ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4
สืบสวนสอบสวน
ஃபேக்ஸ் தாளில் வரி வரியாய் ஓடியிருந்த எழுத்துக்களின் மேல் மறுபடியும் பார்வையைப் போட்டார் வர்மா. இது அவசரம் மற்றும் இரகசியச் செய்தி. சமஜ்பூர் தொகுதி எம்.பி. துளசிராம் கன்யாலால் அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். ஆனால் அவருடைய உருவத் தோற்றத்தோடு வேறு ஒரு நபர் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளான். அவன் எதற்காகப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளான் என்று தெரியவில்லை. ஒருவேளை அவன் தீவிரவாதியாக இருக்கக்கூடும்... பாராளுமன்ற செக்யூரிட்டி விங்க் திறமையாகச் செயல்பட்டு அவனை மடக்க வேண்டும். விபரீதம் நிகழ்வதற்கு முன் விரைந்து செயல்படுவது அவசியம். - டெல்லி போலீஸ். வர்மாவின் முகத்திலும் இப்போது வியர்வை. பக்கத்தில் நின்றிருந்த மார்ஷலை ஏறிட்டார். “பாபட்லால்...” “ஸார்...” “சமஜ்பூர் எம்.பி. துளசிராம் கன்யாலால் மாதிரி உருவத் தோற்றத்தோடு யாரோ ஒருவன் சபைக்குள்ளே போயிருப்பதாகச் செய்தி... நீங்கள் சபை வாயிலில்தானே நின்றிருந்தீர்கள்...?” “ஆமாம் ஸார்...” “பின்னே எப்படி அந்த நபர் உள்ளே போனார்...?” “ஸார்... நாங்கள் ஒவ்வொருவரையும் உன்னிப்பாய்க் கவனித்துத்தான் உள்ளே அனுப்பி வைத்தோம். எங்கள் ஸ்கேன் கண்களை ஏமாற்றிவிட்டு யாரும் உள்ளே போயிருக்க முடியாது.“அப்படியால் ஃபேக்ஸ் செய்தி பொய் என்று சொல்ல வருகிறீர்களா...?” “டெல்லி போலீஸ் கொடுத்திருக்கும் - ஃபேக்ஸ் செய்தி பொய்யாய் இருக்க முடியாது. ஸார். ஏதோ ஒரு குளறுபடி நடந்துள்ளது. அது என்ன என்பதை இப்போது கண்டுபிடித்து விடலாம். கம்ப்யூட்டர் அறைக்குப் போய் அந்த பர் துளசிராம் கன்யாலாலை ஸ்க்ரீன்னில் மானிடர் செய்து பார்க்கலாம். ஐடென்டிஃபிகேசன் ஃபிளாப்பியை கம்ப்யூட்டருக்குக் கொடுத்தால் அதுவே சபைக்குள் இருப்பது சமஜ்பூர் தொகுதி எம்.பி. துள்சிராம் கன்யாலாலா இல்லையா என்பதைச் சொல்லிவிடும்...” “சபாநாயகர் உள்ளே போய் விட்டார். சபை இன்னமும் ஐந்து நிமிஷங்களில் ஆரம்பமாகிவிடும்.” “சபை நடந்து கொண்டு இருக்கட்டும் ஸார். நாம் அந்த நபரின் நடவடிக்கையைக் கம்ப்யூட்டரில் மானிட்டர் செய்து பார்ப்போம்...” செக்யூரிட்டி விங் சீஃப் ஆபீஸர் தேசாயும் மார்ஷல் பாபட்லாலின் பேச்சை ஆமோதிக்க, மூன்று பேரும் கம்ப்யூட்டர் அறைக்குப் போனார்கள். சில நிமிஷ நடை. கம்ப்யூட்டர் செஷன் வந்தது. ‘அந்நிய நபர்களுக்கு அனுமதியில்லை’ என்ற வாசகம் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் தெரிய, கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனார்கள். அந்தப் பெரிய அறையின் மூன்று பக்க சுவர் ஓரமாய் ஃபைபர் மேஜைகள் தெரிய, அதன் மேல் பெண்டியம் கம்ப்யூட்டர்கள் வரிசையாய் உட்கார்ந்து அதன் மானிட்டர்’ திரைகளில் பாராளுமன்ற நிகழ்ச்சிகளை வெவ்வேறு கோணங்களில் காட்டிக் கொண்டிருந்தன. கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிரமோத் குழப்பமாய் அவர்களைப் பார்க்க, தேசாய். சொன்னார். “மிஸ்டர் பிரமோத்...! சமஜ்பூர் எம்.பி. துள்சிராம் கன்யாலாலை மானிட்டர் ஸ்க்ரீனில் க்ளோஸப்புக்கு கொண்டு வாருங்கள்...”“ஏன் ஸார்... ஏதாவது பிரச்சனையா...? நீங்கள் மூன்று பேருமே இவ்வளவு பதட்டமாய் இருந்து நான் பார்த்தது இல்லை...” தேசாய் சொன்னார்... “பெரிய பிரச்சனைதான்! சமஸ்பூர் எம்.பி. துள்சிராம் கன்யாலால் வீட்டில் கொலை செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல். ஆனால் பாராளுமன்ற சபைக்குள்ளே துள்சிராம் கன்யாலால் மாதிரியான உருவத் தோற்றத்தோடு யாரோ போயிருக்கிறார்கள். அது யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். மானிட்டர் திரைக்கு துள்சிராம் கன்யாலால் முகத்தை க்ளோசப்புக்குக் கொண்டு வாருங்கள் மிஸ்டர் பிரமோத்...” பிரமோத்தும் பதட்டமாகி கம்ப்யூட்டருக்கு முன்பாகப் போய் உட்கார்ந்தார். கம்ப்யூட்டரின் ஜூம் பட்டனைத் தட்ட சபையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ காமிராவின் கோணம் மாறி, எம்.பி.க்கள் முகங்களைப் பெரிது பெரிதாய்க் காட்ட ஆரம்பித்தது. சமஜ்பூர் எம்.பி.யின் இருக்கை எண் எதுவென்று கம்ப்யூட்டரிடம் பிரமோத் கேட்க, இருக்கை எண் 267 என்று. மானிட்டரின் மையத்தில் உற்பத்தியாகி, பின் காமிராவின் கோணம் நகர்ந்து 267 எண்ணை நோக்கி மெதுவாய் நகர்ந்தது
© 2024 Pocket Books (อีบุ๊ก ): 6610000508617
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 13 มกราคม 2567
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย