Step into an infinite world of stories
4.8
Non-fiction
an Aurality and itsdiff Entertainment tamil audiobook production authored by Amaruvi Devanathan, ebook and book published by Swasam Publications
உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தனித்துவத்தையும் உள்ளார்ந்த தத்துவத்தையும் ஒருங்கே கொண்டு திரண்டிருக்கும் இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த வைதீக வைஷ்ணவர்களின் இடப்பெயர்வுகளையும், அவர்கள் உடன் கொண்டு சென்ற கலாசாரக் கூறுகளையும், அழகுற கண்முன்னே சித்திரமாய் விரிக்கிறது. அக்காலகட்டத்திலே வாழும் வாசக அனுபவம் உறுதி. பஞ்சம் பிழைக்க வேர்களை விட்டுச் சென்று பிழைப்பு தேடும் அவலங்களையும், செய்யும் சமரசங்களையும், பெறும் உதவிகளையும், தலைமுறைகள் கடந்தும் விட்டுச்செல்லும் அதிர்வுகளையும் பிசிறின்றி நெய்துள்ளார் நாவலாசிரியர் ஆமருவி தேவநாதன். - எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் *** ஆமருவி தேவநாதன் - ‘பழைய கணக்கு’ சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். அத்தொகுப்பில் இடம்பெற்ற ‘ஸார் வீட்டுக்குப் போகணும்’ சிறுகதை, பாரத மனிதவள அமைச்சின் தேசியப் புத்தக நிறுவனத்தின் ‘சிறந்த 25 கதைகள்’ வரிசையில் இடம்பெற்றது.
இவரது ‘நான் இராமானுசன்’ நாவல், தத்துவ விவாதங்களைக் கிளப்பி, பரவலான வரவேற்பைப் பெற்றது. ‘Monday is not Tuesday’, ‘Singapore Diary’, ‘நெய்வேலிக் கதைகள்’ ஆகியவை இவரது பிற நூல்கள். ‘வந்தவர்கள்’ இவரது ஆறாவது நூல். பன்னாட்டு வங்கியில் மென்பொருள் கட்டமைப்பாளராகப் பணிபுரிகிறார். சென்னையில் வசிக்கிறார்.
© 2025 itsdiff Entertainment (Audiobook): 9798347834136
Release date
Audiobook: January 3, 2025
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International