Masuki dunia cerita tanpa batas
அந்த எக்ஸ்பிரஸ் ரயில் ராட்சஸ இரைச்சலோடு ஸ்டேஷனுக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்க – பிரயாணிகள் தத்தம் லக்கேஜ்களை எடுத்து வைத்துக் கொண்டு இறங்கத் தயாரானார்கள். எஸ்-5 கம்பார்ட்மென்ட்டில் இருந்தாள் ஆஷிகா. பர்ப்பிள் நிறத்தில் தொள தொள டி.சர்ட்டும் கறுப்பில் இறுக்கமான ஜீன்ஸும் அணிந்திருந்தாள். தோள்வரை நின்றிருந்த கூந்தல் காற்றில் பறந்தது. ஹேண்ட் பேகைத் தோளில் மாட்டிக் கொண்டவள் - பெரிய சூட்கேஸை வலது கைக்கு கொடுத்து எடுத்துக் கொண்டாள். ரயில் கம்பார்ட்மெண்ட்கள் ஏர் பிரேக்கின் அழுத்தம் தாங்காமல் ஆங்காங்கே கிறீச்சென்று அலறியபடி இயக்கங்களைப் படிப்படியாய் நிறுத்திக் கொண்டது. வாயிலை அடைத்துக் கொண்டு சக பயணிகள் இறங்க - சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு சிரம மூச்சுடன் கடைசி ஆளாக பிளாட்பாரத்தில் காலை வைத்தாள். சூழ்ந்த போர்ட்டர்களைத் தவிர்த்துவிட்டு ரோலரின் உதவியுடன் சூட்கேஸை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். சூட்கேஸ் நாய்க்குட்டி மாதிரி விசுவாசமாய் அவளை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. எரிச்சலான - ஒரு போர்ட்டர் ஆசாமி மட்டும் விடாமல் அவள் பின்னே வந்தான். அழுக்காய் இருந்தவனின் முகத்தில் முள்முள்ளாய் தாடி. எண்ணெய்ப் பசை இல்லாத பரட்டைத் தலை. அவளோடு இணையாய் நடந்து வந்து கொண்டே சொன்னான். “பிளாட்பாரம் முடிஞ்சதுன்னா ரோலரை வெச்சு சூட்கேஸை உருட்டிட்டுப் போக முடியாதும்மா...”நான் பார்த்துக்கிறேன்... நீ தொந்தரவு பண்ணாம போயிடு...” “ஸ்டேஷனை விட்டு ஆட்டோ ஸ்டாண்ட் கொஞ்சம் தள்ளி இருக்கும்... அது வரைக்கும் தூக்கிட்டுப் போறதுன்னா கஷ்டம்...” “நான்தான் போர்ட்டர் வேண்டாம்ன்னு சொல்றேனே.” “நான் போர்ட்டர் இல்லையம்மா... அவங்க இந்த லக்கேஜுக்கு பத்து ரூபா கேப்பாங்க. நீங்க எனக்கு அஞ்சு ரூபா தந்தா போதும். சாப்பிட்டு நாலு நாளாச்சு...” மூச்சு வாங்க நடந்து கொண்டே அவனைத் திரும்பிப் பார்த்தாள் ஆஷிகா. நெற்றியில் ஒரு வெட்டுக் காயத் தழும்பு... கண்களில் நிரந்தரமாத் தேங்கியிருந்த சிவப்பு... அவன் வாய் திறந்து பேசும்போதெல்லாம் குமட்டலாய் வீசும் சாராய நாற்றம்... அவன் தோற்றம் அவளுக்குள் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தவில்லை. சற்றே ஒதுங்கி நடந்து கொண்டே கொஞ்சம் இறுக்கமான குரலில் சொன்னாள். “நீ இப்ப அந்தப் பக்கம் போறியா இல்லையா...?” அவள் சற்றே குரலை உயர்த்தியதும் - திடீரென்று அவன் முகத்தில் இருந்த கெஞ்சல்தனம் காணாமல் போனது. “நான் போறேண்டி… நியாயமா கேட்டா நீங்க தர மாட்டீங்க…” கோபமாய் கத்தியவன் - வெடுக்கென்று அவள் தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேகை வேகமாய் இழுத்தான். ஆஷிகா தடுமாறி அவனை அதிர்ச்சியாய்ப் பார்க்கிற போதே பேகின் வார் அறுந்து அவன் கைக்குப் போனது. அவன் ஒடத் துவங்கினான். “பிடிங்க... பிடிங்க... திருடன்... திருடன்...” முன்னால் போய்க் கொண்டிருந்த நபர்களைத் பார்த்துக் கத்தினாள் ஆஷிகா.அவன் ஒரு கையால் கத்தியைக் காட்டிக் கொண்டே ஓட ஸ்டேஷனில் இருந்த எல்லாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். “யாரை நம்பியும் பிரயோசனம் இல்லை” ஒரு முடிவுக்கு வந்தவளாய் சூட்கேஸை அருகிலிருந்த பத்திரிகை ஸ்டால் ஆளிடம் தந்துவிட்டு அவனைத் துரத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தாள் ஆஷிகா. ஐந்து நிமிஷ ராட்சஸ ஒட்டம்... சாலையின் கூட்டமான பகுதியை நெருங்கிய போது அவனுடைய வேகம் தடை பட - ஆஷிகா தன் மின்னல் ஓட்டத்தில் அவனை எட்டிப் பிடித்து அவன் சார்ட் காலரைக் கொத்தாய் பற்றினாள். “நில்லுடா” அவன் பளபளக்கிற கத்தியை அவளுக்கு எதிரே நீட்டினாள். “என்னை விடு! இல்லைன்னா சொருகிடுவேன்…” அவனுடைய மிரட்டலை அலட்சியப்படுத்திய ஆஷிகா மின்னல் வேகத்தில் காலை உயர்த்தி அவன் கையிலிருந்த கத்தியைத் தட்டி விட்டாள். அது “டிங் டிணார்” என்ற சப்தத்தோடு ப்ளாட்பாரத்தில் விழுந்து கொண்டிருக்க - ஆஷிகாவின் அதிரடி தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சியில் தடுமாறி நின்றிருந்த அவனுடைய வயிற்றுப் பிரதேசத்தில் எட்டி உதைத்தாள். “த்த்த்த்ட்ட்ட்ட்” அவன் நிலை குலைந்து விழுந்தான். கும்பல் இப்போது பக்கத்தில் வர ஆஷிகா சீறினாள்.
© 2024 Pocket Books (Ebook): 6610000530311
Tanggal rilis
Ebook: 8 Februari 2024
Tag
Lebih dari 900.000 judul
Mode Anak (lingkungan aman untuk anak)
Unduh buku untuk akses offline
Batalkan kapan saja
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas
1 akun
Akses Tanpa Batas
Akses bulanan tanpa batas
Batalkan kapan saja
Judul dalam bahasa Inggris dan Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.
1 akun
Akses Tanpa Batas
Akses tidak terbatas
Batalkan kapan saja
Judul dalam bahasa Indonesia
Bahasa Indonesia
Indonesia
