ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
பத்திரிகை உலகில் நான் நுழைவதற்கு முன்பாக எனக்குப் பரிச்சயமானது, சிறுகதை உலகு. நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது எழுதிய’ அன்புள்ள மலரே!’ என்ற சிறுகதையை, கோவை வானொலிக்கு அனுப்பி வைத்தேன்.’ இளைய பாரதம்’ பகுதியில் என் குரலிலேயே அது ஒலிபரப்பானபோது, என் கால்கள் தரையில் இல்லை. அதற்குப் பிறகு ஓராண்டு கால இடைவெளியில் மேலும் இரண்டு சிறுகதைகள் ஒலி வலம் வந்தன.
அதே காலகட்டத்தில் கோவை மாவட்டத்தில் சேரிபாளையம் என்ற கிராமப்புற பள்ளி ஒன்றில் நடைபெற்றமாவட்ட அளவிலான சிறுகதைப் போட்டியில், நான் படித்த பள்ளி சார்பில் பங்கேற்று பரிசு பெற்றுத் திரும்பினேன்.
இவையெல்லாம், என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை என்னுள் ஆழமாக விதைத்த சம்பவங்கள். ஆனாலும், தொடர்ந்து சிறுகதை எழுத்தாளராக ஆகாமல், பத்திரிகை துறையில் என் பயணம் துவங்கியது.’ தினமணி’ நாளிதழின் சென்னை, கோவை கிளைகளில் பணியாற்றியபோது, ஒரு சில கதைகளை’ தினமணி கதிர்’ க்கு அனுப்பினேன். அவை பிரசுரமாயின. கட்டுரைகள், பேட்டிகள் என்று வேறு தளத்தில் இயங்கிய போது, சிறுகதைகளில் தீவிரமாக ஈடுபட முடியாமல் போயிற்று.
அத்துடன், என்னை ஆழமாகப் பாதித்த விஷயங்களை மட்டுமே சிறுகதைகளாக எழுதி வந்ததால், எண்ணிக்கை குறைவாக இருந்தது. மனம் நிறைந்திருந்தது. நதியின் போக்கில் நகரும் சருகைப்போல, எதையும் வலிந்து திணிக்காமல், இயல்பாக இயங்க முடிந்தது. என் சக தோழிகள், அக்கம்பக்கத்தினர், நான் சந்தித்த மனிதர்கள், எனக்கே நேரடியாக ஏற்பட்ட அனுபவங்களே என் கதைக்கான விதைகள். கையில் கிடைத்த விதைகளை எந்த நிலத்தில் எப்படி விதைக்கவேண்டும் என்று முடிவு செய்தது மட்டுமே நான். அந்த விதைகள் உயிர் பெற்று செடிகளாகி, காய் காய்த்து, பூபூத்து இப்போது உங்கள் கைகளில்’ பூமலரும் காலமாக’ த்தவழ்கிறது. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 11 சிறுகதைகளும் புத்தம் புதியவை. இதற்கு முன்பாக, வேறு எந்த இதழ்களிலும் பிரசுரமாகாதவை. முதன் முறையாக, வாசகர்களை நேரடியாகச் சந்திக்க மலர்ந்திருக்கும் பூ இது.
என் முதல் சிறுகதைக்கான முதல் ரசிகை என்று என் நேசத்துக்குரிய தமிழாசிரியை திருமதி சின்னக்கண்ணு அவர்களைக்குறிப்பிடலாம். எளிமையின் பிறப்பிடமாய், அறிவின் சிறப்பிடமாய்த் திகழ்ந்து அந்த அன்னை கற்றுத் தந்த தமிழ்தான் என்னை இன்று ஒரு கதாசிரியராக அடையாளப் படுத்தியிருக்கிறது. தமிழ் மேல் எனக்கு காதல் பிறக்கக் காரணமாய் இருந்த சின்னக்கண்ணு டீச்சர் இன்று இவ்வுலகில் இல்லாவிட்டாலும் கூட அவரது ஆசிகள் என்றும் எனக்கு நிலைத்திருப்பதாய் நம்புகிறேன்.
இந்தப் புத்தகத்துக்கு சிறந்ததொரு அணிந்துரையை எழுதித் தர யாரை அணுகலாம் என்று யோசித்தபோது, உடனடியாக என் நினைவுக்கு வந்தவர் திரு.திருப்பூர் கிருஷ்ணன். நான் ‘தினமணி’ யில் உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்த புதிதில்’ தினமணிகதிர்’ இதழின் பொறுப்பை கவனித்துக்கொண்டிருந்தார். - தமிழ் இலக்கியங்களில் அவருக்கிருக்கும் ஆழ்ந்த ஈடுபாடும், சமகால நவீனத்துவ இலக்கியங்களைப் பற்றிய அவரது பரிச்சயமும் என்னை பிரமிக்க வைப்பவை.
மிக்க அன்புடன்,
ஜி. மீனாட்சி
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 พฤษภาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย