Masuki dunia cerita tanpa batas
Fiksi
இயற்கையைத் தொட்டு, சமுதாய அவலங்கள், காதல், சேமிப்பு, தாய்மை என்று முதலும் முடிவும் ஆகிய பெண்மையில் தனது தன்முனைப்பை நிறைவு செய்தது அழகோ! அழகு!! இரவு பெண் அலங்காரத்தில் நிலாப் பொட்டு, இயற்கையை விவரிப்பதே அகமகிழ்ச்சி. மனிதேய இலக்கணம் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல் தன்னினம் மட்டுமல்ல, தரணியில் அனைத்துயிர்க்கும் என்று பாரதியைப் போல் *காக்கைக் குருவி எங்கள் சாதி* குருவிக்கு உணவு அளிக்கும் *நேயம்*. இன்பத்திலே பெரிய இன்பம் இருப்பதில் கொடுப்பது; பேரின்பம் இருப்பதையேக் கொடுப்பது கருணையின் இலக்கணமாய் வாழ்ந்த அன்னை தெராசாவை கண்முன் காட்டி கலங்கவைக்கும் நெகிச்சியாக உள்ளது. வெற்றிக்கான வழிமுறையாக முயற்சியும் திட்டமும் என்று எடுத்துரைக்கும் போது நமக்குள் பல ஆலோசனைக் கூட்டத்தின் சாராம்சம் என்றே கருதலாம்.
சேமிப்பு என்னும் எதிர்கால வைப்பு நிதி பாதிப்பு இல்லாம் வாழலாம். *இயலாத நாட்களில் இன்பமாய் வாழலாம்* என்கிறார். இலக்கைக் குறிவைத்து இன்னொரு உலகைத் தொடவைக்க துணிவு தான் மாபெரும் ஆயுதம்.
கொடுமையிலும் கொடுமை தனிமை. அதனைக் கூட *தனிப்பெரும் கொடுமை* என கவிஞர் சுட்டிக்காட்டுகிறார். உலகினில் பெரிது பெரிது தாய்மை என்று *ஔவையை* ப் போல் அரிது, பெரிது என பட்டியலிடுகிறார் கவிஞர்.
அறிவு என்னும் சுகமான சுமையைத் தாங்கிட புத்தகச் சுமையும், பசி என்னும் காலிக் குடத்தை நிரப்ப குப்பை பாரமென இரண்டு வேறுபட்ட நிலைக்கு புதுவிளக்கம் தந்துள்ளது *இரு சுமை தாங்கிகள்*. கொஞ்சிப் பேசியே குழிக்குள் விழ வைப்பார் யார்? நயவஞ்சகர். இறந்தும் வாழ்கின்ற நிலைத்த புகழினர் *இறப்பின் சிறப்பு*. ஆண்டுக்காண்டு இடர்கள் பெருகினும் வாழ்த்தும் மரபு வீழவதில்லை, புத்தாண்டுக்கும் சேர்த்தே. தவம் என்பது யாருமற்ற வனத்தில், உணவு, நீர் தவிர்த்து இருப்பதில்லை. உண்டவர் வயிறு நிறையும் ஏப்ப சத்தமும், பரிமாறும் போது கரண்டிக்கும் குண்டானுக்குமான காதல் மொழியில் கூட தவம் செய்யலாம் அன்னதானம் வழங்கியே.
தை என்றால் கரும்பும் மஞ்சளும் பொங்கலும் என வரிசை கட்டி நினைவுக்குள் நின்று விடுவது இயல்பு. இதன் அடிப்படை நோக்கம் நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் விளக்கம் எனக் கருதலாம். விடியலுக்கு வரவேற்புத் தோரணம் கோலம். ஒற்றுமை இருப்பின் பிரிவினை என்னும் கொடுப்பாவிக்கு இடம் ஏது?
Tanggal rilis
Ebook: 9 Juli 2025
Tag
Lebih dari 900.000 judul
Mode Anak (lingkungan aman untuk anak)
Unduh buku untuk akses offline
Batalkan kapan saja
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bahasa Indonesia
Indonesia