ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
4.7
วรรณกรรมคลาสสิค
அன்புள்ளம் கொண்ட நல்வோரே! பண்புள்ளம் கொண்ட பண்பாளர்களே!! உங்கள் அனைவருக்கும் என் சென்னி தாழ்ந்த வணக்கம்.
தமிழ் இலக்கியங்களுள் மிகத் தொன்மையான. சிறப்பான காப்பியம் "சீவகசிந்தாமணி"யே! இக்காப்பியம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று! இதனை இயற்றியு பெரும் புலவர் திருத்தக்கதேவர் பெருமாள்!! தமிழ்ப் புலவர்களின் பேரரசர்!!
3145 - விருத்தப் பாக்களால் அமையப் பெற்ற இப்பெருங்காப்பியம், புலவர் பெருமக்களும், பண்டிதர்களும், அறிஞர்களும் மட்டுமே உணரத்தக்கதாக அமைந்துள்ளது. எனவே இக்காப்பியத்தின் பெருமையையும். சிறப்பம்சம்ததையும் பாமரமக்களும், எழுதப்படிக்கத் தெரிந்த மிக எளிய அன்பர்களும் உணர வேண்டும் என்பதே என் நோக்கம். தொடர்கதையாகப் படிக்க விரும்பும் வாசகர்களுக்கு ஏற்ற கதையம்சத்துடனும், சின்னத் திரைக்கு ஏற்றாற் போலவும், வெண்திரை ஓவியமாக்கத் தகுந்தாற் போலவும், புதியதொரு உத்தியைக் கையாண்டு, “இராசமாதேவி” என்னும் தலைப்பில், காதல்-வீரம், சதி - சூழ்ச்சி. ஆடல் பாடல்கள் நிறைந்த, காண்போர் உற்சாகமடையத் தொடர்கதையாக நாடகத் திரைக்ககதை வசனமாக அளிக்கிறேன்.
மேலும் இக்கதை நாடக வடிவில் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர். எனக்குத் தமிழ் கற்பித்த, என் ஆசிரியப் பெருமகனார், கவிராஜபண்டிதர். நா. கனகராஜ ஐயர் அவர்களே! அவர்களை மனத்தால் நினைந்தே, அவர்களை வணங்கிய பின்னரே. இக்கதையை உருவக்கத் தொடங்கினேன்.
வாசகப் பெருமக்களே! உங்களின் நல்லாதரவே எனக்கு மூலபலம்.
நன்றி!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 สิงหาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย