Narrated by : Sri Srinivasa
Tamil Audio Books
email feedback : tamilaudiobooks@gmail.com
"திருமலைத் திருடன் ஆசிரியர்: திவாகர் Narrator - Sri Srinivasa
திருமலை வேங்கடவனை பின்புலமாகக்கொண்டு ராமானுஜரும், அகோரா சிவாச்சாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நாவல் சூழல்கள், சூழ்ச்சிகள் சொக்கட்டான் விளையாட்டுக்கள் -யுத்தகாலத்து வீரவாள் போல் மின்னலிட்டுக்கொண்டு சுழன்று வருவது ஆச்சரியம் மிக்கது
முனைவர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் அணிந்துரையிலிருந்து ஒரு சில வரிகள் இதோ ....
தமிழகத்தில் பெருவாரியான வாசகர்களை வரலாற்றுப் புதினங்கள் பக்கம் ஈர்த்த கல்கியின் வழியில், திவாகர் படைத்தது தந்திருக்கும் "" திருமலை திருடன்"" பல்லாயிரம் கலைஞர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் என்ற மஹாகவியின் ஒருமைப்பாட்டுக் குரலுக்கு உரமும், வளமும் சேர்கிறது ஆசிரியர் திவாகரது இந்தப் புதினம்
சைவ மரபில் வந்த சோழ வேந்தர் பரம்பரை ஒரு புறம், சாளுக்கிய மரபின் குருவாக வரும் பில்வணனின் கடவுள் மறுப்புக் கோட்பாடு இன்னொரு புறம். வைணவத்தின் புண்ணியப் பேரொளி ராமானுஜரின் தத்துவ நெறி மற்றொருபுறம் என மூன்று நம்பிக்கைகள் இழைந்தும், எதிர்த்தும், நிகழ்த்தும் செயல்பாடுகளை இப்புதினம் நிகழ்வுகளாகக் கொள்கிறது "
Masuki dunia cerita tanpa batas
Bahasa Indonesia
Indonesia