Masuki dunia cerita tanpa batas
Fiksi
மா. கமலவேலன்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.மா.கமலவேலன் 15 ஜனவரி 1943 அன்று பிறந்தவர். தந்தை பெயர் திரு.தா.சொ.மாணிக்கவாசகன். தாயார் பெயர் திருமதி.சூரியவடிவு. மனைவியின் பெயர் திருமதி.முத்துலட்சுமி. இவர் தனது “அந்தோணியின் ஆட்டுக்குட்டி” என்ற சிறுவர் நாவலுக்காக 2010 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர். முதல் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர் என்ற பெருமையினை திரு.மா.கமலவேலன் அவர்கள் பெறுகிறார். இவர் 1961 ஆம் ஆண்டிலிருந்து சிறார்களுக்காக எழுதி வருபவர். இவர் “புதுமை” என்ற தலைப்பில் எழுதிய முதல் சிறார் சிறுகதை “கண்ணன்” பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து கண்ணன், “அரும்பு”, “கோகுலம்”, “பாலபாரதி”, “பாலர் மலர்”, “தினமணி சிறுவர்மணி” போன்ற சிறார் இதழ்களில் பல்வேறு சிறார் படைப்புகளைத் தந்தவர். சிறார் இலக்கியத்தில் சிறுகதை, நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு என பல தளங்களில் இயங்கி வருபவர். இவர் வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் படைப்புகளை வழங்கி உள்ளார். இன்றும் அகில இந்திய வானொலியில் இவரது நாடகங்கள் தொடர்நது ஒலிபரப்பாகி வருகின்றன. இதுவரை மொத்தம் 80 நூல்களை எழுதியுள்ளார். இதில் 22 சிறார் நூல்கள் ஆகும். “அந்தோணியின் ஆட்டுக்குட்டி”, “நேசிக்கும் நெஞ்சங்கள்”, “தெளிவு பிறந்தது”, “தன்னம்பிக்கை தந்த பரிசு”, “ஜப்பான்நாட்டுக் கதைகள்”, “குழந்தைகள் கொண்டாடும் குடியரசுத்தலைவர்” முதலான தலைப்புகளில் பல சிறார் நூல்களை எழுதியவர். இவர் எழுதிய சிறார் நூல்களை பழனியப்பா பிரதர்ஸ், தென்றல் நிலையம், மணிவாசகர் பதிப்பகம், என்.சி.பி.எச், தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட் போன்ற பதிப்பகங்கள் பதிப்பித்துள்ளன. சுமார் 70 ஆண்டுகளாக சிறுவர் நாடகங்களில் ஒரு நடிகராக, எழுத்தாளராக, இயக்குநராகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பெருமை உடையவர். அகில இந்திய வானொலி நிலையம், திருச்சி மற்றும் மதுரை போன்றவை இவருடைய சிறுவர்களுக்கான நாடகங்களை 1970 முதல் இன்று வரை தொடர்ந்து ஒலிபரப்பி வருகின்றன. இவர் எழுதிய சிறுவர்களுக்கான நாடகங்கள் புகழ் பெற்ற “கண்ணன்” இதழில் 1965 முதல் 1971 வரை தொடர்நது பிரசுரமாகி வந்துள்ளன. மேலும் “கோகுலம்” இதழிலும் இவர் பலப்பல சிறுவர்களுக்கான நாடகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “பாவமா ? சாபமா ?”, “எங்கப்பாவா கஞ்சன்”, “வாடாமலர்” முதலான நாடகங்கள் கோகுலம் இதழில் பிரசுரமானவை. அசோகன் பதிப்பகத்தார் 1985 ல் இவர் எழுதிய நாடகங்களைத் தொகுத்து “உறவுப்பாலம்” என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளனர். இந்த நூலில் உறவுப்பாலம், வேடிக்கை மனிதர்கள், தொழில் ஒன்று துவக்க வேண்டும், ஒளியை நோக்கி ஒரு கிராமம், குணங்கள் சூழ்நிலைகள் பாதிப்புகள் என ஐந்து நாடகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடக நூலினை பள்ளிக் கல்வித் துறையால் கரும்பலகைத் திட்டத்தில் 11000 படிகள் வாங்கப்பட்டு தமிழ்நாடெங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இவருடைய சிறார் இலக்கியப் படைப்புகள் பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றுள்ளன. இவருடைய படைப்புகளுக்காக கோவை லில்லிதேவசிகாமணி விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் விருது என பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவொளி இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக மால்கம் ஆதிசேஷய்யா விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம் வழங்கிய அழ.வள்ளியப்பா சிறப்பு விருது பெற்றுள்ளார். இவருடைய படைப்புகளை ஆய்வு செய்து ஐந்து பேர்கள் எம்.ஃபில் பட்டமும் இரண்டு பேர்கள் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்கள். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இரண்டிலும் இவர் எழுதிய “அழுக்குப்படாத அழகு” என்ற நாடக நூல் பாடமாக அமைந்துள்ளது. இவர் எழுதியுள்ள கே.ஆர்.நாராயணன் வாழ்க்கை வரலாறு இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்தோணியின் ஆட்டுக்குட்டி மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த 48 ஆண்டுகளாக திண்டுக்கல்லில் வாழ்ந்து வருகிறார். கைப்பேசி எண் 9942173875
Tanggal rilis
buku elektronik : 29 Juli 2021
Lebih dari 900.000 judul
Mode Anak (lingkungan aman untuk anak)
Unduh buku untuk akses offline
Batalkan kapan saja
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bahasa Indonesia
Indonesia