خطوة إلى عالم لا حدود له من القصص
الرواية
கமலா வீட்டிற்கு வந்தபோது மணி ஏழரை. தன்னுடைய ஸ்கூட்டரை வீட்டின் முன்னே, தோட்டத்துப் பக்கம் வாகனங்கள் நிறுத்துவதற்காக கட்டப்பட்டிருந்த இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே வந்தாள். அலங்காரமான அழகான வீடு. பணக்காரத் திமிரில் தலைநிமிர்ந்து நின்றது. அவளுடைய கன்னத்தைப் போல் பளபளக்கும் தரை. கமலா மாடிக்கு வந்தாள். தன்னுடைய அறைக்குள் வந்து மெத்தையில் விழுந்தாள். கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய மனம் குதூகலித்தது. முரளி தந்த முத்தமும் மோகப் பேச்சும் அவளைக் கணிசமானதொரு களிப்பில் ஆழ்த்தியிருந்தது. குளியலறைக்குள் நுழைந்து குளித்தாள். புத்துணர்வுடன் வெளியே வந்தாள். இரவு உடையில் தன்னை நுழைத்துக் கொண்டாள். மெல்லிய ஒப்பனை செய்தாள். படிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டு இருக்கைக்கு வந்தாள். புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினாள். காதலில் விழுந்த கண்களின் எதிரே இருப்பதெல்லாம் காதலனின் முகத்தை தவிர வேறில்லை. அச்சில் இருக்கும் எழுத்தெல்லாம் அவனாகவே இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. படிப்பதற்கு சிரமப்பட்டாள் கமலா. கமலாவின் தந்தை பிரபல சோப்பு நிறுவனம் ஒன்றின் சொந்தக்காரர். மார்க்கெட்டில் அவருடைய நிறுவனப் பொருட்களுக்கே முதலிடம். ‘மணிவண்ணன்’ அவருடைய திருநாமம். அவரைத் தெரியாதவர்களே சுற்று வட்டாரத்தில் இல்லை. அவருடைய ஒரே மகள் கமலா. அவருடைய சொத்துக்களின் ஒரே வாரிசு. மூன்று வருடங்களுக்கு முன்புதான் மணிவண்ணனின் மனைவி, கமலாவின் தாய் இறந்து போனாள் மூளையில் கட்டி வந்து ஆபரேஷன் செய்தும் பலன் இல்லாமல் போய் சேர்ந்தாள். மணிவண்ணன் பணத்தைவிடப் பாசத்தை பெரிதாக நினைப்பவர். மனைவியின் இழப்பு, அவரை மிகவும் பாதித்தது. ஆனால், மகளின் முகத்திற்காகசிரித்தார். மிகவும் கண்டிப்பானவர், ஒரே மகள் என்பதற்காக அவர் அவளை செல்லம் கொடுத்தெல்லாம் வளர்க்கவில்லை. அதே சமயம் சிலரைப் போல் ஒரேயடியாக கண்டிப்பை செலுத்துபவரும் இல்லை. மனைவியை இழந்ததிலிருந்து அவர் நிறைய மாறியிருந்தார் முன்பெல்லாம் வியாபாரம், வியாபாரம் என இருப்பார். அவர் எந்த நேரத்திற்கு வீட்டிற்கு வருவார், எந்த நேரத்தில் சாப்பிடுகிறார் என்பதெல்லாம் அவளுக்கே தெரியாமல் இருந்தது. பெரும்பாலும் அம்மாவிடமே அதிக ஒட்டுதல் அவளுக்கு அம்மா எல்லாவற்றையும் நிர்வகித்துக் கொள்வாள். மகளை கவனிக்க மனைவி இருக்கிறாள் என அலட்சியமாக இருந்த மணிவண்ணன் அவள் இறந்ததும் திணறிப் போனார். மகளுக்காக அதன் பிறகு இரவு சீக்கிரமே வந்து விடுவார். எந்த வேலை எப்படியிருந்தாலும் இரவு சாப்பாடு மகளுடன்தான். அம்மாவின் அரவணைப்பை இழந்த கமலாவிற்கு அப்பாவின் ஒட்டுதல் ஆறுதல் தந்தது. பணத்தைவிட அப்பா பாசத்திற்கு முக்கியத்துவம் தந்தது அவளுக்குத் தாயின் இழப்பை மறக்க வைத்தது. எப்படியோ முரளியைக் கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு படிப்பில் கவனத்தை செலுத்தினாள் கமலா. அவள் எம்.காம். கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். சரியாய் ஒன்பது மணிக்கு அப்பா வந்து விட்டார். அடுத்த சில நிமிடங்களில் புத்தகத்தை மூடிவிட்டு இறங்கி கீழே வந்தாள்.. பசி வயிற்றைக் கிள்ளியது. அப்பா மாற்றுடைக்கு மாறி அறையை விட்டு வந்தார். “கமலா... சாப்பிடலாமா? பயங்கர பசி” என்றார். “எனக்கும்தாம்பா...” என்றாள். அப்பாவும் பெண்ணும் சாப்பாட்டு மேஜையருகே வந்து அமர்ந்தனர். இருவரும் பொதுவான விஷயங்களைப் பேசியபடியே சாப்பிட்டனர். “கமலா...” உருளைக் கிழங்கை ருசித்தபடியே மணிவண்ணன் மகளைப் பார்த்தார். “என்னப்பா...?” திடுக்கிட்டவளைப் போல் கேட்டாள். அவளுடைய மனம் ஒருபுறம் முரளியுடன் உலாவிக் கொண்டிருந்ததே காரணம்
© 2024 Pocket Books (كتاب إلكتروني): 6610000532988
تاريخ النشر
كتاب إلكتروني: 14 فبراير 2024
الوسوم
أكثر من 200000 عنوان
وضع الأطفال (بيئة آمنة للأطفال)
تنزيل الكتب للوصول إليها دون الاتصال بالإنترنت
الإلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
قصص لكل المناسبات.
حساب واحد
حساب بلا حدود
1 حساب
استماع بلا حدود
إلغاء في أي وقت
عربي
الإمارات العربية المتحدة