைகள்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை இருக்கிறது என்பதுதான் கதைகள் எழுதுவதற்குக் காரணமாக அமைகிறது. ஆனால், என் கதைகளில் நான் இல்லை. என் சொந்தக் கதையைச் சொல்வதில் எனக்கு விருப்பமே கிடையாது. வாசிக்கின்றவர்கள் தங்கள் கதையை எழுதிக்கொள்ளவே நான் கதையெழுதுவதாக நினைக்கின்றேன். ஆனால், அதன்படி எழுதப்பட்டிருக்கிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
படைப்பிலக்கியம் என்பது பற்றி எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது என்பதுதான் அதன் அடிப்படை. அது மற்றவர்கள் சொல்வது, மதிப்பீடு செய்வது என்பதுதான் இல்லை. எழுதிய ஆசிரியனே ஒன்றும் சொல்லிவிட முடியாது என்பதுதான். அவனால் எழுதப்பட்டது என்பதற்கு மேல் படைப்பில் அவனுக்கு ஒரு அதிகாரமும் கிடையாது.
தக்கையின்மீது நான்கு கண்கள் - தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகளைப் படிக்கின்றபோது வெட்கப்படவோ நிராகரிக்கவோ கூடிய கதைகள் எதுவும் சேர்ந்திருக்கவில்லை என்பது தெரியகிறது. அது தொடர்ந்து எழுத்துலகின் தொடர்ச்சியாகவே இருக்கிறது
தக்கையின் மீது நான்கு கண்கள் – ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆப் இந்தியா இதழில் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அது இந்திய தூர்தர்சனில் நவீன இலக் கியம் - என்ற தொடரில் இயக்குநர் வசந்தால் குறும்படமாக்கப் பட்டது. தேசிய திரைப்பட விழாவில் சிறந்த குறும்படம் என்று விருது பெற்றது.
தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏழு சிறுகதைகள், 1970ஆம் ஆண்டில் நாங்கள் நடத்திய கசடதபற என்ற சிற்றிதழில் வெளிவந்தவையாகும். அதன் ஆசிரியர் நா. கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி.
Release date
Ebook: January 3, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International