ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
3
สืบสวนสอบสวน
கவர்ன்மெண்ட் ஆர்ட்ஸ் காலேஜ். அகலமான காம்பௌண்ட் கேட்டுக்குள் வண்டியை நுழைத்தான் ஜெயேஷ். லூஸ் ஃபிட்டிங் ஷர்ட்டிலும் பேரலல் பேன்ட்டிலும் ஹீரோத்தனமாய் இருந்தான். குளிர் கண்ணாடி - அவன் பர்சனலாட்டியை சில சதவீதங்கள் ஏற்றியது. (அவனுடைய ‘க்ளோஸப்’ புன்னகை பெண்கள் மத்தியில் ரொம்பவும் பிரசித்தம்.). யமாஹா ஷெல்டர் நிழலுக்கு தந்துவிட்டு கல்லூரியின் பிரதான கட்டிடத்தை நோக்கிப்போனான். சல்வார் கம்மீஸ், மிடி, சூரிதார், பேண்ட் சர்ட், ஜீன்ஸ் என்று சகலவிதமான உடைகளிலும் இந்தியாவின் வருங்காலத்தூண்கள் மர நிழலில் நின்று புதிதாய் பாடனி க்ரூப்பில் சேர்ந்திருக்கும் சியாமளாவுக்கு அது ஒரிஜினல் தானா... அல்லது பிரா கைங்கர்யமா என்கிற பட்டி மன்றத்தையும், பிசிக்ஸ் லெக்சர்ணி கோகிலா பிரின்சிபால் ரூமுக்குள் போனால் மட்டும் வெளியே வர ஏன் இவ்வளவு நேரமாகிறது என்பதைப் பற்றியும் ஹாஸ்டல் மெஸ்ஸில் போடும் ஊத்தாப்பத்தின் சைஸ் வரவர சின்னதாகிக் கொண்டே வருவதை முன் வைத்து எப்போது ஸ்ட்ரைக் தொடங்கலாம் என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜெயேஷ் மெயின் பில்டிங் வராந்தாவைப் பிடித்து நாலைந்து அறைகளைக் கடந்து அந்த வகுப்பறையின் முன் நின்றான். தடிமனாய் கண்ணாடி போட்ட பெண் லெக்சரர் க்வார்ட் டைல் கோ எஃபிஷியண்ட்டை மழுங்கின பிளேடாக மாணவ மாணவிகள், மேல் உபயோகித்துக் கொண்டிருந்தார். முன் வரிசை பெஞ்சைத் தவிர மீதி பெஞ்சுக்கள் பூராவும், ஸ்டூடண்ட்ஸ் - கோழித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தார்கள். முன் வரிசையில் மூன்றாவது பெண்ணாக தாரிணி இருந்தாள். வெள்ளையும் வயலட்டும் கலந்த சூடிதார்க்குள் நுழைந்திருந்தாள். ஒரு ஸ்பிரிங் முடி நெற்றியில் விழுந்து ஸ்டிக்கர் பொட்டைத் தொட்டுப் பார்ப்பதும் விலக்குவதுமாய் இருந்தது.“எக்ஸ்க்யூஸ் மீ...’’ ஜெயேஷ் குரல் கொடுக்க லெக்சரரோடு சேர்ந்து வகுப்பு மொத்தமும் திரும்பிப் பார்த்தது. லெக்சரர் கேட்டாள். ‘‘வாட் டு யூ வான்ட்” ‘‘ஐயாம் இன் வாண்ட் ஆஃப் தாரிணி’’ லெக்சரர் கோபமாய் தாரிணியை பார்க்க அந்த கோபத்தைக் கண்டு கொள்ளாதவளாய் புத்தகங்களை அடுக்கிக் கொண்டு வெளியே வந்தாள். ஜெயேஷைப் பார்த்துப் புன்னகைத்தாள். “நல்ல சமயத்தில் வந்து காப்பாத்தினீங்க ஜெயேஷ்!” “நீ என்ன சொல்றே?’’ ‘‘சத்தியமா? லெக்சரர் அறுவையைத் தாங்கவே முடியலை. முன்னால் பெஞ்ச்ல உக்காந்துட்டு தூங்கவும், முடியலை! பல்லைக் கடிச்சிட்டிருந்தேன். நல்ல வேளையா நீங்க வந்தீங்க...’’ “இப்பவாவது என்னோட அருமை உனக்கு புரிஞ்சுதா?’’ சிரித்தபடி இடதுபுறம் திரும்பினான். “இந்தப் பக்கம் எங்கே போறீங்க?’’ “கார்டனில் உட்கார்ந்து பேசலாம்.’’ ‘‘வேண்டாம். மொதல்ல காலேஜ் காம்பஸை விட்டு வெளியே போகணும்” “ஏன்?” ‘‘எங்க அக்கா பாத்துட்டா வம்பு.” ‘‘இது க்ளாஸ் ஹவர். அவங்க வெளியே வர வாய்ப்பில்லை.’’ ‘‘சொல்ல முடியாது. அக்கா ஃபைனல் இயர் ஆச்சே. ப்ராஜக்ட் வொர்க் அது இதுன்னு வெளியே வந்து சுத்திக்கிட்டிருப்பா... ரிஸ்க் - எதுக்கு ரெஸ்டாரென்ட் போயிடலாம்.’’ ‘‘எப்படி இருந்தாலும் ஒரு நாள் உங்க அக்காவுக்கு நம்ம விஷயம் தெரியத்தானே போகுது?’‘‘இப்ப தெரிய வேண்டாம். அக்காவோட மேரேஜெல்லாம் முடிஞ்ச பிறகுதான் எங்கப்பா என்னைப் பத்தி பேச்செடுப்பாங்க. அதுக்குள்ள நம்ம காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிய வேண்டாம்.’’ ‘‘வீட்டுக்குத் தெரிய வேண்டாம். அட்லிஸ்ட் அக்காவுக்கு தெரியறது நல்லது தானே. பின்னால் நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.’’ “யாரு சித்ரா அக்காவா? நல்லா செய்வாளே? அவளுக்கு என்னை வீட்ல மாட்டி விட்றதுன்னா கொள்ளை சந்தோஷம். நம்ம காதல் விவகாரம் தெரிஞ்சா - முதல் வேலையா வீட்ல வத்தி வெச்சுருவா...’’ பேசிக் கொண்டே பைக் நிறுத்தியிருந்த ஷெல்டருக்கு வந்தார்கள், ஜெயேஷ் கிக்கரை உதைத்தான். பைக் ‘தடதடக்க’ பில்லியனில் அமர்ந்தாள் தாரணி. சைலன்சரில் புகை சிந்த காலேஜ் காம்பஸைப் புறக்கணித்தார்கள்
© 2024 Pocket Books (อีบุ๊ก ): 6610000510771
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 13 มกราคม 2567
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย